அடையாள அட்டை கேட்ட நடத்துனரை அடியாளாய் மாறி ‘கும்மிய’ பெண் போலீஸ்!

ஐதராபாத்:
அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண் போலீஸ் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார் பெண் நடத்துனர். ஆனால் அவரை சரமாரியாக தாக்கினார் போலீஸ் பெண். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் பயணித்துள்ளார். அப்போது பெண் நடத்துனர், அவரிடம் டிக்கெட் எடுக்கும் படி கேட்டுள்ளார். இதையடுத்து பெண் போலீஸ் தனது அடையாள அட்டை நகலை காண்பித்துள்ளார். ஆனால் நடத்துனர் இதனை ஏற்க மறுத்ததுடன் அசல் அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர், நடத்துனரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மோதிக் கொள்ளும் காட்சியை பயணிகளில் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மகபூப்நகரில் அரசுப் பேருந்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...