Thursday, July 20Dhinasari

இந்தியா

தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

இந்தியா, சற்றுமுன்
புதுதில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக சார்பில் தேஜகூ., வேட்பாளராகப் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக.,வின் ராம்நாத் கோவிந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸின் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ர
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

இந்தியா, உள்ளூர் செய்திகள், கோவை
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.  இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர் அவருக்கு ஒத்துழைததாகக் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது. அயல்நாடுகளால் ஈர்க்கப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தானாக முன்வந்து, மாநில அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை முளையிலேயேக் கிள்ளி எறிய வேண்டும். என் கருத்துப்படி, இவர்களது நடவடிக்கைகள் புதிதல்ல; வைத்திருக்கும் பெயர் மட்டும் தான் புதிது. அந்நிய சக்திகளால் கவரப்பட்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எண்பதுகளிலேயே துவங்கிவிட்டன.  திரு ஜனா.
ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

இந்தியா, உலகம், சற்றுமுன்
ஹிந்து தேசியவாத சிந்தனை இந்தியாவில் அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, போருக்கு வழிவகை செய்கிறது என சீன ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச் சந்திப்பான டோக்லாம்- டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி வருகிறது சீனா. அவ்வாறு வாபஸ் பெறா விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியாவோ, ராணுவத்தை திரும்பப் பெற முடியாது, அமைதியான ம
இந்தியாவை தாக்க பாகிஸ்தானுடன் கைகோத்துள்ளது சீனா: முலாயம்

இந்தியாவை தாக்க பாகிஸ்தானுடன் கைகோத்துள்ளது சீனா: முலாயம்

இந்தியா, சற்றுமுன்
பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை தாக்க சீன தயாராகி வருகிறது பாராளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக இந்தக் கூட்டத் தொடர் நடக்கிறது. இன்று இந்தியா-சீனா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், சீனா சிக்கிம் எல்லை பிரச்னையால் அதிக கோபத்தில் உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவை தாக்க சீனா தயாராகி வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சீனா அதிகமான ஆயுதங்களைப் புதைத்து வைத்துள்ளது. நான் பல ஆண்டுகளாக மத்திய அரசை எச்சரிக்கை விடுத்து வருகிறேன். அவர்கள் யாரும் போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியப் புலனா
இந்து கடவுளர்கள் குறித்து சமாஜ்வாடி எம்பி சர்ச்சைப் பேச்சு!

இந்து கடவுளர்கள் குறித்து சமாஜ்வாடி எம்பி சர்ச்சைப் பேச்சு!

அரசியல், இந்தியா, சற்றுமுன்
  நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்து கடவுள்கள் பற்றிய சமாஜ்வாடி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தில்லி மாநிலங்களவையில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகள் பற்றி இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், இந்து கடவுளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார். நரேஷ் அகர்வாலின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். அவை முன்னவரான நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘‘நரேஷ் அகர்வால் தெரிவித்த கருத்தை, சபைக்கு வெளியே பேசி இருந்தால், அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்க முடியும்’’ எனக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

இந்தியா, சற்றுமுன், சென்னை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற மேல்சபையில் அஇஅதிமுக எம்.பி. டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டதா? அப்படியெனில் அதன் விபரம் மற்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட தகுந்த நடவடிக்கைகள் யாவை? இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே அளித்த பதில்: ஆமாம். தமிழ்நாட்டில் விரைவில் எய்ம்ஸ் மருத
பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து?

பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து?

இந்தியா, சற்றுமுன்
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில், சிறைக் கைதிகளிடம் அவர்களை மிரட்டி அதிகாரிகள் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இது விவகாரத்தில் சிறைத்துறை வெளியுலகுக்கு கைதிகள் மூலம் என்ன சொல்ல விழைகிறது என்றெல்லாம் இப்போதே விவாதம் கிளம்பிவிட்டது. இதனிடையே, சசிகலா பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வெளியான அறையின் புகைப்படங்கள் பொய்யானது என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை போல் சிறை உள்ளது என்று கூறுவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் ரூபா, பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் கூறுகிறார் புகழேந்தி.
சுடிதார், கையில் பை: சிறையில் ஷாப்பிங் போகிறாரோ சசிகலா?

சுடிதார், கையில் பை: சிறையில் ஷாப்பிங் போகிறாரோ சசிகலா?

அரசியல், இந்தியா, சற்றுமுன்
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை விதிகள் மீறப்பட்ட விவகாரத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்து வியந்து நிற்கிறது. லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறைக் கைதியை சொகுசாக சிறையில் உலவ விட்டுள்ள கர்நாடக சிறைத்துறையின் கருணைதான் இப்போது ஹாட் டாபிக்! சூடான விவாதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதி சசிகலா சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வரும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு கையில் பேக்குடன் எங
கலகலக்கும் வீடியோ ஆதாரங்கள்: ரூபா பணியிட மாற்றம்; சசிகலா சிறை மாற்றம்?

கலகலக்கும் வீடியோ ஆதாரங்கள்: ரூபா பணியிட மாற்றம்; சசிகலா சிறை மாற்றம்?

இந்தியா, சற்றுமுன்
  பெங்களூர்: கர்நாடக ஊடகங்களில் வெளியாகி வரும் சசிகலா சிறைவாசம் குறித்த வீடியோக்களால் மாநில அரசியல் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரக் காரணமான ரூபா, சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதிலடியாக, சசிகலாவும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம் அக்ராஹார சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்த சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவற்றை அவர் வெளியிடுவார் என்றும் ஊடக வட்டாரத்தில் கூறப்படுகிறது. முன்னதாக, பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவுக்கு தனி சமையலைறை உட்பட பல வசதிகளை சிறையில் செய்து கொடுத்திருப்பதாகவும், இதற்காக சிறை அதிகாரிகள் சிலருக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூப
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அரசியல், இந்தியா, சற்றுமுன்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை அவர் பயன்படுத்தினார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10ஆம் தேதி டிஐஜி.,யாக இருந்த ரூபா ஆய்வு செய்து, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் க