Category: லைஃப் ஸ்டைல்

பிக்-பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்: 100 நாள் கூத்து ஒரு வழியாக முடிந்தது!

பிக்-பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்: 100 நாள் கூத்து ஒரு வழியாக முடிந்தது!

அடடே... அப்படியா?, சினி நியூஸ், சினிமா, லைஃப் ஸ்டைல்
தமிழகத்தின் எத்தனையோ அரசியல் பிரச்னைகள், சமூக நிகழ்வுகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக அடிக்கப்பட்ட 100 நாள் தொலைக்காட்சிக் கூத்தின் முதல் எபிசோட் ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் இனிதே முடிவடைகிறது.நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி என பலரையும் வடிகட்டிய எஞ்சியிருந்த சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது, அந்த ஒருவரை அறிவித்தார் கமல்ஹாசன்.பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஓவியா வந்தபோது பெரும் அதிர்வலை! 'என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்த
பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

சற்றுமுன், தமிழகம், திருச்சி, புகார் பெட்டி, லைஃப் ஸ்டைல்
கரூர்:கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை ஒன்றியப் பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சைக்கல் எனப்படும் மரகதக் கற்கள் மற்றும் செவ்வந்திக் கல் ஆகியவை ஆங்காங்கே பரவலாகக் கிடைக்கின்றன. இந்தக் கற்கள் அவற்றின் தூய தன்மை அளவைப் பொறுத்து, லட்ச ரூபாய் வரை விலை போகும்.முன்பெல்லாம் மழை பெய்து கோடை உழவு செய்த நிலங்களின் மேற்பரப்பில் ஆங்காங்கே சிறிய அளவில் இந்த வகையான கற்கள் கிடைக்கும் என்பார்கள். இதைப் பலரும் சாதாரணமாக நடந்து கொண்டே உன்னிப்பாக கவனித்து எடுத்து விடுவார்கள்.அண்மைக் காலங்களில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து குழுவாக மானாவாரி நிலங்கள், தோட்டங்களில் அவற்றின் உரிமையாளரின் அனுமதியுடன் கி
ஜெனிவா சாலையில் கம்பு சுத்திய வைகோ!

ஜெனிவா சாலையில் கம்பு சுத்திய வைகோ!

அடடே... அப்படியா?, உலகம், லைஃப் ஸ்டைல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ உரையாற்றினார். வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர்.ஐநா., கூட்டத்தில் கலந்து கொண்ட பின், ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் போட்டு, ஈழ படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளார். இந்தக் கூடாரம் தினமும் காலையில் அமைக்கப்படும். இதில் பொது மக்கள் பார்வைக்கு புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. பின்னர் மாலை கூடாரம் அகற்றப்படும்.இதனிடையே எவரும் எதிர்பாராத வண்ணம், கூடாரம் அமைக்க பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகர
இது கேரள மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே

இது கேரள மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே

இந்தியா, பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
சென்னையில், 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது வாடிக்கை.'ஒங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையப்பா...'' னு சொல்கிற மாதிரி, பஸ் தினத்தில் மோதல் ஏற்பட்டால், தாங்கள் அலங்கரித்த பேருந்தை சேதப்படுத்தவும் செய்வார்கள்.பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பொதுமக்களும்கூட பலவிதத்தில் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் சென்னை, பஸ்டே தினத்தில் இன்னும் நெரிசலுக்குள்ளாகும்.சென்னையைப் பொறுத்த வரை, 'பஸ் டே' கொண்டாட்டம் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.ஆனால் கேரள மாணவர்கள், பேருந்து தினக் கொண்டா ட்டத்துக்குப் பதிலாக, பேருந்துகளைச் சுத்தப்படுத்தி, அந்த மாநில மக்களிடையே சபாஷ் பெற்றுள்ளனர்.எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவர்கள், என்.எஸ்.எஸ் தினத்தை முன்னிட்டு, கேரள அரசுப் பேருந்துகளைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மீண்டும் சுனாமி?

