Category: கட்டுரைகள்

நம்பிக்கை கொள்! நம்பிக் கைக்கொள்!

நம்பிக்கை கொள்! நம்பிக் கைக்கொள்!

உரத்த சிந்தனை, கட்டுரைகள், பொது தகவல்கள், லைஃப் ஸ்டைல்
'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப் பற்றினோம் என்றால், அதனை உறுதியாகப் பற்றுதல், கை நழுவி விடாத அளவுக்கு கண்மூடித்தனமாகப் பற்றுதல் என்று கொள்ளலாம்.இன்னும் குரங்குப்பிடி, பூனைப்பிடி என்றெல்லாம் சில பிடிகள் உண்டு. வைணவ மார்க்கத்தில் இரு வழிகளை அவ்வாறு சொல்வார்கள். ஆனால் இங்கே எனக்குத் தோன்றிய ஒரு பிடி, கைப்பிடி! கைப்பிடி என்றால், நம் கை பிடிக்கும் பிடி அல்ல, மாறாக நம் கையைப் பிடிக்கும் பிடி!ஒரு சிறுவன். தன் தாயுடன் ஆற்றின் கரையில் நின்றிருந்தான். ஆற்றைக் கடக்க வேண்டும். தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.அப்போது அவனது தாய் சொன்னார்.. “என்னுடைய கையை அழுத்தமாகப் பிடித்துக் கொள் மகனே...”அந்தப் பையன் பதிலளித்தான்... “வேண்டாம் அம்மா. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”அதற்கு அவனது தாய் கேட்டார்.... “ஏன்? இ
நீயும் நானும்: கோபால்தாசனின்  கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், நூலரங்கம்
நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை!***சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்! நீயும் நானும் - ஏதோ ஒரு சிறு கவிதைக்கான தலைப்பாக நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். சிறு கதையைக் கூட குறுநாவலாக சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்று கவிஞர் கோபால்தாசன் இதில் நிரூபித்திருக்கிறார்.அவளும் அவனும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பு முழுதாக இழுத்துச் செல்கிறது. காதலா நட்பா என்று திகைக்க வைக்கும் பேச்சுக்கள். முடிவு அந்த இணைக் கதாபாத்திரங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டு விடுகிறது ஒரு கட்டத்தில்!இது ஒரு காதல் கவிதை என்று எடுத்தவுடனே தோன்றுகிறது. கதாபாத்திரங்களின் பெயரை எங்குமே சொல்லாமல், நான், அவள் என்று கவிஞரே தன்னை முன்னிலைப் படுத்தி அவளை அறிமுகப் படுத்தி கவிதையை அத்தியாயமாக நகர்த்துகிறார்.சினிமாக் கதாச
பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

உங்களோடு ஒரு வார்த்தை, உரத்த சிந்தனை, கட்டுரைகள், கட்டுரைகள், பொது தகவல்கள்
ஜூன் மாதம் இன்று 7ம் தேதி ... இதோ வருகிறது 17 ஆம் தேதி.வழக்கம்போல், கிறிஸ்துவ மிஷனரிகளின் உதவி பெற்ற நாய்கள் வாலாட்டத் துவங்கிவிடும். அவர்களில் சில தமிழர், ஆதி தமிழர் பெயர் போட்டுக்கொள்ளும் லெட்டர் பேட் இயக்கங்களும் ஆஷ் துரை சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அப்படியே கொஞ்சம் கவர் கொடுத்து, பிரதான ஊடகங்களில் கவர் செய்யப்படும் வாய்ப்பைப் பெற்று விடும்!ஆனால்... தேச பக்தர்களோ தாங்கள் சமூக விரோத கும்பல்களின் டேஷ் பக்தாஸ் என்ற கிண்டல்களையும் கேலிகளையும் தாங்கிக் கொண்டு, நாயினும் கடையேனாவேன் என்று தங்களைத் தாழ்த்தி வழக்கம் போல் தங்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். உயிரைத் துச்சமென மதித்து, தங்கள் உடல் சுகம், வாழ்வின் சுவை எல்லாவற்றையும் துறந்து, அடியும் வலியும் நிறைந்ததாய் வாழ்ந்து முடிவு கண்ட வாஞ்சி போன்ற தியாகத் திருவுள்ளங்களுக்கு, கல்லடியும் சொல்லடியும் பட்டு கரைந்து போ
புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!

உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள்
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது... பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்... சென்னையைப் பற்றி சொன்னார்... சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார் எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்... திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்.. பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்... ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்... ( பிருங்கி மலை பரங்கிமலையாகி, தோமையர் மலையான கதையை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்...) என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது... எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அரசியல், உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், கட்டுரைகள்
பத்திரிகைத் துறைக்கு வந்த புதிதில்... நேரம் கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வயதானவர்கள், மூத்தவர்கள், சுதந்திரப் போர் வீரர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என... அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்து பேசி விட்டு வருவது ஒரு வழக்கமாயிருந்தது. அவர்களின் அனுபவங்கள், கதைகள், இலக்கிய உலகு, அந்நாளைய அரசியல் சூழல் என்று பலவும் அசை போடப்படும்! இவ்வாறு எத்தனையோ பேர் வீடுகளுக்குச் சென்று கதைத்திருந்தாலும், சிலர் இன்னும் என் மனசில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் கு.ராஜவேலு, தேவநாராயணன், பி.சி.கணேசன் என சிலர் மிக முக்கியமானவர்கள்!2003 என்று நினைக்கிறேன். ஒரு ஞாயிறு!அன்றும் அப்படித்தான்! விருகம்பாக்கம் பக்கம் போவோம் வா... என்றார் நண்பர். வழக்கம்போல் என் வண்டியில் அவரின் வீட்டுக்குச் சென்றோம்.விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருந்த அவரின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொ
சிந்தனைக்கோட்டம்

சிந்தனைக்கோட்டம்

கட்டுரைகள்
எனக்கு நேரடியாகப் பரிச்சியம் இல்லாதவர், என் முகநூல் நண்பரும் அல்லர். அவர் தான் திரு .கே.எஸ்.ராதாகிருஷ்ணன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். ஆனால், சமூக வலைத் தளங்களில் மிகவும் பொதுப்படையாக அரசியல் வரலாற்றுப் பதிவுகளும், இடையிடையே இலக்கியப் பதிவுகளும் இட்டு வருபவர். அவர் பதிவுகள் பல என்னைக் கவர்ந்தவை. இன்று ஓர் ஆங்கிலக் கவிதையை நினைவூட்டி அவர் இட்டிருந்த பதிவு என்னை ஈர்த்தது."The boast of heraldry, the pomp of power, And all that beauty, all that wealth e'er gave, Awaits alike the inevitable hour. The paths of glory lead but to the grave."By Thomas Gray, Elegy Written in a Country Churchyard.மேற்சொன்ன வரிகள் இடம்பெற்ற அந்த அமர கவிதையை, ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை விஸ்வம் படித்துக் காட்டி விளக்க; சுகி.சிவம், சு. ரவி, கண்ண

