spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsசெய்திச் சுருக்கம்:

செய்திச் சுருக்கம்:

- Advertisement -

1] வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது

2] ஜெயலலிதாவிற்கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்: வரம்பு மீறி தமிழகத்தை சீண்டும் கன்னடர்கள்- கன்னடர்களே கர்நாடக முதல்வர் சித்தராமையா எங்களாலும் கேவலபடுத்தமுடியும் –தமிழக மக்கள் இயக்கம் . காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. வேறு வழியின்றி சட்டத்தை மதிக்க கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விடுவதாக கூறி தண்ணீர் திறந்து விட்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இதனையடுத்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்கள், முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறி வரும் கன்னடர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தமிழக முதல்வரின் உருவ படத்தை காலால் மித்து அவமரியாதை செய்யும் கன்னடர்கள். தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை ஒன்றை வடிவமைத்து பாடைகட்டி தூக்கி சென்று சங்கு ஊதி இறுதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அதனை தீ வைத்து எரித்து அத்துமீறி ஒரு மாநிலத்தின் முதல்வரை அவமரியாதை செய்கிறார்கள்.தன்னுடைய மாநில விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது தண்ணீர் பெற்ற தமிழக முதல்வரின் உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்துவது எந்த வகையில் நியாயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. இது போன்ற அநாகரிகமான முறையில் செயல்படுவது இரு மாநிலத்திற்கும் இடையே சுமூகமான உறவை உருவாக்காது.கன்னடர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழர்கள் ஈடுபட்டால் தேவையற்ற பதற்றமான சூழல் ஏற்படும். எனவே கன்னடர்கள் தங்கள் எதிர்ப்பை நியாயமான வழியில் தெரிவிப்பது நல்லது என தமிழக மக்கள் இயக்கம் கருதுகின்றது .

3] ஊதியத்தில் 75 சதவீதம் நாய்க்கும், பூனைக்கும்-திருநெல்வேலி உள்ள பள்ளிவாசல் ஊழியர் ஒருவர் தான் பெறும் ஊதியத்தில் 75 சதவீதத்தை நாய் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதற்காக செலவிடுகிறார். திருநெல்வேலி மாவட்டம் பேட்டை தெருவை சேர்ந்த பள்ளி வாசலில் துப்புரவு தொழில் செய்பவர் முகம்மது அயூப். இவர் மிகச்சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.இவரது வீட்டிற்கு தினமும் 30 பூனைகள், 15 நாய்கள் விருந்தாளியாக வருவது வழக்கமாம். அவைகளுக்கு சாப்பாடு, பால் பொன்றவற்றை அயூப் வழங்குவது உண்டு

4] தயாரிப்பாளரும், இயக்குனரும் செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள்: நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு-தன்னிடம் கல்ஷீட்டு கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள் என நடிகை பிரியங்கா ஜெயின் பகிரங்க புகார் ஒன்றை கூறியுள்ளார். பிரியங்கா ஜெயின் கூறும்போது, இரண்டு வருடத்துக்கு முன்னர் ரங்கி தரங்கா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அதன் பின்னர் பல வாய்ப்புகள் வந்தது ஆனால், என்னிடம் கல்ஷீட்டு கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள்.மும்பையில் இருந்து வந்ததால் என்னை தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள். அது போன்ற பட வாய்ப்புகள் தேவையில்லை என்று மறுத்துவிட்டேன். சினிமாவில் எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை. பல நல்ல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த தனக்கு கோலி சோடா வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்

5] வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து அலுவலகம் திறந்த தமிழக அமைச்சர்-தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து திறப்பு விழா நடத்தியுள்ளார்

6] ஓணம் பண்டிகை தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலம் களைகட்டியுள்ளது. மகாபலி மன்னன் தன் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பால் வருடத்திற்கு ஒருமுறை காண வருவார் என்பது மக்களின் நம்பிக்கை.இதை கேரளா மக்கள் ஓணம் பண்டிகையாக கடைபிடிக்கின்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா ஞாயிறன்று தொடங்கியது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் 14ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

7] இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி மரணத்திற்கு காத்திருக்கும் பெண்-கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் தான் இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி (வயது 55)

8] காதலுக்காக காதலன்; காதலனுக்காக காதலி-மதுராந்தகம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால், காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி அறிந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார். மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராம்

9] பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்-உத்திர பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையைவிற்ற பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்

10] *கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எச்சரிக்கை : மிரட்டும் கன்னட அமைப்பினர்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள், அங்கு வாழும் தமிழர்களை எச்சரித்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் குதித்துள்ள கன்னட அமைப்புகள், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு ஆதவராக இருக்க வேண்டும். இல்லையெனில், தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் புகுந்து தாக்குதல் நடத்துவோம். 1991ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளன*

11] தாடி, மீசை வளர்த்த இந்திய பெண் சாதனை-இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தாடி, மீசை வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்

12] காவிரி நீர் பிரச்சனையில், நடிகை சுஹாசினி கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகிறது. டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள சுஹாசினி “ காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நான் கருத்து கூறியதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் அது தவறானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்

13 கார் விபத்தில் சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்-பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

14] சைபீரியாவில் டல்டிகான் என்ற நதி திடீரென்று ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. இதற்கு காரணம் நிக்கல் ரசாயன ஆலை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். சைபீரியாவின் வட பகுதியில் உள்ள் ஏராளமான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதரமாக விளங்குவது டல்டிகான் என்ற நதி. இந்த நதியில் இருந்து தான் ரசாயன ஆலைகள் தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.இந்த நதி திடீரென்று ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகத்தில் தலைசிறந்த நிக்கல் ஆலை நிறுவனத்தில் ஒன்றான நாரில்சிக் என்ற நிறுவனத்தால் இந்த மாற்றம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த காரணத்தை தெரிவித்துள்ள அந்நிறுவனம் நிக்கல் ஆலையில் ஏற்பட்ட விபத்தினால்தான் நதியில் நிக்கல் ரசாயனம் கலந்தது என்று கூறியுள்ளனர். மேலும் ரஷியா நிக்கல் உற்பத்தியில் உலகத்தில் இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

15] சுத்தமான மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு 13-வது இடம் முதல் இடத்தில் சிக்கிம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் சுத்தத்தில் சிறப்பாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2016 ஆண்டுக்கான சுவாச் பாரத் முடிவுகள் நேற்று வெளியிடபட்டது. மொத்தம் 75 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கிராமப் பகுதிகளில் உள்ள கழிவறைகளின் நிலை மற்றும் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. நேற்று அந்த ஆய்வு குழுவை டெல்லியில் மத்திய ஊரக மேம்பாட்டு மந்திரி நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.
சுத்தமான மாநிலங்கள் வரிசையில் சிக்கிம் மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் 98.2 சதவீதம் கழிவறை வசதிகள் இருப்பதாகவும், அதை கிராம மக்கள் சுத்தமாக பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. 96.4 சதவீதம் கழிவறை வசதிகளுடன் கேரளா 2-வது இடத்தில் உள்ளது.
மிசோரம், இமாச்சல பிரதேசம், நாகலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் டாப் 10 சுத்தமான மாநிலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.
காஷ்மீர், கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 39.2 புள்ளி களுடன் 13-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது.

16] * கோராபுட்

ஒடிசா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்*

Vishwarubam 9962023699

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe