300 ரன்: உலக சாதனை படைத்தது இந்திய அணி

0

ஒருநாள் போட்டிகளில், அதிக முறை 300 ரன்களைக் கடந்ததில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்தது.

இந்திய அணி, (மேற்கு இந்தியத் தீவுகள் , இந்திய அணிக்கு இடையிலான ஜூன் 26, 2017 தேதி வரை) 96 போட்டிகளில் 300 ரன்களைக் கடந்துள்ளது.
அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 95 முறையும், தென்னாப்பிரிக்கா 77 முறையும், பாகிஸ்தான் 69 முறையும், இலங்கை 63 முறையும், இங்கி8லாந்து 57 முறையும், நியூஸிலாந்து 51 முறையும் 300 ரன்களைக் கடந்துள்ளன.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. மழையினால் 43 ஓவர்களுக்கு போட்டி குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரஹானே 103 ரன் எடுத்தார்.

Loading...