Tuesday, July 25Dhinasari

சினி நியூஸ்

ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

அரசியல், சற்றுமுன், சினி நியூஸ், சென்னை
சென்னை: நடிகர் கமல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதை அடுத்து ஆளும் அரசில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் பொய்ப் புகார் கூறுவதாகவும், தைரியமிருந்தால் நிரூபிக்கும்படியும் அமைச்சர்கள் சிலர் பேட்டி அளித்தனர். இதை அடுத்து, ஊழல் புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என்று கமல் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை : வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற
பாஜக.,வில் இருப்பதால் என் பெண்ணை குறிவைத்து தாக்குகிறார்கள்!

பாஜக.,வில் இருப்பதால் என் பெண்ணை குறிவைத்து தாக்குகிறார்கள்!

சினி நியூஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறாக பேசிய காயத்ரி ரகுராமின் பேச்சிற்கு, அவரின் தாய் கிரிஜா மன்னிப்பு கேட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், நடிகை ஓவியாவை ‘சேரி பிஹேவியர்’ என கமெண்ட் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். விடுதலை சிறுத்தை திருமாவளவனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் போலீசாரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இதுபற்றி ஒரு தொலைக்காட்சியில் பேசிய காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா “என் மகள் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண் என்றும் பார
பாவனா வழக்கில் ‘பலாத்கார’ பிரிவுகளில் திலீப் கைது; ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்குவதாக மம்முட்டி அறிவிப்பு!

பாவனா வழக்கில் ‘பலாத்கார’ பிரிவுகளில் திலீப் கைது; ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்குவதாக மம்முட்டி அறிவிப்பு!

இந்தியா, சினி நியூஸ்
திருவனந்தபுரம்: நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் இருந்து நீக்குவதாக மம்முட்டி தெரிவித்தார். திலீப் மீது ‘பாலியல் பலாத்கார’ குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிக்கல் நீடிக்கிறது. நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தியது. காரில் வைத்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்தது. ஓரிரு நாளில் குற்றச்செயலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனைக் குறித்தும், அவனது கூட்டாளிகள் குறித்தும் போலீஸாரிடம் தெரிவித்தான். இதை அடுத்து பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் ஜெஸி கேரக்டரில் த்ரிஷா

மீண்டும் ஜெஸி கேரக்டரில் த்ரிஷா

சினி நியூஸ், சினிமா
த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத கேரக்டர் என்றால் அது ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தின் ஜெஸி கேரக்டர்தான். இதேபோன்ற கேரக்டரில் மீண்டும் நடிக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த த்ரிஷாவுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே போன்ற கேரக்டர் கிடைத்துள்ளது. நிவின்பாலி நடிக்கும் மலையாள படமான ஹே ஜூட்’ என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கேரள கிறிஸ்துவ பெண்ணாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விடிடி படம் போலவே ரொமான்ஸ் மற்றும் உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருப்பதால் இந்த படத்தில் தன்னுடைய நடிப்புத்திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மனநலன் பாதித்தவர் போல் கோயிலில் இருந்த ‘காதல்’ நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு!

மனநலன் பாதித்தவர் போல் கோயிலில் இருந்த ‘காதல்’ நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு!

சினி நியூஸ், சினிமா
'விருச்சக காந்த்' எனும் நடிகருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நடிகர் அபி சரவணன். கடந்த ஒரு வாரமாக ‘காதல்’ படத்தில் நடித்த 'விருச்சககாந்த்' சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார் என்றும், அவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த 'வேகத்தடை ' குறும்பட நிகழ்ச்சித் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன், தன்னுடன் நடிகர் 'விருச்சககாந்த்'தையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தார். நேற்றும் 'உறுதிகொள்' ஆடியோ விழாவில் 'விருச்சககாந்த்'துக்கு ஒரு காசோலையை அளித்தார். இதுகுறித்து கருத்து கூறிய அபி சரவணன், முதலில் இதற்கு காரணமான சாய் தீனா, மோகன் ஆகியோருக்கு நன்றி. என் மனதை ஒரு வாரமாக உறுத்திக் கொண்டிருந்த செய்தி, கோயிலில் பிச்சை எடுத்த நடிகர் 'விருச்சககாந்
கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

சற்றுமுன், சினி நியூஸ், தமிழகம்
ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.
சிங்கிள் ‘ஏ’ சொதப்பிச்சு; ட்ரிபிள் ‘ஏ’ குப்புறத் தள்ளிடுச்சி: புலம்பும் இயக்குனர்

சிங்கிள் ‘ஏ’ சொதப்பிச்சு; ட்ரிபிள் ‘ஏ’ குப்புறத் தள்ளிடுச்சி: புலம்பும் இயக்குனர்

கிசுகிசு, சினி நியூஸ்
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் சர்ச்சை கிளப்பினாலும், ‘சி’ சென்டர், ‘அடல்ட்ஸ் ஒன்லி’ என்ற பிராண்டிங் காரணமாக அப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ் முதல் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் வரை பலருக்கும் வேறு வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனால், இப்போது சிம்புவை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம், பெரும் பின்னடவைக் கொடுத்திருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகான சிம்பு படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் சென்ற சிம்பு ரசிகர்களுக்கே படம் கடும் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனோ புலம்புகிறார் இப்படி … ‘நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதி ரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்
நாகேஷ் திரையரங்கம்: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

நாகேஷ் திரையரங்கம்: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

உள்ளூர் செய்திகள், சினி நியூஸ், சென்னை
நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடை கேட்டு மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார். மேலும் ஆனந்த்பாபு இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..
கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2010ம் ஆண்டில் ’மனசார’ என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனால் 2 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு 2013ம் ஆண்டில் இயக்குநர் பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவர் தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, ஈட்டி, காஸ்மோரா,மருது,பெங்களூர் நாட்கள், மாவீரன் கிட்டு, சங்கிலிபுங்கிலி கதவ தொற, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது கையில் வேறு எந்த படமும் கைவசம் இல்லை. இதனால் இவரது பெற்றோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஸ்ரீ திவ்யா பிரபல டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாக தக
விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

சினி நியூஸ்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவாவும், காதலித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை நினைத்து உருகி உருகி ஒரு திருமண பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம். இந்த பாடல் அவர் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெறுகிறது. என்றாலும் இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நயனை மனதில் வைத்து எழுதியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்று சமீபத்தில் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் ‘தற்போதைய நிலையில் எனது முழு கவனம் எனது பணியில் மட்டுமே உள்ளது’ என்று விக்னேஷ்சிவன் பதிலளித்துள்ளார்.