மங்கலதேவி கண்ணகிக்கோட்ட வழக்கு

கட்டுரைகள், கட்டுரைகள்
இன்று 10-05-2017சித்திரா பௌர்ணமி. மங்கலதேவி கண்ணகி கோட்டம். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு .சித்திரா பௌர்ணமி யொட்டி கம்பம் பள்ளத்தாக்கில் வண்ணாத்திப் பாறை அருகே அமைந்துள்ள “கண்ணகி கோட்டத்திற்கு” தமிழகத்திலிருந்து பயணிகள் செல்வது வாடிக்கை.1975லிருந்து கேரளா கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இங்கே வழிபடச் செல்லும் தமிழக மக்களை கேரள காவல் துறையினர் தாக்குவதும், தடுப்பதுமாக தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருந்தனர்.தேவையில்லாத பதட்டங்களை உருவாக்கி, வழிபடச் செல்லும் தமிழர்களை பீதிக்கு உட்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக கேரள காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனை தீவிரத்தை அடைந்த போது, கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது என்ற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன்.
நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், லைஃப் ஸ்டைல்
நானும் அவளும்! * சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். அந்தப் பார்வையில் ஏக்கமா? ஏளனமா? அனுமானிப்பதில் அப்படி ஒன்றும் பிரம்மப் பிரயத் தனம் இல்லைதான்! திருமணம் ஆனவராயிருந்தால் ஏக்கப் பார்வை! ஆகாதவராயிருந்தால் ஏளனப் பார்வை!புறநகர் மின்சார ரயில் வண்டிப் பயணத்தில் ஒரே பெட்டியில் தினமும் வந்துபோனதில், ஒரு நட்பு வட்டம் சேர்ந்திருந்தது! ஒவ்வொரு நாளும் இண்டர் நேஷனல் லெவலில் டீப் டிஸ்கஷனெல்லாம் நடக்கும். சில நேரம் காரசாரமாக! சில நேரம் யம்மியா கிரிஸ்பியா!அன்று இந்த ரிங்டோனே விவாதத்தை தொடங்கி வைத்தது. ஒருவர் அப்படி என்ன இதில் சிறப்பு என்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்காதா? அது மாதிரி இது என் கல்யாணக் கனவு ஆசை என்றேன்! பிடித்துக் கொண்டார்கள். அங்கே கனவுகளின் கோட்டை ஒ
நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

Featured, உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், புகார் பெட்டி
தமிழர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! நல்ல நூல்களை, இதழ்களை, ஆரோக்கியச் சிந்தனைகளை வளர்க்கும் பதிவுகளை படித்து, அறிவை வளர்த்துக் கொள்வதும் ஞானம் கூடப் பெறுதலும் அருகி வருகிறது. உலகியல், ஆன்மிக அறிவு மங்கி... அரசியல், மதத் துவேஷ வெறி மதி மயக்கத்தால் கூடப் பெற்று வருகிறது! விளைவு- விலை கொடுக்க வேண்டிய நிலை! மக்கள் இப்படி இருக்க, அரசு அதற்குச் சளைத்ததா என்ன? நூலகங்களுக்கான இதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டன.இந்த நிதியாண்டில் இருந்து தமிழ் இதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. 6 தமிழ் நாளிதழ்கள், 4 ஆங்கில செய்தித்தாள்கள், 12 வார மாத இதழ்கள் வாங்கும் நூலகங்களில் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாம்!மேலும், கடந்த ஒன்றரை வருடங்களாகவே நூலகங்களுக்கு வழங்கப்பட்ட இதழ்களுக்கான தொகை, வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பெரும்
செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

கட்டுரைகள், நிகழ்ச்சிகள், நூலரங்கம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 5, 2017 அன்று, சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் கண்ணகி தெருவின் இல்லமொன்றில் எளிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 90 வயதை எட்டிய அந்த மனிதரது அன்பில் திளைக்கவும், வாழ்த்தவும், அவரிடத்தில் ஆசி பெற்றுச் செல்லவும்  குழுமி இருந்த நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் நிறைந்திருந்தது அவை. அந்நாளைய வடாற்காடு மாவட்டத்தின் சிற்றூரான சொரையூரில் பிறந்து வளர்ந்து உயர்நிலைக் கல்வி மட்டிலும் முடித்து வருவாய்த் துறையில் பணிக்குச் சேர்ந்து தமது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி ஓய்வு பெற்ற எங்கள் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள்தான் இந்த பெருமைக்குரியவர். இந்த உற்சாகமான பொழுதில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்ற பேரார்வத்தில் மிகக் குறுகிய நேரத்தில் இறங்கிய முயற்சிக்கு நூல் வடிவம் அளித்ததில் பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர