Tuesday, July 25Dhinasari

பொது தகவல்கள்

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

அடடே... அப்படியா?, ஆன்மிகச் செய்திகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது. பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும் பஜன் பாடல்கள் பாடிக்கொண்டும் இருக்க, இந்தக் குரங்கோ அமைதியாக மண்டபத்தில் மேல் ஒரு தூணுக்கு அடியில் அமர்ந்து கொண்டது. ஆலயத்துக்கு வந்த ஸ்வாமியின் பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். எல்லோரும் நாமஸ்மரணத்தில் இருக்க இந்தக் குரங்கோ கண்களை மூடி தியானத்தில் சுமார் பத்து நிமிடங்கள் அமர்ந்தது. குனிந்த தலையுடன், இரு கைகளையும் தன் இரு கால்களில் பிடித்தவாறே ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்ததைக் கண்டு அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியப் பட்டனர். ஒரு சிலர் அந்தக் குரங்கை இறைவனின் அம்சமாகவே கருதி வணங்கினர். ராமாயணத்தில் வானரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஸ்ரீராமபிரானுக்கு உதவவே பிறந்தவைகளாக அவ
அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

கட்டுரைகள், பொது தகவல்கள்
அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா? அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணமானோம். அதே பெட்டியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களால் பிரச்சினையில்லை. ஆனால், அவர்களுடன் வந்த சுமார் ஒரு டஜன் தொண்டர்கள் பதிவுசெய்யாத பயணிகள். அவர்கள் அடித்த லூட்டி பயங்கரமாக இருந்தது. அவர்கள் எங்களைப் பதிவுசெய்த இருக்கையிலிருந்து நகர்த்தி னார்கள். நாங்கள் கொண்டுபோயிருந்த பெட்டிகள் மீது உட்கார்ந்துகொண்டார்கள். அசிங்கம் அசிங்கமாகப் பேசினார்கள். ஆபாசமாக ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார்கள். பயங்கரமான இரவு நாங்கள் ரொம்பவும் பயந்துபோனோம். கூச்சத்தில் நெளிந்தோம். அடங்காப்பிடாரிகளுடன் அது ஒரு பயங்கரமான இரவு நேர ரயில்
குறைந்து வருகிறது  டிஜிட்டல் பண பரிவர்த்தனை

குறைந்து வருகிறது டிஜிட்டல் பண பரிவர்த்தனை

பொது தகவல்கள், வணிகம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வங்கிகள் மூலம் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு இருந்ததால் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இதனால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீண்டும் சரிந்து வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.பி சவுத்ரி மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.71.27 கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருந்தது. அது நவம்பர் மாதத்தில் ரூ.83.48 கோடியாக அதிகர
ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்! 

ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்! 

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு ஆண்டாள். ஆண்டாளுக்கு சிறப்பு அவள் கையில் வைத்திருக்கும் கிளி. பூமாலையோடு பாமாலையும் கட்டிச் சேர்த்த ஆண்டாள் கையிலும் தோளிலும் சூடிய கிளி உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வை... காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது! "இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை. ஆண்டாள் அம்மா
மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

Featured, உரத்த சிந்தனை, புகார் பெட்டி, பொது தகவல்கள்
மாம்பழ சங்கம் இன்று 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை என்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா ? ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை இது ? வாடிகனில் போய் இதை கேட்டால் வாட் மாம்பழம் வாட் தோத்திரம் என்பார் போப்பாண்டவர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகிலுள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் அந்த பகுதி முழுவதும் பிச்சைகாரர்கள் கூட்டமாக. (நெசமா தாங்க) ஜே ஜே என இருக்கும் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு விடுமுறை 237 வது ஆண்டு பண்டிகை ஆணி மாதம் கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை நிறைவு பெறும் என்னப்பா கிறிஸ்து தோன்றி கிறிஸ்தவ விழாக்கள் தோன்றி 2000 வருஷமாச்சே இது மட்டும் என்ன 237 வருஷம் என கேட்கிறீர்களா அமெரிக்க , ஐரோப்பா போன்ற கிறிஸ்தவ நாடுகளில் தெரியாத விழா அவ்வளவு ஏன் மதுரை சென்னை நாகபட்டினம் வேளாங்கண்ணியில் கூட நடைபெறா
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

Featured, ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை:-  -தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா  -தமிழாக்கம் - ராஜி ரகுநாதன்  (Source: Editorial, Rushipeetham, July, 2017) பசு வதைத் தடுப்பது என்பது மதம் தொடர்பான அம்சம் அல்ல. ஆவேசங்களையும், மேன்மேலும் ஆவேசங்களையும் விட்டுவிட்டு நிதானமாக வரலாற்றை ஆராய்ந்தால் இது நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் என்னும் உண்மை புரிய வரும். நம் பாரத நாட்டின் புராதன, தார்மீக நூல்களில் பசுவை வழிபாட்டிற்குரிய அன்னையாக கௌரவித்துள்ளார்கள்.  அதற்கு காரணம், மேன்மை பயக்கும் எந்த விஷயமென்றாலும் தெய்வமாகத் தொழும் பண்பாடு பழங்காலம் முதல் இந்நாட்டின் வழக்கம்.  பிராண சக்தியை அளிக்கும் சூரியனையும், பயிர் வகைகளை வளர்த்து அளிக்கும் நிலத்தையும், தாகம் தீர்க்கும் நீரையும் தேவதைகளாக எண்ணுவது ஒரு உயர்ந்த பாவனையே தவிர அதனை மத நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது. பசுமாட்டின் விஷய
ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

அடடே... அப்படியா?, புகார் பெட்டி, பொது தகவல்கள்
ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்.. இருக்கு என்று, கையில் கொடுத்தவர்... சார் இனிமே இதெல்லாம் வெலை கூடிடும். இது பழைய ஸ்டாக். அதனால் அதே விலைக்கு தாரேன் என்றார். என்னாது...? என்று ஆச்சரியமாகக் கேட்டபோது... நீட்டி முழக்கிக் கொண்டே போனார். எல்லாம் விலை கூடிடும். ரொம்ப ஏறிப் போச்சு... என்று ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டார் முகத்தை! ம்ம்ம்.. சரிதான்! இதெல்லாம் உங்களுக்கு சொன்னது யாரு? நீங்க எதுனா பேப்பர்ல படிச்சீங்களா என்று கேட்டேன். இல்லை சன் டிவி நியூஸ்ல கேட்டேன். எல்லா சனமும் ரொம்ப புலம்புறாங்க... என்றார். சர்தான்...! நீங்க என்ன... ஒரு இருபது லட்சத்துக்கு வியாபாரம் செய்வீங்களா - கேட்டேன். அய்ய... இன்னா சார் நீங்க.. என்னயப் போயி இப்டி கேக்கிறீங்க? என்றார் அப்ப என்ன..? கவலையை விடுங்க! இத
பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

சுற்றுலா, பொது தகவல்கள், வணிகம்
  பொதிகை மலை என்பது மேற்குத் தொடா்ச்சி மலைகளில்  தென்பகுதியில் ஆனை மலைத் தொடரில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையின் ஒருபகுதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டில் மட்டுமே பாயும் முக்கிய நதியான தாமிரபரணி ஆறுஉருவாகிறது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகை மலை என்றும் கூறுவர். சங்ககாலத்தில் வையை என அழைக்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் அழைப்பது போன்றது இது. வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். அகத்தியர் வாழ்ந்த, தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.  தமிழ்இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் ப
வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

தொழில்நுட்பம், பொது தகவல்கள், வணிகம்
இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும். இவர்களது பிரச்னைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடாப்டர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இருப்பினும் இது எப்போது விற்பனைக்கு வரும்; விலை என்ன என்பது குறித்து முழுத் தகவலும் வெளியிடப் படவில்லை
வரலாற்றில் பரதநாட்டியம்

வரலாற்றில் பரதநாட்டியம்

ஆன்மிகக் கட்டுரைகள், கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
டாக்டர். இரா.நாகசாமி எழுதிய கட்டுரை... இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. மணிபுரி, ஒடிஸ்ஸி, கதக், மோகினி ஆட்டம் என்றெல்லாம் இது பெயர் பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பெறும் நாட்டியம் ஒன்றே பரதநாட்டியம் என்றபெயரில் உலகெங்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பெயர் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக பரதநாட்டியம் என்ற பெயரே தமிழ்நாட்டியத்துக்கு ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பத்தைந்து அல்லது ஆயிரத்து தொள்ளயிரத்து நாற்பதாம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஏற்பட்டது என்றும், அதற்கு முன்னர் இது சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது என்றும் தேவடியாள் குலத்தினர் இதை ஆடிவந்ததால் சமுதாயத்தில் இழுக்குடையதாக இது கருதப்பட்டது என்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதின் பின்னர் சமுதாயத்தில் முன்னிலைக் குடும்பப் பெண்களும், ஆடல் கலையில் ஈடுபட்டதால், சதிர் ஆட்டம் என்ற பெய