Tuesday, July 25Dhinasari

கட்டுரைகள்

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

கட்டுரைகள், பொது தகவல்கள்
அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா? அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணமானோம். அதே பெட்டியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களால் பிரச்சினையில்லை. ஆனால், அவர்களுடன் வந்த சுமார் ஒரு டஜன் தொண்டர்கள் பதிவுசெய்யாத பயணிகள். அவர்கள் அடித்த லூட்டி பயங்கரமாக இருந்தது. அவர்கள் எங்களைப் பதிவுசெய்த இருக்கையிலிருந்து நகர்த்தி னார்கள். நாங்கள் கொண்டுபோயிருந்த பெட்டிகள் மீது உட்கார்ந்துகொண்டார்கள். அசிங்கம் அசிங்கமாகப் பேசினார்கள். ஆபாசமாக ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார்கள். பயங்கரமான இரவு நாங்கள் ரொம்பவும் பயந்துபோனோம். கூச்சத்தில் நெளிந்தோம். அடங்காப்பிடாரிகளுடன் அது ஒரு பயங்கரமான இரவு நேர ரயில்
ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

உரத்த சிந்தனை, கட்டுரைகள்
அமெரிக்காவில் இன்று ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களினால் பெரிதாகப் பேசப் படும் விஷயம் ட்ரம்ப்பின் பையன் ரஷ்ய நாட்டுத் தூதரையும் ரஷ்ய நாட்டு வக்கீல் ஒருவரையும் ரகசியமாக சந்தித்த ஒரு விஷயம் பற்றியதுதான். ஜூனியர் நேரு செய்திருக்கும் விஷயத்தை விட அது நிறையவே வில்லங்கமில்லாத ஒரு விஷயம் தான். அதைப் பார்த்து விட்டு நேருவின் வாரிசுக்கு வரலாம். ட்ரம்ப் பையன் என்ன செய்தான்? அமெரிக்க தேர்தலின் பொழுது ரஷ்ய வக்கீல் ஒருவரையும் ரஷ்ய தூதரையும் தன் மச்சானையும் கூட்டிக் கொண்டு போய் தனியாக சந்தித்திருக்கிறான். ட்ரம்ப்பின் மருமகன் இப்பொழுது வெள்ளை மாளிகையின் அரசாங்க அதிகாரியும் கூட. அந்த வக்கீல் ஹிலரி பற்றி ஏதோ பலான மேட்டர் இருப்பதாகவும் அதைத் தருவதாகவும் சொன்னதினால் ட்ரம்ப் புள்ளையாண்டான் அங்கு போய் அவர்களை சந்தித்ததாக இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளான். கூடவே அவன் மச்சானும் ஆமாம் நானும் பார்த்தேன் ஆனால் பதவியேற
மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

Featured, இந்தியா, கட்டுரைகள்
சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகா லாம் பகுதியில் பூடான் எல்லையில் நுழைய முடியாத படி காவல் காத்து வரும் இந்திய ராணுவத்துக்கு உதவியாக 4000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து ள்ளது இந்திய ராணுவம் வழக்கமாக இந்திய சீன எல்லையில் தகராறு வந்தால் இந்தியா தான் சீனாகிட்ட போய் அண்ணே கொஞ்சம் பொறுங்கண்ணே..எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகொள்வோம் என்று கெஞ்சி நிற்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இப்பொழுது வாங்க தம்பி எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோ ம் என்று சீனா இந்தியாவிடம் மன்றாடுவதைப் பார்த் துஉலக நாடுகள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது. .இந்திய ராணுவத்திற்கு என்னாச்சு? 2013 ம் ஆண்டு ஏப்ரலில் லடாக்கில் 640 கிலோ மீட்டர் பகுதியை கைப்பற்றிய சீனாவிடம் பளீஸ் எங்கள் இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று இந்தியா கெஞ்சிய தை வேடிக்கை பார்த்த உலக நாடுகள் இன்று சிக்கிம் பார்டரில் சீனாவை மி
சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

