Tuesday, July 25Dhinasari

விமர்சனம்

காற்று வெளியிடை: விமர்சனம்

காற்று வெளியிடை: விமர்சனம்

சினிமா, விமர்சனம்
தமிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன ? ... ஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி  எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின்  காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார்
இருமுகன்: விமர்சனம்

இருமுகன்: விமர்சனம்

சினிமா, விமர்சனம்
ஹிட் கொடுத்த இயக்குனர்  ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் ... சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட   கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும்  களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும்  சொல்வதே இருமுகன் ... விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என

இறுதிச்சுற்று – IRUTHI SUTRU – ஜெயிக்கும் …

விமர்சனம்
அலைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர்மாதவன். ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறதுஇறுதிச்சுற்று... தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர்சுதா கோங்குரா... மாதவன்அழகாக இர

ரஜினிமுருகன் – திரை விமர்சனம்

விமர்சனம்
பல மாசங்களுக்கு பிறகு வியாழன் (14.01.2016) அன்று இரவு முதல் நாள் காட்சி இந்த படத்தை என் இனிய நண்பர்கள் அன்பின் அழைப்பினால் காணப்பெற்றேன் .. மதுரை புகழ் பாடும் பாடலுடன் டைட்டில் ... முதல் காட்சி .. பாய்ந்து வரும் லாரி மற்றும் காருடன் பாலத்தின் நடுவில் நின்று கொண்டு ...ஆட்களை ஏற்றி கொல்ல பணம் அளிக்கும் ஏழரை மூக்கனாக வில்லனாக மிரட்டும் சமுத்திரக்கனி!! வீட்டை விற்று எல்லா புள்ளைகளுக்கு சொத்தை குடுக்க துடிக்கும் தாத்தாவாக அயங்க்காளை...ராஜ்கிரண் ... இவரின் பேரன் சிவகார்த்திகேயன் ... ரஜினி முருகன் .. அவரின் ஒரே வேலை தாதாவுக்கு மூணு வேலை சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது .. அப்பறம் பொண்ணுங்களை சுற்றுவது.. அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பணத்தை நலசங்க விழாவிற்கு மொய் வைத்து பெயர் வாங்கி விட்டு நண்பன் சூரியுடன் டான்ஸ் ஆடுவது சூரி ..எப்போதும் போல ஆங்கில அறிவு குறைவான (அதையே எல்லா படத்திலும் வைத்தி
தாரை தப்பட்டை – விமர்சனம்

தாரை தப்பட்டை – விமர்சனம்

விமர்சனம்
நடிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர்பாலா. அவருடைய படங்கள் ஒரே டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பார்க்கத் தூண்டி விடும் . இசைஞானியின்1000மாவது படம் என்பது படத்திற்கு மற்றுமொறு மைல்கல்...தஞ்சாவூரில்தாரை தப்பட்டைகுழு வைத்து நடத்தி வரும் சன்னாசி (சசிகுமார்) , அவரை தீவிரமாக ( துணிக்கடையில் என் ப்ரா சைஸ் சொல்லு மாமா என்று கேட்குமளவுக்கு ) காதலிக்கும் அந்த குழுவின் முக்கிய ஆட்டக்காரி சூறாவளி ( வரலக்ஷ்மி ) இவர்களின் காதல் , பிரிவு , கிராமியக் கலைஞர்களின் சரிவு இவற்றை தனக்கே உரிய பட்டவர்த்தனமான ஸ்டைலில் அதே சமயம் வில்லனின் சைக்கோத்தனமான டார்ச்சர்கள் மற்றும் க்ளைமேக்ஸில் வில்லனின் சங்கை அறுக்கும் ஹீரோவின் வெறியாட்டத்துடன் படத்தை முடித்து வீட்டுக்கு போனா முதல்ல குளிக்கனும்டா சாமி என்கிற அளவுக்கு நம்மை வெறியேற்றி அனுப்பி வை

