Tuesday, July 25Dhinasari

தமிழகம்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’  பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ பாட உயர் நீதிமன்றம் உத்தரவு

உரத்த சிந்தனை, சற்றுமுன், தமிழகம்
சென்னை: அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரம் ஒருமுறை, திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில், அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல் பாடலாம் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதில் சில விதிவிலக்குகளையும் அறிவித்துள்ளது. இந்தப்  பாடல் வங்க மொழியிலும், சம்ஸ்க்ருதம் கலந்த நடையிலும் இருப்பதால், சமஸ்கிருதம், வங்க மொழியில் பாட விருப்பம் இல்லாதவர்கள் இந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை அல்லது தமிழில் மொழிபெயர்த்துப் பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும். பாடலைப் பாட விருப்பம் இல்லாதவர்கள் மீது எந்தவித அழுத்தமும் தரக்கூடாது. வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று கூறி அழுத்தம் தந்தால், அது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கச் செய
போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!

போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், தமிழகம், மதுரை
ராமநாதபுரம்: போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட தர்கா ஒன்று உள்ளது. இங்குள்ள தனியார் விடுதியில் சந்கேத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கே சென்று விசாரித்தனர். அப்போது, அந்த முதியவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை உல்பெண்டால் பகுதியில் இருந்து தாம் வருவதாகவும், தனது பெயர் காசிம்பாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் முதியவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, இந்திய ரூபாய் 3 ஆயிரம், பாகிஸ்தான் ரூபாய் 2500 உள்பட இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவர் மும்பை, ராஜஸ்தான் ஆகிய
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

அரசியல், சற்றுமுன், சென்னை, தமிழகம்
  தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைவோர் வெறும் 163 பேர் தான் என்பதும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 35 பேர் மட்டும் தான் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்   தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிக
பொறியியல் கலந்தாய்வு விவரம்

பொறியியல் கலந்தாய்வு விவரம்

Featured, தமிழகம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிறவகை பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது. கலந்தாய்வு அடிப்படையிலேயே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியார்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலை. பொறியியல்
பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேசக் கூடாது: நீதிமன்றம் வாய்ப்பூட்டு

பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேசக் கூடாது: நீதிமன்றம் வாய்ப்பூட்டு

சற்றுமுன், சென்னை, தமிழகம்
சென்னை: பால் நிறுவனங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பால்வளத் துறை அமைச்சருக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகக் குற்றம்சாட்டி வந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. இந்நிலையில், பால் கலப்படம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் எதும் கலக்கப்படவில்லை என்றும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்புவதைத் தடுக்குமாறும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் ஏதுமின்றி பேசக் கூடாது என்று உத்த
ரஜினி ஒரு 420: தொடர்ந்து விமர்சிக்கும் சுப்பிரமணிய சுவாமி!

ரஜினி ஒரு 420: தொடர்ந்து விமர்சிக்கும் சுப்பிரமணிய சுவாமி!

அரசியல், சற்றுமுன், தமிழகம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு இலங்கைக்குச் சென்று தமிழக மீனவர்களை மீட்க முடியுமா என்று சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 என தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, மீண்டும் ரஜினியை தனது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க இலங்கை அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியசாமி, நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு, இலங்கைக்குச் சென்று மீனவர்களைக் காப்பாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் பதில் அளித்துள்ளனர். தனிப்பட்ட வ
நானும் இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவன்தான்: வெங்கய்ய நாயுடு

நானும் இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவன்தான்: வெங்கய்ய நாயுடு

சற்றுமுன், சென்னை, தமிழகம், வணிகம்
சென்னை: நானும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன் தான் என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. சென்னையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்கக் கருத்தரங்கம், ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், 113.26 கோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர். ஆதார் உங்களுக்கான அடையாள அட்டை தான். எனவே ஆதார் நம் உரிமை என நீங்கள் நினைக்க வேண்டும். நானும் சிறு வயதில் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் பின்னாளில் தில்லிக்குச் சென்ற பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் என அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உங்கள் தாய்மொழியில் புலமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்ட
கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

சற்றுமுன், சினி நியூஸ், தமிழகம்
ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.
எந்த தனியார் நிறுவன பாலில் கலப்படம்?: விளக்கினார் ராஜேந்திர பாலாஜி

எந்த தனியார் நிறுவன பாலில் கலப்படம்?: விளக்கினார் ராஜேந்திர பாலாஜி

சற்றுமுன், தமிழகம்
'தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன' என்று கடந்த மே மாத இறுதியில் அதிரடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. அவரது இந்த திடீர் வெடிகுண்டு, தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்களை மட்டும் கலக்கவில்லை, பொதுமக்களையும் சேர்த்தே கதிகலங்க வைத்தன. தாங்கள் பருகும் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளது என்று மாநில அமைச்சரே அறுதியிட்டுக் கூறுகினார் என்பதை எண்ணி அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. இதனிடையே தனியார் பால் நிறுவனங்கள் அளித்த புகார்களால், கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பால் மாதிரிகள், புனே இன்ஸ்டிடியூட்டில் சோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் அமைச்சர் கூறும் வகையில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று ஆய்வு அறிக்கைகள் வெளிவந்தன. இந்நிலை
செய்யது பீடி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

செய்யது பீடி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சற்றுமுன், தமிழகம்
சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது திருநெல்வேலியைத்  தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை சோதனை  மேற்கொண்டனர். நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.  சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.  முறையாக வரி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.