ஈ.டி.ஏ. நிறுவனத்தில் 2 -ஆவது நாளாக சோதனை; பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு?

7

 

ஈ.டி.ஏ. நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறையின் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் அந்த நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்த விவரம்:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈ.டி.ஏ. குழும நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர், அந்த நிறுவனத்தின் அலுவலங்கள், தொழிற்சாலைகள், வணிக கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என 74 இடங்களில் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.

தமிழகத்தில் மட்டும் இந்த சோதனை 52 இடங்களில் நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமானவரித் துறையைச் சேர்ந்த சுமார் 500 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக இந்த சோதனை வியாழக்கிழமையும் நீடித்தது. இச்சோதனையில் ஈ.டி.ஏ. குழும நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கானஆவணங்களும், ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த குழும உரிமையாளர்களிடமும், நிர்வாகிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சோதனையின் முடிவிலேயே வரி ஏய்ப்பு தொடர்பான முழுத் தகவல்களை வெளியிட முடியும் என வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Loading...
பகிர்க
முந்தைய கட்டுரைகுழந்தை விழுங்கிய ‘ஹேர்பின்’ அகற்றம்: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு
அடுத்த கட்டுரைபீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மோடி பாராட்டு
பத்திரிகையாளர், எழுத்தாளர். || *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். || * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகாபெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். || * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். சக்தி விகடன் பொறுப்பாசிரியராகவும், தினமணி இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவருக்கு கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. ||