பொறியியல் கலந்தாய்வு விவரம்

0

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும்,
சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிறவகை பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15
சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து
பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி
தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது.
கலந்தாய்வு அடிப்படையிலேயே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
செய்தியார்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கப்படும்.
பொதுபிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும்.
விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21 ஆம் தேதிகளில் நடைபெறும்.
விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 19,20ஆம் தேதிகளில்
நடைபெறும். மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வும்.21ம் தேதி நடைபெறும்,
தொழிற்கல்வி பிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17,18 ஆம் தேதிகளில்
நடைபெறும். வரும் கல்வி ஆண்டு 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading...