spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

- Advertisement -

புதுதில்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக சார்பில் தேஜகூ., வேட்பாளராகப் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி பெற்றுள்ளார்.

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக.,வின் ராம்நாத் கோவிந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸின் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமாரும் 34.35 சதவீதமும் பெற்றுள்ளனர்.

இவர்களில் 21 எம்.பிக்கள் 77 எம் எல்..ஏக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகார பூர்வமாக அறிவித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், வரும் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நான் ஒரு போராளி நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மீரா குமார் கூறியுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து மீரா குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், இதற்காக நான் வருத்தபடவில்லை. நான் ஏன் வருத்தப்பட வேண்டும். நான் ஒரு போராளி. என் நாட்டின் மக்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கைக்காக போராடி வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களில் வெற்றி விவரம்…:

1st Presidential poll (1952)
Candidate NameVotes
Dr. Rajendra Prasad507,400
K.T. Shah92,827
Thatte Lakshman Ganesh2,672
Chowdhry Hari Ram1,954
Krishna Kumar Chatterjee533
2nd Presidential poll (1957)
Candidate NameVotes
Dr. Rajendra Prasad459,698
Chowdhry Hari Ram2,672
Nagendra Narayan Das2,000
3rd Presidential poll (1962)
Candidate NameVotes
Dr. Sarvapalli Radhakrishnan553,067
Chowdhry Hari Ram/t6,341
Yamuna Prasad Trisulia3,537
4th Presidential poll (1962)
Candidate NameVotes
Zakir Hussain471,244
Kota Subbarao363,971
Khubi Ram1,369
Yamuna Prasad Trisulla232
Bhamburkar Shriniwas Gopal232
Brahma Deo232
Krishna Kumar Chatterjee125
Kumar Kamla Singh125
Chandradutt Senani0
U.P. Chugani0
Dr. M.C. Davar0
Chowdhry Hari Ram0
Dr. Man Singh Ahluwalia0
Manohara Holkar0
Seetharamaiah Ramaswamy Sharma Hoysala0
Satyabhakt0
5th Presidential poll (1969)
Candidate NameVotes
Varahagiri Venkata Giri (INDEPENDENT)401,515 / 420,077
Neelam Sanjeeva Reddy (INDEPENDENT)313,548 / 405,427
C.D. Deshmukh112,769
Chandradatt Senani5,814
Furcharan Kaur940
Rajabhoj Pandurang Nathuji831
Babu Lal Mag576
Chowdhry Hari Ram125
Sharma Manovihari Anirudh125
Khubi Ram94
Bhagmal0
Krishna Kumar Chatterjee0
Santosh Singh Kachhwaha0
Dr. Ramdular Tripathi Chakor0
Shri Ramanlal Prushottam Vyas0
6th Presidential poll (1974)
Candidate NameVotes
Fakhruddin Ali Ahmed (INC)754,113
Tridib Chaudhuri (INDEPENDENT)189,196
7th Presidential poll (1977)
Candidate NameVotes
Neelam Sanjiva ReddyWon unopposed*
*37 candidates filed nominations, 36 got rejected
8th Presidential poll (1982)
Candidate NamePartyVotes
Zail SinghIndian National Congress754,113
H.R. KhannaIndependent282,685
9th Presidential poll (1987)
Candidate NamePartyVotes
R. VenkataramanIndian National Congress740,148
V. R. Krishna IyerIndependent281,550
Mithilesh KumarIndependent2,223
10th Presidential poll (1992)
Candidate NamePartyVotes
Shankar Dayal SharmaIndian Nationlal Congress675,864
G.G. SwellIndependent346,485
Ram JethmalaniIndependent2,704
11th Presidential poll (1997)
Candidate NamePartyVotes
K.R. NarayananIndian National Congress956,290
T.N. SeshanIndependent50,631
Kaka Joginder Singh a.k.a. Dharti PakadIndependent1,135
12th Presidential poll (2002)
Candidate NamePartyVotes
Abdul KalamIndependent922,884
Lakshmi SahgalCPI(M)107,366
13th Presidential poll (2007)
Candidate NamePartyVotes
Pratibha PatilIndian National Congress638,116
Bhairon Singh ShekhawatIndependent331,306
14th Presidential poll (2012)
Candidate NamePartyVotes
Pranabh MukherjeeIndian National Congress/UPA713,763
P.A.SangmaIndependent315,987

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe