Tuesday, July 25Dhinasari

இந்தியா

தேசிய செய்திகள்

அப்துல் கலாம் இருந்த வீட்டில் குடியேறுகிறார் பிரணாப் முகர்ஜி

அப்துல் கலாம் இருந்த வீட்டில் குடியேறுகிறார் பிரணாப் முகர்ஜி

இந்தியா
புது தில்லி: புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க் கிழமை நாளை பதவி ஏற்கவுள்ளார். எனவே குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறி பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார். அவர் தில்லி ராஜாஜி மார்க் பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10ஆம் எண் கொண்ட அரசு பங்களாவில் குடியேறுகிறார். 11,776 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா தற்போது வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பங்களாவின் முன்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி புத்தக பிரியர் என்பதால், அதிக இட வசதியுடன் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்த பங்களாவில் குடியேறி வசித்து வந்தார். 2015ஆம் ஆண்டு மரணம் அடையும் வரை அவர் அங்குதான் தங்கியிருந்தார். பின்பு இந்த பங்களா மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒத
மோடியின் ஒத்துழைப்பு; மரியாதையான நடத்தையுடன் விடைபெறுகிறேன்: பிரிவுபசார விழாவில் பிரணாப் உருக்கம்

மோடியின் ஒத்துழைப்பு; மரியாதையான நடத்தையுடன் விடைபெறுகிறேன்: பிரிவுபசார விழாவில் பிரணாப் உருக்கம்

இந்தியா, சற்றுமுன்
புது தில்லி: மோடியின் ஒத்துழைப்பு, மரியாதையான நடத்தை, வண்ண வண்ண வானவில் நினைவுகளுடன் விடைபெறுகிறேன் என்று பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேசினார். நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளை (25 ஆம் தேதி) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். இதையொட்டி, பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேச
இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

இந்தியா, சற்றுமுன், தொழில்நுட்பம்
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோவின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. 1984 முதல் 1994 வரை இஸ்ரோவின் தலைவராக ராமச்சந்திர ராவ் இருந்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ’ஆர்யபட்டா’ ஏவப்பட முக்கியப் பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய புகழுக்குக் காரணமாக அமைந்த சந்த்ராயன் 1, மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்துக்கு பின்னணியில் அமைந்த கோள்களுக்கு இடையிலான செயற்கைக்கோள் ஏவுதலின் அடிப்படையை அன்றே விதைத்தவர். சூரியனை நோக்கிய பயணத்தில் பூமிக்கு அடுத்து உள்ள சுக்கிரனுக்கு இந்தியா வரும் காலத்தில் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்றவர்.
இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

இந்தியா, சற்றுமுன்
கோழிக்கோடு: இஸ்லாம் மதத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று, புகழ்பெற்றா மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோடில் வசித்து வருகிறார் பிரபல நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ராமன் உன்னி (60). இவர் தம் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக, கேரள சாகித்ய அகடமி, வயலார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இவரது முதல் நாவலான ‘சுஃபி பறஞ்ச கத’ திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. அதில் ஓர் இஸ்லாமிய இளைஞனுக்கு இந்துப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பேசியிருப்பார். இந்நிலையில், அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவருடைய கோழிக்கோடு வீட்டுக்கு ஆறு தினங்களுக்கு முன்னர் வந்த அந்தக் கடி
தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

இந்தியா, புகார் பெட்டி
ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு தில்லி நீதிமன்றம் விடுதலை ! 17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல் போய் , டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள் ! மைனர் பெண்ணைக் கூட்டிச் சென்ற முஸ்லீம் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கு செல்லாது ! பருவம் அடைந்தவுடன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது ! இந்தியச் சட்டமா ? இஸ்லாமியச் சட்டமா என்ற சர்ச்சைக்கு முடிவாகத் தீர்ப்பு வழங்க பாராளுமன்றம் தெளிவான சட்டத்தைக் கொடுக்கவில்லை ! என்ற அடிப்படைகளில் லவ் ஜிகாத் நாயகன் விடுவிக்கப்பட்டான் ! இஸ்லாத்திற்கு மதம் மாறினால் பெண்ணுக்கு திருமண வயது 18 என்ற இந்தியச் சட்டம் செல்லுuடியாகாதாம் ! மதம் மாறியபின் தானே இஸ்லாமியச் சட்டம் பொருந்தும் ? ஒரு மைனர் மதம் மாறியது எந்த அடிப்படையில் என்ற கே
எங்கும் நிறைந்த அநீதிகளால் நீதிக்கு அச்சுறுத்தல்

எங்கும் நிறைந்த அநீதிகளால் நீதிக்கு அச்சுறுத்தல்

இந்தியா, தலையங்கம்
  எங்கும் நிறைந்துள்ள அநீதிகளால், நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனும் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை டிவிட் செய்து, ரூபா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி, லஞ்சம் பெற்றுக் கொண்டு சலுகைகளை செய்து கொடுத்துள்ளார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் தெரிவித்தார். இதை அடுத்து, அவர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். அதே நேரம் சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் தெரிவித்த சிறைக் கைதிகளை, கொடூரமாகத் தாக்கி போலீஸார் தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர். இது விசாரணை அளவில் இருக்கிறது. மேலும் சிறையில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விசாரணைக் குழுவோ, பேருக்கு மந்தமாக வேலையைச் செய்த
தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

இந்தியா, சற்றுமுன்
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால், கார்வார் மாவட்டதில் உள்ள ஆறுகளிலும், பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது மேலும், மழையால், சாலஹல்லி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி மல்லிகார்ச்சுனா என்பவர் உயிரிழந்தார் இதேபோல், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள பத்ரா ஆற்றில், தரைப் பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுகிறது. இதனால், அந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

இந்தியா, சற்றுமுன்
புதுதில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக சார்பில் தேஜகூ., வேட்பாளராகப் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக.,வின் ராம்நாத் கோவிந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸின் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ர
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

இந்தியா, உள்ளூர் செய்திகள், கோவை
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.  இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர் அவருக்கு ஒத்துழைததாகக் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது. அயல்நாடுகளால் ஈர்க்கப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தானாக முன்வந்து, மாநில அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை முளையிலேயேக் கிள்ளி எறிய வேண்டும். என் கருத்துப்படி, இவர்களது நடவடிக்கைகள் புதிதல்ல; வைத்திருக்கும் பெயர் மட்டும் தான் புதிது. அந்நிய சக்திகளால் கவரப்பட்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எண்பதுகளிலேயே துவங்கிவிட்டன.  திரு ஜனா.
ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

இந்தியா, உலகம், சற்றுமுன்
ஹிந்து தேசியவாத சிந்தனை இந்தியாவில் அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, போருக்கு வழிவகை செய்கிறது என சீன ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச் சந்திப்பான டோக்லாம்- டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி வருகிறது சீனா. அவ்வாறு வாபஸ் பெறா விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியாவோ, ராணுவத்தை திரும்பப் பெற முடியாது, அமைதியான ம