மீண்டும் சுனாமி?

பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
இந்தியப் பெருங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஏற்படப்போவதாக, பூமி, விண்வெளி மற்றும் விழிப்புணர்வு ஆய்வுகளை (ESP: Earth, Space, Awareness Studies) மேற்கொள்ளும் கேரளாவின் BK ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பாபு கலயில் கூறியிருப்பது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. பலத்த காற்று வீசும் என்றும், சுனாமி அலைகள் தாக்கக் கூடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.இதனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பாபு கலயில் குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல் நடக்குமா? இதை நம்பலாமா? வேண்டாமா? என்பதில் பயம் கலந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.நம்பலாமா?பாபு கலயிலின் உள்ளுணர்வின் அடிப்படையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமானது அல்ல.! அதாவது, ஜோசியம் பார்ப்பது போல் சொல்ல
புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்

புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்

உரத்த சிந்தனை, உலகம், லைஃப் ஸ்டைல்
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார்.அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச உணவுகளை வழங்கி வருகின்றார். அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக புயல் மற்றும் கனமழை காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இர்மா புயல் கரையைக் கடந்தாலும் மழை அதிக அளவில் இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்கள் தங்குவதற்காக தேவாலயங்கள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான “அம்மாஸ் கிச்சன்” அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பின்பற்
காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

ஆன்மிகச் செய்திகள், சற்றுமுன், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல், விழாக்கள் விசேஷங்கள்
''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . . ''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . . ''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில்''குடகு மலையில் தோன்றி, திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வழியாக பூம்புகார் கடலில் கலக்கும் பொன்னி நதியான காவிரி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சிறப்பாகிறாள். ஆம்! அங்கு பன்னிரண்டு புண்ணிய நதிகளும் காவிரியில் கூப வடிவில் கலக்கிறதாம். மேலும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் நீராடுவது சிறப்பாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு காவிரிபுஷ்கரம் வருவதால் புஷ்கர நாட்களில் நீராடுவது நமது பாவங்கள், தோஷங்களை அகற்றிவிடும். “தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு?”.இது அருமையான கேள்வி. கலியின் கொடுமையால் எப்போதும் நீர் நிரம்பி ஓடும் காவிரி சில ஆண்டுகளாக எப்போதாவதுதான் நீர் ஓடுகிறது. மேகம் சூரி
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

இந்தியா, பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்பரேஷன் அதிகாரிகளின் இப்போதைய முக்கியப் பணி இதுவாகத்தான் இருக்கிறது.ஹைதராபாத் நகரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், 14 ஆயிரம் பிச்சைக்காரர்கள் ஹைதரபாத்தில் உள்ளனர் என்றும், அவர்களில் 98% பேர் போலியானவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களின் வருடாந்திர ஒட்டுமொத்த வருமானம் மட்டும் ரூ.24கோடியைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் ஒவ்வொரு நாளும் ரூ. 2 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.ஹைதராபாத் நகரை பிச்சைக்காரர்களே இல்லாத
தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

அடடே... அப்படியா?, சினி நியூஸ், சினிமா, பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்தால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதனால், பலரும் போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தைக் கண்டு களித்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஐசிஎஸ் என்ற இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்ஸின் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு கலக்கு கலக்கி விட்டனர்.இதனை ஷெரில் ஜி.காடவன், அன்னா ஜார்ஜ் இருவரும் வடிவமைத்துள்ளனர். வினித் ஸ்ரீனிவாசன், ரெஞ்சித் உன்னி ஆகியோர் பாடிய இந்தப் பாடலை ஷான் ரெஹ்மான் இசையமைத்திருந்தார். இது கேரளத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. அதுவும் குறிப்பாக, ஓணம் பண்டிகை வேறு வந்ததால், அதனை
ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல், வீடியோ
சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4