தங்கமகன் – THANGAMAGAN – தங்கா மகன் …

விமர்சனம்
ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை . ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாமல் ஒரு படத்தை புதிதாய் பார்க்கும் போது பிடித்துப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் . அதையும் தாண்டி படம் நம்மை கவராமல் போகும் போது ஒரு ஏமாற்றம் வரும் . அது தான் தங்கமகன் படம் பார்த்த பிறகு ஏற்பட்டது ... இன்கம்டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரியின் மகன் தமிழ் ( தனுஷ் ) . திடீரென அப்பா ( கே.எஸ்.ரவிகுமார் ) தற்கொலை செய்து கொள்ள அவர் மேல் விழுந்த களங்கத்தை துடைத்து குடும்பத்தை தமிழ் எப்படி மீட்கிறான் என்பதே தங்கமகன் ... இத்தோடு சேர்த்து மிடில் கிளாஸ் பையனாக தனுஷ் எக்கச்சக்க படங்களில் நடித்து விட்டாலும் இதுவரை அவர் நடிப்பு போரடிக்காதது ஆச்சர்யமே . நன்றாக நடிக்கும் அவர் இன்னும் வேறு வேறு களங்களில் பரிமாணிப்பது நல்லது . தண்ணியடித்து விட்டு வீட்டுக்கு வந்து அம்மா கால
த்ரிஷா இல்லனா நயன்தாரா -விமர்சனம்

த்ரிஷா இல்லனா நயன்தாரா -விமர்சனம்

விமர்சனம்
    முதல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய்  அதையே  கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா வில் நடித்து விட்டார் ஜி.வி என நினைக்கிறேன் . அடல்ட் செக்ஸ் பேஸ் மூவி தமிழுக்கு போல்டாக பட்டாலும் படத்தில் காமெடி என்கிற பெயரில் காம நெடி மட்டுமே தூக்கலாக இருக்கிறது ...   வெர்ஜின் பையன் ஜீவா ( ஜி.வி.பிரகாஷ்குமார் ) தனது சிறு வயது தோழிகள் தீபிகா ( ஆனந்தி ) , அதிதி ( மனிஷா யாதவ் ) இருவரையும் லவ் பண்ணி கடைசி வரை கன்னி கழியாமல் இருந்து பல்பு வாங்குவதே கதை . வழக்கமான காதல் தோல்வி ஹீரோ புலம்பலை செக்ஸ் , டபுள் மீனிங் ஜோக்குகளை சேர்த்து அடுத்த கியருக்கு தாவியிருக்கிறார்கள் ...   ஆரம்ப காலங்களில் தனுஷை இமிடேட் செய்தது  இருக்கிறது ஜி.வி.யின் தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜ் . முதல் படத்திற்கு இந்த பட நடிப்பு தேவலாம் என்றாலும் இன்னும் லாட்ஸ் டு கோ . எப்பவுமே ம

சங்கராபரணம் விமர்சனம்

விமர்சனம்
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'சங்கராபரணம்'.இது இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும் செறிவும் இருந்துள்ளது தான் படத்தின்சிறப்பு. 'சங்கராபரணம்' சங்கர சாஸ்திரிகள். ஒரு சங்கீத மாமேதை. நாதம் அவர் நாவில் குடியிருக்கும் சங்கீதம் சாரீரத்தில் கொலுவிருக்கும். தன் வித்தை மீது அவருக்கு கர்வமுண்டு இசையே வாழ்க்கை என்பதால் குடும்பம் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு மகள் உண்டு பெயர் சாரதா. கௌரவமும் பெருமிதமும் கொண்ட அவர், வெளியூருக்குக் கச்சேரிக்கு போகிறார். அங்கு அவரைப் பார்க்க துளசிஎன்பவள்  வருகிறாள். அவளுக்கு அவருடைய சங்கீதம் மீது ஈர்ப்பு ,காதல் ,மோகம் மதிப்பு எல்லாம் உண்டு.நடனம் அவளது தனிச்சிறப்பு.அவர் பாடும் போதெல்லாம் அவள் அதைக்கேட்டு ஆடுவாள்.  சங்கர சா