அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

0

vaishnavi-devi-temple-kashmir

சென்னை:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில்,
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..

அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு சென்ற யாத்ரீகள் மீது காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மனிதாபிமானமற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. பயண ஏற்பாடுகளும் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதனையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, கவலை அளிக்கிறது.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமாது, மனிதத் தன்மையற்ற செயல். இதனை குழப்ப காஷ்மீர் காவல்துறை புதுப்புது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கையில், பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்பு வீரர்கள் முற்பட்டதால், பயங்கரவாதிகள், பாதுப்பு வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் திசை மாறி யாத்ரீகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை. அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் சென்றதாக கூறும் வாதமும் அபத்தமானது. இந்த அமர்நாத் யாத்திரை என்பது நேரிடையாக யாரும் மேற்கொண்டுவிட முடியாது. அமர்நாத் பயணம் என்பது திட்டமிட்டு, பாதுகாப்போடு செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் முதலானவை முன்னதாகவே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அதனையும் மீறி இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மேலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களை அச்சுறுத்தி, உயிர் பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற தாக்குதலில் இஸ்லாமி அடிப்படைவாத, பிரிவினைவாதக் குழுக்கள் செய்கின்றன. இதனை எதிர்கொள்ளும் துணிச்சலும், தீரமும் இந்துக்களுக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர், காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த யாத்திரைக்கு சவால் விட்ட போதுதான் இந்த பக்தி பயணமானது நாடுநெடுகிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. உயிரை துச்சமென எண்ணி, பனி மலை மீது செல்லும் பயணத்தை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போதிலிருந்து மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் இணைந்து இந்த பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.

எனவே, இந்த வருடத்தின் யாத்திரை நிறைவுபெற இன்னும் நாட்கள் இருக்கும் காரணத்தினால், முழுமையான பாதுகாப்பும் உளவுதுறையை திறம்பட பணி செய்ய வைத்து பக்தர்களை பாதுகாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும், அடிப்படை வசதிகளையும் போர்கால நிலையில் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசாங்கங்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அமர்நாத் யாத்திரையில் உயிர்நீத்த பலிதானிகளின் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது, அவர்களை இழந்து வாடும் அவர் தம் குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது … என்று கூறியுள்ளார்.

Loading...