Featured, உரத்த சிந்தனை, கட்டுரைகள்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. ‘என்னுடைய பணியின் ஓர் அங்கம் இது. சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என அதிர வைக்கிறார் ரூபா. கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்குப் பதிலளித்த
தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

Featured, ஆன்மிகக் கட்டுரைகள், கட்டுரைகள்
தேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே! - விளக்கம். - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன். "ஜன கண மன அதி நாயக ஜயஹே!" நம் தேசீய கீதத்தின் இந்த முதல் வரியின் விளக்கம்:- தோற்றம் கொண்டவை அனைத்தும் ஜனங்கள் அதாவது ஜனனம் எடுத்தவை. முதலில் தோன்றியவை பஞ்ச பூதங்கள். அவற்றிலிருந்து மீதியனைத்தும் தோன்றின. அவ்விதம் பார்த்தால் கிரகங்கள், நட்சத்திரங்கள், தேவதைகள் - இவையனைத்தும் ஜனங்களே. பிறந்தவை அனைத்தும் ஜனங்களே அல்லவா? பிறவி என்ற தர்மம் கொண்டவை அனைத்தும் 'ஜனம்'. "சர்வே ஜீவா: கண்யா: கணா: தேஷாம் பரி கணேஷ:" என்பது விளக்கம். ஜீவர்கள் அனைவரும் கணங்களே. கணக்கீட்டிற்கு உட்பட்டவர்கள். தேவர்கள் எவ்வளவு பேர்? தேவர்களுள் ஒரு பிரிவினரான வசுக்கள் 8 பேர். ருத்திரர்கள் 11 பேர். ஆதித்யர்கள் 12 பேர். கணக்கு உள்ளதல்லவா? கணக்கிட முடிவதால் இவர்களனைவரும் கணங்களே! கிரகங
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

Featured, ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை:-  -தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா  -தமிழாக்கம் - ராஜி ரகுநாதன்  (Source: Editorial, Rushipeetham, July, 2017) பசு வதைத் தடுப்பது என்பது மதம் தொடர்பான அம்சம் அல்ல. ஆவேசங்களையும், மேன்மேலும் ஆவேசங்களையும் விட்டுவிட்டு நிதானமாக வரலாற்றை ஆராய்ந்தால் இது நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் என்னும் உண்மை புரிய வரும். நம் பாரத நாட்டின் புராதன, தார்மீக நூல்களில் பசுவை வழிபாட்டிற்குரிய அன்னையாக கௌரவித்துள்ளார்கள்.  அதற்கு காரணம், மேன்மை பயக்கும் எந்த விஷயமென்றாலும் தெய்வமாகத் தொழும் பண்பாடு பழங்காலம் முதல் இந்நாட்டின் வழக்கம்.  பிராண சக்தியை அளிக்கும் சூரியனையும், பயிர் வகைகளை வளர்த்து அளிக்கும் நிலத்தையும், தாகம் தீர்க்கும் நீரையும் தேவதைகளாக எண்ணுவது ஒரு உயர்ந்த பாவனையே தவிர அதனை மத நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது. பசுமாட்டின் விஷய
தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

Featured, அரசியல், கட்டுரைகள்
1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள் அந்த தேசிய எழுச்சிக் காலகட்டத்தில் அத்தகைய பாடல்களைப் புனைந்தனர். வந்தே மாதரம் குறித்து அனாவசியமான சர்ச்சையை உண்டாக்கி அதனை எதிர்க்கும் இஸ்லாமிய மதவெறியர்களின் தரப்பை பல தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆதரிப்பார்கள். திராவிட இயக்க, இடதுசாரி கும்பல்களும் அதற்கு ஒத்து ஊதுவார்கள். ஆனால், அதே போன்ற, சொல்லப் போனால் அதைவிடவும் வெளிப்படையாக (கீழுள்ள குறிப்புகளைப் பார்க்கவும்) இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் எதிர்க்க மாட்டார்களாம், ஏற்பார்களாம்! பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்.   2. நீராரும் கடலுடுத்த நில மடந்தை
வரலாற்றில் பரதநாட்டியம்

