Thursday, July 20Dhinasari

தலையங்கம்

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

அரசியல், இந்தியா, சற்றுமுன், தலையங்கம்
புது தில்லி: அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று பின் தோற்றதும், நாட்டில் இன்று பரவலாகப் பேசப்பட்டதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்க்லாங் ஆகிய பகுதிகள் சந்திக்கும் ஒரு முனையில், சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, தனது கண்காணிப்பை பலப்படுத்த நிரந்தர கூடாரம் அமைத்துள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் இந்தியாவைச் சீண்டும் வகையில் கட்டுரைகளும் கருத்துகளும் ஆதிக்க மனப்பான்மையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பின்னணி
இன்னும் ஆறே மாதங்கள்தான்…

இன்னும் ஆறே மாதங்கள்தான்…

கட்டுரைகள், தலையங்கம்
மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்பது சசிகலாவுக்கு தெரியும். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடம் இருந்தவருக்கு இது நிச்சயமாகத் தெரியும். அதனால்தான் அவர் பொதுச்செயலர் பதவியோடு நின்றார். ஜெயலலிதா இறந்தவுடனே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கலாம்.. வழக்குத் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது என்றால், ஜெயலலிதாவின் மீதும் இதே வழக்குதானே. திடீரென்று முதல்வராகும் முடிவுக்குக் காரணம், பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் காட்சிய அதே விசுவாசத்தை சசிகலாவிடம் காட்டவில்லை. கடந்த காலங்களில் இடைக்கால முதல்வராக இருந்தபோது காணப்படாத புதுவழக்கமாக அவர் மத்திய அரசுடன் நெருங்கத் தொடங்கினார். சிக்கல் அங்கேதான் தொடங்கியது. அதிகாரத்தின் மூலம்தான் தன் வழக்குகளின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும், சொத்துகளைப் பாதுகாத்தாக வேண்டும் என்றில்லை.. அவருக்கு அனைத்து வழிகளும் தெரியும். ஆனால் பன்னீர்செல்வம் தன்னைவிட்டு விலகிச்செல்வது கட்
சசிகலாவின் முதல்வர் கனவு: வேகம் விவேகம் அல்ல

சசிகலாவின் முதல்வர் கனவு: வேகம் விவேகம் அல்ல

Featured, News, அரசியல், கட்டுரைகள், தலையங்கம்
’வேண்டுகோளை ஏற்று’ சசிகலா அதிமுக பொதுச்செயலரானது போலவே இப்போது அவர் ’முதல்வர் ஆக வேண்டும் என்ற வேண்டுகோளும்’ வைக்கப்படலாம். அவரும் அதை ஏற்கலாம். இவை நடப்பதில் தடை ஏதுமில்லை. கட்சியின் பொதுச்செயலர் ஆவதற்கும் மாநில முதல்வராவதற்கும் சிறு வேறுபாடு உள்ளது. கட்சி ஏற்றுக்கொண்டால் பொதுச்செயலர் ஆகலாம். கட்சியை தனது கட்டுப்பாட்டில் காலம் முழுவதும் வைத்திருக்கலாம். முதல்வர் ஆவதற்கு கட்சி எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி மக்கள் ஆதரவும் தேவை. பதவியேற்ற ஆறு மாதத்துக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். எம்எல்ஏ-க்கள் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு பதவி விலகி, பொதுச்செயலர் போட்டியிட இடம் ஒதுக்க தயாராக இருப்பார்கள். ஆனால் வாக்களிக்கப் போவது மக்கள். மக்கள் சசிகலாவுக்கு வாக்களிக்க மாட்டார்களா? சொந்தங்கள் உள்ள தொகுதியாக பார்த்து நின்றால் என்ன ?என்று தோன்றும். ஆனால் சசிகலா மீது, மக்களுக்கு
எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்

எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்

கட்டுரைகள், தலையங்கம்
2009-ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று- 5 ஆண்டுகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடையாது என்பதும். இந்த நிபந்தனை முன்னெப்போதையும்விட இப்போது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். தன்னெழுச்சிப் போராட்டத்தினால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மனவெழுச்சி, அவரவர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுகளை நடத்தும் ஆர்வத்தைத் தூண்டும். தூண்டியும் இருக்கிறது. அது வேண்டாம். ஏனெனில், சாலையில் மாடு நின்றால், அது எந்தப் பக்கம் திரும்புமோ என்ற அச்சத்தில் சற்று ஒதுங்கிப் போகிறவர்களே அதிகம். இந்தப் போராட்டக் களத்தில் குதித்த 99 விழுக்காட்டினருக்கும் இது பொருந்தும். மிகச் சிலரே காளையை எதிர்கொள்ளும் மனஉறுதி கொண்டவர்கள், மிகச் சிலரே அதற்கான பயிற்சி உடையவர்கள். ஜல்லிக்கட்டில் வேடிக்கைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பயிற்சி தேவை. காளை எப்படி எந்தப
கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

