Tuesday, July 25Dhinasari

கல்வி

நீட்: 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

நீட்: 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

கல்வி, சற்றுமுன், தமிழகம்
n சென்னை: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்து வந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை தகவல் அளித்திருந்தது. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 சதவீத இடம் வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர். இந்நிலையில், 85 சதவீத மாநிலப் பாடத்திற்கும் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும், வரும் 27 ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 7 ஆம் தேதி வ
நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம்

நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம்

இந்தியா, கல்வி, சற்றுமுன்
நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட்  மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதுவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் இருந்தது. இந்தத் தேர்வு குறித்து பலத்த சர்ச்சை எற்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்  தமிழகத்தில் மாணவர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை நீதிமன்ற கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக
கல்வித் துறை சீர்திருத்தங்களில் வேகம் தேவை: ராமதாஸ்

கல்வித் துறை சீர்திருத்தங்களில் வேகம் தேவை: ராமதாஸ்

கல்வி, தமிழகம்
சென்னை: கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் நல்லத் தொடக்கம் என்றும், செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதால், அவற்றில் வேகம் தேவை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக பாடத்திட்டங்கள், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் சீரழிவுகள் வெறும் புண்ணாக மட்டும் இல்லாமல் புரையோடிப் போயிருப்பதால், அதை சரி செய்ய இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேல்நிலை வகுப்புகளான பதினோறாம் வகுப்புக்கும், பனிரெண்
சிபிஎஸ்இ பிளஸ்-2 முடிவுகள் இன்று வெளியாகாது!

சிபிஎஸ்இ பிளஸ்-2 முடிவுகள் இன்று வெளியாகாது!

கல்வி, சற்றுமுன்
புதுதில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவுகள் இன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்க் பிரச்னை காரணமாக இன்று வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண் வழங்கவும் நேற்று உத்தரவிட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ இயக்குனர் சதுர்வேதி, பிற்பகலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரை சந்தித்து பேச உள்ளார். இதனால் எதிர்பார்த்தபடி இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியா
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத் திட்டங்கள்: செங்கோட்டையன்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத் திட்டங்கள்: செங்கோட்டையன்

கல்வி, சற்றுமுன்
​ சிபிஎஸ்இக்கு இணையாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 3ஆண்டுகளுக்குள் மாற்றப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் கூறியவை... முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம் சேர்க்கப்படும். *பாட திட்டம் மாற்றம், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது *1, 6, 9, 11 வகுப்புகளுக்கு 2018-19 கல்வியாண்டில் பாடதிட்டம் மாற்றப்படும் *2,7,10,12ம் வகுப்புகளுக்கு2019ல் பாடத்திட்டம் மாற்றப்படும் *3,4,5,8 ம் வகுப்பு பாடத்திட்டங்கள் 2020ல் மாற்றப்படும் *புதிய பாடத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஐ.டி., கல்வி கற்றுத்தரப்படும் *பிளஸ், பிளஸ்2வில் தேர்ச்சி பெற பாடவாரியாக 35 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் *பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தால், பிளஸ்2வில் அந்த தே
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

கல்வி, தமிழகம்
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றது. கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 94,167 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போலவே, பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாமல், கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது,. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது. 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது. 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களு
இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கல்வி, சற்றுமுன், தமிழகம்
சென்னை: தமிழகம், புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஏற்கெனவே அறிவித்தபடி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல
இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

கல்வி, சற்றுமுன், சென்னை, தமிழகம்
சென்னை: இனி வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று இது குறித்துக் கூறினார். அவர் பேசியபோது, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன. நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்!

கல்வி, சற்றுமுன், தமிழகம்
சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ- மாணவியர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்னதாகவே தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இது குறித்து இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:- 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும்
ப்ளஸ் 2 :  விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டண விவரங்கள்

ப்ளஸ் 2 : விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டண விவரங்கள்

கல்வி, சற்றுமுன், தமிழகம்
  மேல்நிலை அரசுப்பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205. பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்கள