வரலாற்றில் பரதநாட்டியம்

ஆன்மிகக் கட்டுரைகள், கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
டாக்டர். இரா.நாகசாமி எழுதிய கட்டுரை... இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. மணிபுரி, ஒடிஸ்ஸி, கதக், மோகினி ஆட்டம் என்றெல்லாம் இது பெயர் பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பெறும் நாட்டியம் ஒன்றே பரதநாட்டியம் என்றபெயரில் உலகெங்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பெயர் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக பரதநாட்டியம் என்ற பெயரே தமிழ்நாட்டியத்துக்கு ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பத்தைந்து அல்லது ஆயிரத்து தொள்ளயிரத்து நாற்பதாம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஏற்பட்டது என்றும், அதற்கு முன்னர் இது சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது என்றும் தேவடியாள் குலத்தினர் இதை ஆடிவந்ததால் சமுதாயத்தில் இழுக்குடையதாக இது கருதப்பட்டது என்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதின் பின்னர் சமுதாயத்தில் முன்னிலைக் குடும்பப் பெண்களும், ஆடல் கலையில் ஈடுபட்டதால், சதிர் ஆட்டம் என்ற பெய
மறக்கக் கூடாத மனிதர்களின் நினைவில்… : ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா

மறக்கக் கூடாத மனிதர்களின் நினைவில்… : ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா

அடடே... அப்படியா?, கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
நாள்: 1971ம் ஆண்டு, மார்ச் 25. இடம்: கிழக்கு பாகிஸ்தான். எங்கு பார்த்தாலும் கலவரமும், பீதியும், பதட்டமும் தாண்டவமாடிய நேரம். என்னவாகப் போகிறோம் என்று புரியாமல் கிடைத்த பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு, குடும்பம் குடும்பமாக இந்தியாவை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது அப்பாவி மக்கள் கூட்டம். மேற்கு வங்கத்தின் வழியாகவும், கிழக்கு இந்திய மாநிலங்கள் வழியாகவும் ஆயிரக்கணக்கில் புகுந்த வங்காளிகளால் இந்தியா விழி பிதுங்கியது. மறுபக்கம் தப்ப முடியாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உயிரிழந்த வங்காளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான் ராணுவம். கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மை, கலவரம், இனப் படுகொலையால் இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பதட்டம். அலை அலையாய் வந்துகொண்டிருக்கும் அகதிகளால் இந்தியாவின் பொரு
டிவி., விவாத அநாகரிகம்: வெகுண்ட எஸ்.வி.சேகர்

டிவி., விவாத அநாகரிகம்: வெகுண்ட எஸ்.வி.சேகர்

அரசியல், கட்டுரைகள், புகார் பெட்டி
சென்னை: செய்தி சேனல்களில் நிகழ்த்தப் படும் விவாதங்கள், அலசல்கள் குறித்து பல விதங்களில் அதிருப்தி நிலவுகின்றன. இந்நிலையில், அண்மையில் நியூஸ் 7 என்ற செய்தி சேனலில் நிகழ்த்தப் பட்ட யோகா குறித்த விவாதம் பெரும் புயலைக் கிளப்பியது. அதில் பங்கேற்ற தி.க.வைச் சேர்ந்த எழுத்தாளர் மதிமாறன், யோகா 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்களின் திணிப்பு என்று கூறி, சாதிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பினார். இதனைக் கண்டித்த பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, சாதிப் பிரச்னையை கிளப்பும் ஒருவரை ஓர் ஊடக நெறியாளர் கண்டிக்காமல் அதை மேலும் மேலும் அனுமதிப்பது, குறிப்பிட்ட சாதி, மதத்தினரை அவமதிப்பது போலானது என்றார். இந்த வாக்குவாதம் வெகு நேரம் நீண்டதால், விவாதம் பாதியிலேயே முடித்து வைக்கப் பட்டது. இந்நிலையில், யோகா - ஒரு மதத் திணிப்பு; ஹிந்தி - ஒரு மொழித் திணிப்பு என்றெல்லாம் கூறி நாட்டில் பிரிவினையை தூண்டிவிட்டுக் கொண்டிருக