Category: நூலரங்கம்

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்!

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்!

இலக்கியம், உலகம், நிகழ்ச்சிகள், நூலரங்கம்
வாஷிங்டன்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த நூலில் தான் மோடியின் தலைமை, அர்ப்பணிப்பு உணர்வு என பல விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நூலில், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவரும் நாடும் சந்தித்த சவால்கள், மோடி செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அலசப்பட்டுள்ளன. இவை தொடர்பான படங்களுடன் கூடிய விளக்கங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலின் பிரதியை அமெரிக்க எம்.பி.,க்களான மார்கன் கிரிஃப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேலும், மோடி ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய அவர்கள், அவரின் செயல்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான 'சுலாப்' நிறுவனர் பின்டேஸ்வர் பதக் இந்த நூலை எ
நீயும் நானும்: கோபால்தாசனின்  கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், நூலரங்கம்
நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை!***சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்! நீயும் நானும் - ஏதோ ஒரு சிறு கவிதைக்கான தலைப்பாக நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். சிறு கதையைக் கூட குறுநாவலாக சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்று கவிஞர் கோபால்தாசன் இதில் நிரூபித்திருக்கிறார்.அவளும் அவனும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பு முழுதாக இழுத்துச் செல்கிறது. காதலா நட்பா என்று திகைக்க வைக்கும் பேச்சுக்கள். முடிவு அந்த இணைக் கதாபாத்திரங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டு விடுகிறது ஒரு கட்டத்தில்!இது ஒரு காதல் கவிதை என்று எடுத்தவுடனே தோன்றுகிறது. கதாபாத்திரங்களின் பெயரை எங்குமே சொல்லாமல், நான், அவள் என்று கவிஞரே தன்னை முன்னிலைப் படுத்தி அவளை அறிமுகப் படுத்தி கவிதையை அத்தியாயமாக நகர்த்துகிறார்.சினிமாக் கதாச
எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

உங்களோடு ஒரு வார்த்தை, நிகழ்ச்சிகள், நூலரங்கம்
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதுதான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி என்று அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார்.மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியது:எழுத்துலகில் நல்லெழுத்து வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக்கிடந்தது.ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை
செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

கட்டுரைகள், நிகழ்ச்சிகள், நூலரங்கம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 5, 2017 அன்று, சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் கண்ணகி தெருவின் இல்லமொன்றில் எளிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 90 வயதை எட்டிய அந்த மனிதரது அன்பில் திளைக்கவும், வாழ்த்தவும், அவரிடத்தில் ஆசி பெற்றுச் செல்லவும்  குழுமி இருந்த நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் நிறைந்திருந்தது அவை. அந்நாளைய வடாற்காடு மாவட்டத்தின் சிற்றூரான சொரையூரில் பிறந்து வளர்ந்து உயர்நிலைக் கல்வி மட்டிலும் முடித்து வருவாய்த் துறையில் பணிக்குச் சேர்ந்து தமது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி ஓய்வு பெற்ற எங்கள் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள்தான் இந்த பெருமைக்குரியவர். இந்த உற்சாகமான பொழுதில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்ற பேரார்வத்தில் மிகக் குறுகிய நேரத்தில் இறங்கிய முயற்சிக்கு நூல் வடிவம் அளித்ததில் பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர
‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

சென்னை, நிகழ்ச்சிகள், நூலரங்கம்
மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது. அவர் சினி