Thursday, July 20Dhinasari

மாத ராசி பலன்கள்

மீனம்

மாத ராசி பலன்கள்
மீன ராசி : பூரட்டாதி - 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... " புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ராசிக்கு இரண்டில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். ராசியில் சூரியன் புதனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பி

கும்பம்

மாத ராசி பலன்கள்
கும்ப ராசி : அவிட்டம்-  3, 4 ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி- 1,2,3 ம் பாதங்கள் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய கும்ப ராசியினரே, இந்த காலகட்டத்தில் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். ராசிக்கு மூன்றில் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  அவர்களால்  நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறு

மகரம்

மாத ராசி பலன்கள்
மகர ராசி : உத்திராடம்- 2, 3, 4 ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்- 1,2 ம் பாதங்கள் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் ஏதேனும் வீண் கவலைகள் ஏற்படலாம். காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். ராசிக்கு 3ல் சூரிய சேர்க்கை பெற்ற புதன் சஞ்சாரம் இருப்பதால் உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது.   உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன்  பேசுவது நல்லது. ராசிக்கு 4ல் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதால் உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.   தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்க

தனுசு

மாத ராசி பலன்கள்
தனுசு ராசி : மூலம், பூராடம், உத்திராடம்- 1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...   தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய தனுசு ராசியினரே இந்த காலகட்டத்தில் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். சூரியன், புதனுடன் சேர்ந்து ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்வதால் பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வே

விருச்சிகம்

மாத ராசி பலன்கள்
விருச்சிக ராசி : விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...   மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த காலகட்டத்தில் காரியதடை தாமதம் நீங்கும்.  வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் சுக்கிரனுடன்  சேர்ந்து இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண்கவலை விலகும். ராசிக்கு 5ல் புதன், சூரியன் சஞ்சாரம் இருப்பதால் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது.  வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார

துலாம்

மாத ராசி பலன்கள்
துலா ராசி : சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம்-1, 2,3 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... " அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய துலாராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். ராசிக்கு 7ல் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். ராசிக்கு 7ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொற

கன்னி

மாத ராசி பலன்கள்
கன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ராசியாதிபதி புதன் சூரியனுடன் சேர்த்து ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப

சிம்மம்

மாத ராசி பலன்கள்
சிம்ம ராசி : மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...   மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்மராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரம் ராசிக்கு 8ல் மறைந்தாலும் தனாதிபதி புதனுடன் சேர்ந்து இருப்பதும் பணம் சம்பாதிக்கும்  திறமையை அதிகப்படுத்தும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க ப

கடகம்

மாத ராசி பலன்கள்
கடக ராசி : புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...   உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய கடக ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். ராசிக்கு 9ல் தனாதிபதி சூரியனும், தைரிய விரையாதிபதி புதனும் சஞ்சாரம் செய்வதால் நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முட

மிதுனம்

மாத ராசி பலன்கள்
மிதுன ராசி : மிருகசீரிஷம் மூன்றாம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்-3ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...   சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மிதுன ராசியினரே நீங்கள் தந்திரசாலி. இந்த காலகட்டத்தில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். ராசிக்கு 10ல் தைரியாதிபதி சூரியன், ராசிநாதன் புதன் சஞ்சாரம் செய்வதால் உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் 11ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் மற்றும் செவ்வாயால் பொருள்  வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.   தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோ