Category: உங்களோடு ஒரு வார்த்தை

வானொலி ஒலிபரப்புத் துறையில் சாதித்த ஆளுமை பி.ஆர்.குமார்

வானொலி ஒலிபரப்புத் துறையில் சாதித்த ஆளுமை பி.ஆர்.குமார்

இலக்கியம், உங்களோடு ஒரு வார்த்தை
சென்னை வானொலி நிலையத்தில் தலைமை இயக்குனராக இருந்த பி.ஆர்.குமார் Kumar Radhakrishnan Balasubramanianகாலமாகிவிட்ட தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் வானொலியில் பணிபுரியும் நண்பர் ராமஸ்வாமி சுதர்ஸன் Sudarsan.படித்ததும் கனத்த மௌனம் ஆட்கொண்டது. சில நிமிடங்கள் அவர் குறித்த நினைவுகள்தான் என்னில் நிரம்பின.2000 ஆவது வருடம். நான் 24 வயதான அரைகுறை. என் பத்திரிகையுலக துவக்க கட்டத்தில் ஒரு நாள் மயிலாப்பூரில் நான் குடியிருந்த நாட்டு சுப்புராயன் தெருவில் மறுமுனையில் இருந்த டாக்டர் சேயோன் இல்லத்துக்கு தீபாவளி மலருக்காக ஒரு கட்டுரை கேட்டுச் சென்றிருந்தேன். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, சொந்த ஊர் பேச்சு வந்தது. அதே திருநெல்வேலி, தச்சநல்லூர் என்றெல்லாம் ஒருவர் பின் ஒருவராகப் பேசிக் கொண்டிருந்ததில், அவர் சொன்னார்... தம்பி உன் குரலும் கலகலப்பும் நல்லா இருக்கே... நீ நம்ம ஸ்டேஷன்ல பார்ட் டைம் அனௌன்ஸர
நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

ஆன்மிகக் கட்டுரைகள், உங்களோடு ஒரு வார்த்தை, சைவ கோயில்கள்
அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாரின் ஊர்க் கோவில். அவர் சொல்லிக்கேட்ட அழகில் மயங்கி, சென்று பார்த்தது.) இந்தக் கோவிலைத் தேடிப் போய், ஓமாநல்லூர் என்றொரு ஊரில் ஒரு சிவன் கோவில் கண்ணில் பட்டது. அதையும் பார்த்து வந்தேன். இந்த தருவை கோவிலில் முருகப் பெருமானைப் பார்த்த மாத்திரத்தில் மனத்தில் பெருமான் அமர்ந்து கொண்டார். ஒரே கல்லில் ஆன விக்ரஹம். மயில், மீதமர்ந்த நிலையில் முருகன், கையில் வேலும் கொடியும் என திருவாசியுடன் அமைந்த ஒரே கல்லிலான உருவம். ... தலத்தின் கட்டுரை இங்கே...தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.
காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

உங்களோடு ஒரு வார்த்தை, பொது தகவல்கள்
இன்று ... வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட மூத்த நண்பர் எம்.எஸ்.அப்துல் காதர் இன்று மறைந்தார் என்ற செய்திதான் அது... இன்று (27.6.2017) காலை சுமார் 10.47 மணியளவில் இயற்கை அவர் உயிரைப் பறித்துக் கொண்டது.1954ல் பிறந்தவர். ஆசிரியப் பணியில் இருந்தார். என்பள்ளிக்கூட வயதில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைத்து அவருக்கு நான் அறிமுகமானேன். அதன் பின்னும் சிற்சில கூட்டங்களில் சந்திப்பேன். நான் மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி.யின் பெயரனார் தீப.நடராஜன் ஐயா இல்லத்தில் வைத்து சந்தித்தேன். அந்த அரை நாளில் ஒரு தீபாவளி மலருக்கான அனைத்து விஷயங்களை அந்த இல்லத்தில் இருந்தபடியே முடித்தேன். மஞ்சரி தீபாவளி மல
நீயும் நானும்: கோபால்தாசனின்  கவிதை நூல் விமர்சனம்!