அடடே... அப்படியா?, அரசியல், உள்ளூர் செய்திகள், தமிழகம், தலையங்கம், திருச்சி
கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும் அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தது என்றால், கரூர் மக்கள் ஒரு பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டர் தான் அந்த பெரிய ஷாக். தமிழகத்தில் குறிப்பாக கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் மு.தம்பித்துரை, இவர் கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய இரு மக்களவை தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதாவது அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை தூக்கிய பிறகு, தம்பித்துரையோ, புதிய டெக்னிக் திட்டத்தை கைய

கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா

தலையங்கம்
பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்!  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல...; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர், இன்று கண்டனங்களைத் தெரிவிப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! கடந்த 2007 ம் ஆண்டில் சேது சமுத்திர திட்டத்திற்காக இராமர் பாலம் இடிப்பதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு முயற்சி செய்த போது தமிழகத்தில் இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.கட்சி போராட்டம் நடத்தியது. அப்போது இராமர் பாலத்தை கட்டிய ராமன் எந்த கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன் என்றெல்லாம் பேசினார். இது வடஇந்திய ஊடகங்களில் எதிரொலித்தது. இதையறிந்த அயோத்தி எம்.பி. டாக்டர் ராம்விலாஸ் வேதாந்தி அவர்கள் இராமபிரானை இழிவாக பேசிய கருணாநிதியின் நாவை  அறுத்து, தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவித்தார். இந்நில

பக்குவப்படாதவர்கள்!

தலையங்கம்
இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம் இதுதான் சந்தர்ப்பம் என்று கேள்விக் கணை தொடுத்தார்... இதில் நிருபர் தரப்பில் எந்தக் குற்றமும் இல்லை! அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்... அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே! இசையமைப்பாளர் என்ற வகையில் அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்? பரபரப்பையும் விவாதங்களையும் மு

தனி நபர் துதிபாடல் நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல!

தலையங்கம்
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிதும் வெளியாகி பரபரப்படைந்த செய்தி - பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை வைத்து வழிபடப்போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் என்பது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்காக அமைக்கப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானத்தை கவனித்து வந்த ஓம் யுவா அமைப்பின் தலைவர் ஜ்யேஷ் படேல் இது குறித்து தெரிவித்த போது, “வாழும் மனிதர் ஒருவருக்கு குஜராத்தில் கோயில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எங்கள் அமைப்பைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் இதன் கட்டுமானத்துக்காக நன்கொடைகளைச் சேகரித்தனர். இக்கோயிலில் தினமும் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். “ராஜ்கோட் தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று குஜராத் முதல்வரானது முதலே அவரை எங்கள் அமைப்பினர் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். மாநில முதல்வராகவும், தற்போது பிரதமராகவும் அவர் ஆற்றிய பணிகளால்

பீகார் அரசியல் குழப்பம்: காரணம் யார்?

தலையங்கம்
அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார். இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல் – மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் நிதிஷ் குமாருக்கும், மாஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்ததால், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்

கேஜ்ரிவால் சொன்னது போல் “பயப்படும் அளவுக்கான பெரும்பான்மை”!

தலையங்கம்
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்துப் பார்க்கும்போது, “நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்கு தில்லிவாசிகள் கொடுத்துவிட்டனர்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது உண்மையாகவே கருத இடம் உண்டு. ஜனநாயகம் என்பது, நம் நாட்டில் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொடுக்கும் விதத்தில் அமைந்து விடுவதுண்டு. 70க்கு 67 இடங்களில் வெற்றி என்பது எதிர்க்கட்சிக்கே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காத கண்மூடித்தனமான முழுப் பெருப்பான்மை என்பது உண்மை. இவ்வாறு எதிர்க்கட்சியினருக்கே இடமளிக்காத பெரும்பான்மையைப் பெற்ற மாநிலங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற்றதில்லை. அங்கே ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்திருப்பதையே பார்த்திருக்கிறோம். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிக்கும் ஆளும்