Category: நிகழ்ச்சிகள்

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்!

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்!

இலக்கியம், உலகம், நிகழ்ச்சிகள், நூலரங்கம்
வாஷிங்டன்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த நூலில் தான் மோடியின் தலைமை, அர்ப்பணிப்பு உணர்வு என பல விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நூலில், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவரும் நாடும் சந்தித்த சவால்கள், மோடி செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அலசப்பட்டுள்ளன. இவை தொடர்பான படங்களுடன் கூடிய விளக்கங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலின் பிரதியை அமெரிக்க எம்.பி.,க்களான மார்கன் கிரிஃப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேலும், மோடி ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய அவர்கள், அவரின் செயல்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான 'சுலாப்' நிறுவனர் பின்டேஸ்வர் பதக் இந்த நூலை எ
கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!

கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!

இலக்கியம், உள்ளூர் செய்திகள், கவிதைகள், சென்னை, நிகழ்ச்சிகள்
கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். நினைவு மண்டபத்தின் திறப்புவிழாவை ஒட்டி அப்துல் கலாமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகக் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.பாடலுக்கான குறுந்தகடு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாடலை வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் குறுந்தகட்டைப் பெற்றுக்கொண்டனர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவன மு
நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா

நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா

ஆன்மிகச் செய்திகள், நிகழ்ச்சிகள்
குமராட்சியை அடுத்த திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை நடைபெற்றது.ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை தொன்று தொட்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று 29-05-2017  திங்கள்கிழமை காலை சிவபூஜையுடன் தொடங்கி ஸ்ரீ கணபதி ஹோமம்,ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்தங்களுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் மதியம் அன்னதானமும் நடைபெற்றதுகாட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் கோயிலில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா, திருமுறை ரத்தினம் விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.திருப்பனந்தாள் காசி மட கிருஷ்ணகிரி பெ.கு.வரதராஜன் அறக்கட்டளை, ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த விழாவில், அன்னதான டிரஸ்ட் நிறுவனச் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் வ
எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

உங்களோடு ஒரு வார்த்தை, நிகழ்ச்சிகள், நூலரங்கம்
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதுதான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி என்று அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார்.மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியது:எழுத்துலகில் நல்லெழுத்து வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக்கிடந்தது.ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை
செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

கட்டுரைகள், நிகழ்ச்சிகள், நூலரங்கம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 5, 2017 அன்று, சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் கண்ணகி தெருவின் இல்லமொன்றில் எளிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 90 வயதை எட்டிய அந்த மனிதரது அன்பில் திளைக்கவும், வாழ்த்தவும், அவரிடத்தில் ஆசி பெற்றுச் செல்லவும்  குழுமி இருந்த நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் நிறைந்திருந்தது அவை. அந்நாளைய வடாற்காடு மாவட்டத்தின் சிற்றூரான சொரையூரில் பிறந்து வளர்ந்து உயர்நிலைக் கல்வி மட்டிலும் முடித்து வருவாய்த் துறையில் பணிக்குச் சேர்ந்து தமது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி ஓய்வு பெற்ற எங்கள் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள்தான் இந்த பெருமைக்குரியவர். இந்த உற்சாகமான பொழுதில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்ற பேரார்வத்தில் மிகக் குறுகிய நேரத்தில் இறங்கிய முயற்சிக்கு நூல் வடிவம் அளித்ததில் பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர
வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

இலக்கியம், கட்டுரைகள், நிகழ்ச்சிகள், நெல்லை
திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம், 'கல்யாண்ஜி' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962ல் இருந்து எழுதிவருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்
தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை

தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை

இலக்கியம், சென்னை, தமிழகம், நிகழ்ச்சிகள்
தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆக்கபூர்வமான கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கில் தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெற்றது. இந்தச் சாதனையை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் நிகழ்த்தினார்.இதன் நிறைவு விழாவில், நீதிபதி ராமநாதன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விஜயராகவன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் சேயோன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியை தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.விழாவில் நீத
‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

சென்னை, நிகழ்ச்சிகள், நூலரங்கம்
மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது. அவர் சினி

மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

நிகழ்ச்சிகள்
சென்னை: எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்ற இந்த நாவலின் மறுபதிப்பை எழுத்தாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, எழுத்தாளர் சாரு நிவேதிதா பெற்றுக் கொண்டார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் செங்கோட்டைஸ்ரீராம், சென்னை வானொலி முன்னாள் இயக்குனர் விஜய திருவேங்கடம் ஆகியோர் நாவலைக் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினர்.   ந.சி.சு குடும்பத்தினர் சார்பில் நடேசன், கிருஷ்ணன், சுந்தரம், தியாகராஜன், திருமதி பாலா, வத்சலா, கிரிஜா, உஷா, சாரதா ஆகியோருடன் வாசக அன்பர்கள் பலர் கலந்து கொண்னர். சுந்தரம் நன்றி கூறினார் தேவருலகான வானகத்து ராம ராஜ்யத்தை மண

காளி மகாசக்தி பற்றி கீழாம்பூர் பேச்சு!

நிகழ்ச்சிகள்
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீ நிறைந்தாய்,தீது நன்மை யெல்லாம் - காளி! -தெய்வ லீலை யன்றோ?...பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும் ஆனாய்,போத மாகி நின்றாய் - காளி - பொறியை விஞ்சி நின்றாய் . சக்தியின் வடிவத்தை-ஒளியை கட்டுக் கடங்காத தமிழ் ஓட்டத்தில் சொன்னவர் மகாகவி பாரதியார்! காளியின் தோற்றத்தை- மாட்சியை - பரிபாலனத்தைப் பாட்டு வடிவத்தில் பொரிந்து கொட்டியவர் எட்டயபுரக் கவிஞன் பாரதி. இன்று இரவு டெப்போ ரோடு ருத்ர காளியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனின் பேச்சு, மகா காளியையும், மகாகவி பாரதியையும் சுற்றிச் சுழன்ற பேச்சு! வழக்கமான பாரதி இன்று அங்கு வரவில்லை. ஆன்மீக பாரதியாக வந்தான். ஆனால், பாரதியின் கவிதைகளில் ஆன்மிக உணர்வு இல்லாதது எங்கிருக்கின்றன! ஆலய நிர்வாகக் குழுவின் தலைவர் திரு.ராமச்சந்திரன் கீழாம்பூருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ய, நிர்வாகக் குழுவைச்