Category: கட்டுரைகள்

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

ஆலோசனைகள், கட்டுரைகள், ஜோதிடம்
ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும் ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

ஆலோசனைகள், கட்டுரைகள்
சந்திர பலம் உள்ள நாட்கள்🌼🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம்

என்ன செய்யும் சூரியதோஷம்?

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், ஆலோசனைகள், கட்டுரைகள், சற்றுமுன், ஜோதிடம்
என்ன செய்யும் சூரியதோஷம்? H.ஸ்ரீகிருஷ்ணர்எந்த ஜாதகமாக இருந்தாலும் லக்ன பாவத்திற்கு காரகம் வகிப்பவர் சூரியன். அது மட்டுமல்ல அதிகாரிகள், நிர்வாகிகள், ஊழியர்கள் இவர்களுக்கு அதிதேவதையும் சூரியனே. மேலும் ஜாதகரின் அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளவும் சூரியனே சூத்திரதாரி. அதனால்தான் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.ஜீவன் என்று அழைக்கப்படும் உயிருக்கும். எலும்புக்கும், வலது கண்களுக்கும் பொறுப்பு வகிக்கக் கூடியவர். தலைக்கும் காரகம், தலைமுடிக்கும் காரம் வகிப்பவர். அறிவாற்றல், செல்வாக்கு, கௌரவம், வீரம், விவேகம், என்று நீளமான பட்டியலே சூரியனுக்கு உண்டு.ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் இங்கே சொல்லிய அனைத்து நிலைகளிலும் ஜாகதர் சிறப்புற்று திகழ்வார். அதுவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் நன்நடத்தை, கற்பு நெறியில் சிறந்து விளங்குவார் என்பது சாஸ்த்திர சம்மதம
ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்

ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்

கட்டுரைகள், ஜோதிடம்
தமிழ் மாதத்தின் பெயர்கள், நட்சத்திரம், வருடம் முதலானவற்றின் தமிழ்ப் பெயர்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.தமிழ் மாதம் பெயர்கள்01. சித்திரை (மேஷம்) 02. வைகாசி (ரிஷபம்) 03. ஆனி (மிதுனம்) 04. ஆடி (கர்க்கடகம்)05. ஆவணி (சிங்கம்) 06. புரட்டாசி (கன்னி) 07. ஐப்பசி (துலாம்) 08. கார்த்திகை (விருச்சிகம்)09. மார்கழி (தனு) 10. தை (மகரம்) 11. மாசி (கும்பம்) 12. பங்குனி (மீனம்)தமிழ் நட்சத்திரம் பெயர்கள்01. அச்சுவினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம்09. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம்13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம்17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்25. பூரட்டாதி

சந்திராஷ்டம விளக்கம்

கட்டுரைகள்
சந்திராஷ்டமம் விளக்கம் சந்திராஷ்டம கணிதம் சந்திராஷ்ட நட்சத்திரங்கள் (17ம் நட்சத்திரம்) மற்றும் இராசிகள் மன்மத(2015-16) வருட சந்திராஷ்டம தினங்கள் Manmatha Varusha Chandrashtama Dinam துன்முகி (2016-17)வருட சந்திராஷ்டம தினங்கள் Dunmugi Varusha Chandrashtama Dinam சந்திராஷ்டம விளக்கம்: சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம் பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும் சந்திரன் பூமியை 27.322 நாட்களில் வலம் வரும் சுழற்சி காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் கடக்கும். சந்திரன் சஞ்சரிக்கும் மண்டலத்தில் இருந்து பின்புறத்தில் எட்டாம் இராசி மண்டலத்தில் பிறந்தவர்களுக்கு தொல்லைதரும் காலமாகும். சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த இராசியான “ஜென்ம ராசிக்கு” எட்டாம் இராசி (210 பாகை முதல் 240 பாகை கோண அளவு) மண்டலத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமான இரண்டே கால் நாட்களாகு

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் !

கட்டுரைகள்
ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும்,  லக்கினத்தில் அமர்ந்தால் 100  சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் .  கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார். இந்த  அமைப்பில் இரு  கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100  சதவிகித நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன : ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100  சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.    ரிஷப லக்கினம் ,

திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

கட்டுரைகள்
திருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் : 1) ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது ல

யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?

கட்டுரைகள்
கேள்வி :   அய்யா எனக்கு யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ?   பதில் :    அன்பரே தங்களது ஜாதக அமைப்பில் குடும்பம்,பூர்வபுண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகம் வலிமை பெற்று இருப்பின் தங்களின் கேள்விக்கு உண்டான பதில் நிச்சயம் உண்டு, மேலும் தங்களது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடனே உள்ளது, இருப்பினும் தாங்கள் பொருத்தம் பார்க்க அனுப்பிய பெண்ணின் ஜாதகத்தில் இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது, அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை பற்றி கிழ்கண்ட வரிகளில்  தெளிவு படுத்துகிறோம், அதன் பிறகு தங்களின் முடிவை நிர்ணயம் செய்யுங்கள். http://jothidadeepam.blogspot.in/2015/03/blog-post.html  

2015 ஆன்மிகக் குறிப்புகள்

கட்டுரைகள்
2015 –ம் வருட ஆன்மீகக் குறிப்புகள் தமிழ் தேதி ஆங்கில தேதி கிழமை விசேஷங்கள்   மார்கழி ஜனவரி       17 1 வியாழன் வைகுண்ட ஏகாதசி, கிருத்திகை   18 2 வெள்ளி சுக்ல பட்ச பிரதோஷம்   20 4 ஞாயிறு பௌர்ணமி விரதம் – பூஜை, நடராஜர் அபிஷேகம், சடையனார் குருபூஜை   21 5 திங்கள் ஆருத்ரா தரிசனம்   22 6 செவ்வாய் பௌஷ பகுள பிரதமை   24 8 வியாழன் சங்கடஹர சதுர்த்தி   25 9 வெள்ளி சதுர்த்தி விரதம்   26 10 சனி திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை   27 11 ஞாயிறு கிருஷ்ண பட்ச சஷ்டி, கூடார வல்லி, இயற்பகையார் குரு பூஜை   30 14 புதன் போகிப்பண்டிகை, மானக்கஞ்சாரர் குரு பூஜை   தை 1 15 வியாழன் உத்ராயண புண்ய காலம், பொங்கல் பண்டிகை, கரி நாள்   2 16 வெள்ளி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள், கிருஷ்ண பட்ச ஏகாதசி   3 17 சனி காணும் பொங்கல், கனு, கரி நாள்   4 18 ஞாயிறு கிருஷ்ண பட்ச பிரதோஷம், ம

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!

கட்டுரைகள்
சில பொதுவான குறிப்புகள்: விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்) பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல. லட்சுமிக்குத் தும்பை கூடாது. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம். சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும். ஒரு முறை இறை