Tuesday, July 25Dhinasari

சற்றுமுன்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’  பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

உரத்த சிந்தனை, சற்றுமுன், தமிழகம்
சென்னை: அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரம் ஒருமுறை, திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில், அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல் பாடலாம் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதில் சில விதிவிலக்குகளையும் அறிவித்துள்ளது. இந்தப்  பாடல் வங்க மொழியிலும், சம்ஸ்க்ருதம் கலந்த நடையிலும் இருப்பதால், சமஸ்கிருதம், வங்க மொழியில் பாட விருப்பம் இல்லாதவர்கள் இந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை அல்லது தமிழில் மொழிபெயர்த்துப் பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும். பாடலைப் பாட விருப்பம் இல்லாதவர்கள் மீது எந்தவித அழுத்தமும் தரக்கூடாது. வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று கூறி அழுத்தம் தந்தால், அது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கச் செய
“நீங்கள் எல்லாருமே திருடாள்!”டர்களைப் பார்த்து பெரியவா.

“நீங்கள் எல்லாருமே திருடாள்!”டர்களைப் பார்த்து பெரியவா.

சற்றுமுன்
"நீங்கள் எல்லாருமே திருடாள்!"-சீ-டர்களைப் பார்த்து பெரியவா. (சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா) "சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" என்ற தொடரில்- ;ரா.கணபதி. எழுதியது. ​ தட்டச்சு;வரகூரான் நாராயணன். 2013 போஸ்ட்-மறுபதிவு. குருநாதன் முகத்தில் குறும்பு நகை.விளையாட்டுப் பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே இருந்தவரிடம் கேட்கிறார்; "இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?" "ஸ்ரீகண்டன்" "இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார் அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்." ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின் பெரியவாள் சொல்கிறார். "திருக்கண்டன்-னு சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்." அடியாருக்குப் புரிந்து விடுகிறது.பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். 'ஸ்
மோடியின் ஒத்துழைப்பு; மரியாதையான நடத்தையுடன் விடைபெறுகிறேன்: பிரிவுபசார விழாவில் பிரணாப் உருக்கம்

மோடியின் ஒத்துழைப்பு; மரியாதையான நடத்தையுடன் விடைபெறுகிறேன்: பிரிவுபசார விழாவில் பிரணாப் உருக்கம்

இந்தியா, சற்றுமுன்
புது தில்லி: மோடியின் ஒத்துழைப்பு, மரியாதையான நடத்தை, வண்ண வண்ண வானவில் நினைவுகளுடன் விடைபெறுகிறேன் என்று பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேசினார். நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளை (25 ஆம் தேதி) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். இதையொட்டி, பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பிரிவுபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமாகப் பேச
இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

இந்தியா, சற்றுமுன், தொழில்நுட்பம்
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோவின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. 1984 முதல் 1994 வரை இஸ்ரோவின் தலைவராக ராமச்சந்திர ராவ் இருந்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ’ஆர்யபட்டா’ ஏவப்பட முக்கியப் பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய புகழுக்குக் காரணமாக அமைந்த சந்த்ராயன் 1, மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்துக்கு பின்னணியில் அமைந்த கோள்களுக்கு இடையிலான செயற்கைக்கோள் ஏவுதலின் அடிப்படையை அன்றே விதைத்தவர். சூரியனை நோக்கிய பயணத்தில் பூமிக்கு அடுத்து உள்ள சுக்கிரனுக்கு இந்தியா வரும் காலத்தில் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்றவர்.
போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!

போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், தமிழகம், மதுரை
ராமநாதபுரம்: போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட தர்கா ஒன்று உள்ளது. இங்குள்ள தனியார் விடுதியில் சந்கேத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கே சென்று விசாரித்தனர். அப்போது, அந்த முதியவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை உல்பெண்டால் பகுதியில் இருந்து தாம் வருவதாகவும், தனது பெயர் காசிம்பாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் முதியவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, இந்திய ரூபாய் 3 ஆயிரம், பாகிஸ்தான் ரூபாய் 2500 உள்பட இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவர் மும்பை, ராஜஸ்தான் ஆகிய
இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

இந்தியா, சற்றுமுன்
கோழிக்கோடு: இஸ்லாம் மதத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று, புகழ்பெற்றா மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோடில் வசித்து வருகிறார் பிரபல நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ராமன் உன்னி (60). இவர் தம் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக, கேரள சாகித்ய அகடமி, வயலார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இவரது முதல் நாவலான ‘சுஃபி பறஞ்ச கத’ திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. அதில் ஓர் இஸ்லாமிய இளைஞனுக்கு இந்துப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பேசியிருப்பார். இந்நிலையில், அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவருடைய கோழிக்கோடு வீட்டுக்கு ஆறு தினங்களுக்கு முன்னர் வந்த அந்தக் கடி
கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?

கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?

அரசியல், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சென்னை: தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் சுமத்தினார், நடிகர் கமலஹாசன் இதுவரை இல்லாத வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும் மறுப்புரைகளும், மிரட்டல்களுமே காரணம் என்றாகிவிட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் வீட்டுக்குப் பாதுகாப்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கமல்ஹாசனிடம் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர்கள் கேட்டனர்.  அதனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணைய தள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாசன். இதை அடுத்து,  கமல்ஹாசனின் ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டினார்கள். ஆன
அரசு இணையத்தில் அமைச்சர்கள் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படவில்லையாம்

அரசு இணையத்தில் அமைச்சர்கள் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படவில்லையாம்

அரசியல், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை எனக் கூறினார். நடிகர் கமல ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் புரையோடிப் போயுள்ளதாகக் கூறினாலும் கூறினார், அவருக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் வளர்ந்து வருகிறது. கமல் ஹாசனுக்கு பதில் அளிப்பதாகக் கருதிக் கொண்டு, அமைச்சர்கள் கமலஹாசனை ஒருமையில் பேசுவதும், திட்டுவதுமாக இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கமலுக்கு பதில் தெரிவித்த அமைச்சர்கள், ஊழல் பற்றிப் பேசும் கமல்ஹாசன் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அவர் அரசியலுக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் கருத்துகளை உதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘‘இது டிஜிட்டல் யுகம்’’ என்பதால் அமைச்சர்கள் கேட
தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

இந்தியா, சற்றுமுன்
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால், கார்வார் மாவட்டதில் உள்ள ஆறுகளிலும், பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது மேலும், மழையால், சாலஹல்லி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி மல்லிகார்ச்சுனா என்பவர் உயிரிழந்தார் இதேபோல், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள பத்ரா ஆற்றில், தரைப் பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுகிறது. இதனால், அந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
விஜயபாஸ்கர் தம்பியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

விஜயபாஸ்கர் தம்பியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும். இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அமைச்