Thursday, July 20Dhinasari

கிசுகிசு

யூடியூபில் கசிந்த பிக்பாஸ் ஜூலியின் ரொமான்ஸ் பாடல்

யூடியூபில் கசிந்த பிக்பாஸ் ஜூலியின் ரொமான்ஸ் பாடல்

கிசுகிசு, சினிமா
ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்ற ஜூலி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தன்னை மிகைப்படுத்தி நடித்து வருவதாக அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜூலி நடித்த ரொமான்ஸ் பாடல் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தில் இளைஞர் ஒருவருடன் ஜூலி ஆடி டூயட் பாடியுள்ளார். இந்த வீடியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதுதான் வெள்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் ஜூலியின் நடிப்பை பார்க்கும்போது மிக விரைவில் அவர் சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது
சிங்கிள் ‘ஏ’ சொதப்பிச்சு; ட்ரிபிள் ‘ஏ’ குப்புறத் தள்ளிடுச்சி: புலம்பும் இயக்குனர்

சிங்கிள் ‘ஏ’ சொதப்பிச்சு; ட்ரிபிள் ‘ஏ’ குப்புறத் தள்ளிடுச்சி: புலம்பும் இயக்குனர்

கிசுகிசு, சினி நியூஸ்
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் சர்ச்சை கிளப்பினாலும், ‘சி’ சென்டர், ‘அடல்ட்ஸ் ஒன்லி’ என்ற பிராண்டிங் காரணமாக அப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ் முதல் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் வரை பலருக்கும் வேறு வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனால், இப்போது சிம்புவை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம், பெரும் பின்னடவைக் கொடுத்திருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகான சிம்பு படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் சென்ற சிம்பு ரசிகர்களுக்கே படம் கடும் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனோ புலம்புகிறார் இப்படி … ‘நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதி ரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்
கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2010ம் ஆண்டில் ’மனசார’ என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனால் 2 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு 2013ம் ஆண்டில் இயக்குநர் பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவர் தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, ஈட்டி, காஸ்மோரா,மருது,பெங்களூர் நாட்கள், மாவீரன் கிட்டு, சங்கிலிபுங்கிலி கதவ தொற, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது கையில் வேறு எந்த படமும் கைவசம் இல்லை. இதனால் இவரது பெற்றோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஸ்ரீ திவ்யா பிரபல டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாக தக
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம்: சோதனைக்கு தயார் என்கிறார் திலீப்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம்: சோதனைக்கு தயார் என்கிறார் திலீப்

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மலையாளத் திரையுலகில் பிரபலம் ஆனவரான நடிகர் திலீப்பும், அவரது மனைவி மஞ்சு வாரியாரும் பிரிவதற்கு நடிகை பாவனாதான் காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் காரணத்தால்தான், நடிகை பாவனாவை அவர் கடத்தி துன்புறுத்த ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திலீப் மறுத்து வந்தார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் திலீப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் பாவனாவைக் கடத்த சொன்னது திலீப்தான் என்ற ரீதியில் எழுதி, திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் இதனை மறுத்த திலீப், பல்சர் சுனில் தன்னை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் புதுப்பொலிவுடன் வருகிறது ’அடிமைப் பெண்’

எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் புதுப்பொலிவுடன் வருகிறது ’அடிமைப் பெண்’

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இரட்டை வேடங்களில் இணைந்து நடித்த திரைப்படம் ‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி புதுப்பொலிவுடன் வெளியாகிறது. “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையம
சவால் என வந்தால் நரகத்தையும் விலை பேசுவாள்: ‘மாம்’

சவால் என வந்தால் நரகத்தையும் விலை பேசுவாள்: ‘மாம்’

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
மாம்: திரைப்படத்தை பற்றி... ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள். தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியை தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தணை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் என பொறுமையாகக் காத்திருக்கிறாள்.  இந்த சூழலில்
ஆபாச படங்கள் அனுப்பியவரை காட்டிக் கொடுத்த நந்தினி சீரியல் நடிகை!

ஆபாச படங்கள் அனுப்பியவரை காட்டிக் கொடுத்த நந்தினி சீரியல் நடிகை!

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம். இவர் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் அவரின் முகநூல் பக்கத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர் எனக் கூறிக்கொள்ளும் அவர் தனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருவதாக கூறியுள்ளார். இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை பதிவு செய்கிறேன். இனிமையான ரசிகர்கள் பலர் எனக்கு உண்டு. அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு ஆதரவில்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவேகத்தின் இசை உரிமை: சோனி மியூசிக் பெற்றது

விவேகத்தின் இசை உரிமை: சோனி மியூசிக் பெற்றது

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
அஜீத் நடிக்கும் விவேகம் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனிருத் இசை அமைப்பது ஒரு காரணம். அஜித்தின் முந்தைய படமான ‘வேதாள’த்துக்கும் அவர் இசையமைத்திருந்தார். அதில் ‘ஆளுமா டோலுமா...’ பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்த பாடல். அதனால் அஜித்-அனிருத் இணைக்கு ‘விவேக’த்திலும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறுகையில், ‘இது அஜித்துடன் எங்களுக்கு ஆறாவது படம். முந்தைய சாதனைகளை விவேகம் முறியடிக்கும்’ என்றார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
சினிமா நடிகை ஆகிறார் ’கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் ப்ரியா பவானி!

சினிமா நடிகை ஆகிறார் ’கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் ப்ரியா பவானி!

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
சென்னை: கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் சினிமா படத்தில் நடிக்க உள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். சின்னத்திரை நடிகை ஆனாலும், பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர்தான்! ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, திடீரென திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி சீரியலில் இருந்து விலகினார். தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாகக் கூறினார் ப்ரியா. பரவாயில்லை, திருமணம் செய்து கொண்டால் என்ன, தொடர்ந்து நடிங்க என்று ரசிகர்கள் கோரிக
சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா
பெங்களூரு: சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி.   Killing boredom 😌 morning madness 😛@avantikashetty1 pic.twitter.com/YMJweoEz2T — Avantika Shetty (@avantikashetty1) May 12, 2017 கன்னடத்தில் வெளியான ரங்கீதா ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அவந்திகா ஷெட்டி. இவரை கன்னட பட அதிபர் கே.சுரேஷ் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென அவந்திகா ஷெட்டி நீக்கப் பட்டார். இது குறித்து பட அதிபர் கே.சுரேஷ் கூறியபோது, “ராஜூ கன்னடா மீடியம் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் தயாரிக்கும் புதிய படத்துக்கு நடிகர் - நடிகைகள், இயக்குனர் உள்