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், நூலரங்கம்
நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை!***சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்! நீயும் நானும் - ஏதோ ஒரு சிறு கவிதைக்கான தலைப்பாக நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். சிறு கதையைக் கூட குறுநாவலாக சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்று கவிஞர் கோபால்தாசன் இதில் நிரூபித்திருக்கிறார்.அவளும் அவனும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பு முழுதாக இழுத்துச் செல்கிறது. காதலா நட்பா என்று திகைக்க வைக்கும் பேச்சுக்கள். முடிவு அந்த இணைக் கதாபாத்திரங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டு விடுகிறது ஒரு கட்டத்தில்!இது ஒரு காதல் கவிதை என்று எடுத்தவுடனே தோன்றுகிறது. கதாபாத்திரங்களின் பெயரை எங்குமே சொல்லாமல், நான், அவள் என்று கவிஞரே தன்னை முன்னிலைப் படுத்தி அவளை அறிமுகப் படுத்தி கவிதையை அத்தியாயமாக நகர்த்துகிறார்.சினிமாக் கதாச
வில்பவரும் வில்லின் பவரும்!

வில்பவரும் வில்லின் பவரும்!

ஆன்மிகக் கட்டுரைகள், உங்களோடு ஒரு வார்த்தை
நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால் இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ? கம்பன் காட்டிய ஐயன் உலகநண்பன் ஆச்சரியப்பட்டது சரியே! அவள் அன்பில் கடைக்கண் காட்டினாள்.. இவன் ’பவரில்’ உடைந்தது வில்.. அடடே... கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ... உடைந்து போகிறது என் ’வில்பவர்’!இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த பதில் கருத்து...பெண்ணை தேர்தெடுக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டது, சிவதணுசுவை நான் ஏற்றுதல் அதில் ஶ்ரீ ராமன் வெற்றியும் பெற்று விட்டார், ஆனாலும் ஏன் சிவதணுசு உடைந்தது. சீதையை ஶ்ரீ ராமனும் கரம்மும் பிடித்தார்.சிவதணுசு உடையாமலிருந்தால் பின்னாளில் யாராவது ,நான் ஏற்றுகிறேன் என்று வந்தால் சீதா ராமர்க்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும். ஶ்ரீ ராமர் விட்ட அம்பு இராவணணின் இதயத்தில் சீதையை நினைத்த எண்ணத்தை தேடி அழித்தது. தாயாருக்கு எதனாலும் அபகீர்த்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக வில் உடைபட்டதா?
பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

உங்களோடு ஒரு வார்த்தை, உரத்த சிந்தனை, கட்டுரைகள், கட்டுரைகள், பொது தகவல்கள்
ஜூன் மாதம் இன்று 7ம் தேதி ... இதோ வருகிறது 17 ஆம் தேதி.வழக்கம்போல், கிறிஸ்துவ மிஷனரிகளின் உதவி பெற்ற நாய்கள் வாலாட்டத் துவங்கிவிடும். அவர்களில் சில தமிழர், ஆதி தமிழர் பெயர் போட்டுக்கொள்ளும் லெட்டர் பேட் இயக்கங்களும் ஆஷ் துரை சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அப்படியே கொஞ்சம் கவர் கொடுத்து, பிரதான ஊடகங்களில் கவர் செய்யப்படும் வாய்ப்பைப் பெற்று விடும்!ஆனால்... தேச பக்தர்களோ தாங்கள் சமூக விரோத கும்பல்களின் டேஷ் பக்தாஸ் என்ற கிண்டல்களையும் கேலிகளையும் தாங்கிக் கொண்டு, நாயினும் கடையேனாவேன் என்று தங்களைத் தாழ்த்தி வழக்கம் போல் தங்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். உயிரைத் துச்சமென மதித்து, தங்கள் உடல் சுகம், வாழ்வின் சுவை எல்லாவற்றையும் துறந்து, அடியும் வலியும் நிறைந்ததாய் வாழ்ந்து முடிவு கண்ட வாஞ்சி போன்ற தியாகத் திருவுள்ளங்களுக்கு, கல்லடியும் சொல்லடியும் பட்டு கரைந்து போ
புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!

உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள்
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது... பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்... சென்னையைப் பற்றி சொன்னார்... சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார் எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்... திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்.. பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்... ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்... ( பிருங்கி மலை பரங்கிமலையாகி, தோமையர் மலையான கதையை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்...) என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது... எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அரசியல், உங்களோடு ஒரு வார்த்தை, கட்டுரைகள், கட்டுரைகள்
பத்திரிகைத் துறைக்கு வந்த புதிதில்... நேரம் கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வயதானவர்கள், மூத்தவர்கள், சுதந்திரப் போர் வீரர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என... அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்து பேசி விட்டு வருவது ஒரு வழக்கமாயிருந்தது. அவர்களின் அனுபவங்கள், கதைகள், இலக்கிய உலகு, அந்நாளைய அரசியல் சூழல் என்று பலவும் அசை போடப்படும்! இவ்வாறு எத்தனையோ பேர் வீடுகளுக்குச் சென்று கதைத்திருந்தாலும், சிலர் இன்னும் என் மனசில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் கு.ராஜவேலு, தேவநாராயணன், பி.சி.கணேசன் என சிலர் மிக முக்கியமானவர்கள்!2003 என்று நினைக்கிறேன். ஒரு ஞாயிறு!அன்றும் அப்படித்தான்! விருகம்பாக்கம் பக்கம் போவோம் வா... என்றார் நண்பர். வழக்கம்போல் என் வண்டியில் அவரின் வீட்டுக்குச் சென்றோம்.விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருந்த அவரின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொ
மன்மதனை உயிர்ப்பித்த மகேசன் தோற்றம்!

மன்மதனை உயிர்ப்பித்த மகேசன் தோற்றம்!

உங்களோடு ஒரு வார்த்தை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் விரும்பி ஒரு கணமேனும் பார்த்து ரசித்து, மனத்தில் தியானிக்கும் சிற்பம் இது.கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இந்தச் சிற்பத்தைக் காணலாம்.தட்சிணாமூர்த்தி வழிபாடு என்ற புத்தகத்தை அடியேன் எழுதியபோது, பல தலங்களில் உள்ள வித்தியாசமான தட்சிணாமூர்த்தி திருவுருவங்களை புகைப்படம் எடுத்து நூலில் பதிவு செய்தேன். அப்படி அந்த நூலுக்காக அடியேன் எடுத்த புகைப்படம் இது.இதன் சிறப்பு - முனிவர்கள் புடைசூழ கல்லால மரத்தினடியில் சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். கால் மீது கால் போட்டு ஆசனத்தின் இருந்தபடி இரு கைகளை ஒரு கால் முட்டியில் வைத்து நோக்கியபடி...மன்மதன் சிவனாரின் தவம் கலைக்க மலர்க்கணை தொடுத்தான். இரு கண் விழித்துப் பார்த்த சிவனாருக்கு தனது முக்கண் நினைவு வந்தது. மூன்றாம் கண்ணைத் திறக்க, பெருநெருப்பு சூழ
திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

ஆன்மிகச் செய்திகள், உங்களோடு ஒரு வார்த்தை
திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர்.  மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் எப்போதுமே இனிமையானதுதான். உடுமலைப்பேட்டை கடந்து சற்று தொலைவில், நீர்வீழ்ச்சி, சிவாலயம், அணைக்கட்டு என தெய்வீக அம்சமும் இயற்கைப் பேரழகும் இணைந்த இடத்தை தவிர்க்கலாகுமோ?திருமூர்த்திமலை சென்றோம். வெள்ளை உடுப்புடன் தியானம் செய்ய பிரமிட் ஆலயத்துள் அமர்ந்தோம்.  இருளில் அமர்ந்து, ஒளியை நினைந்து கைகூடும் தியானத்தில், உள்ளப் பேரொளி உணர்வில் லயித்தது.அதன் பின்னர் பரஞ்சோதி மகானுடன் சற்று நேரம் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய நாட்டு நடப்புகளை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அழகாக விரித்துரைத்தார். அண்டை மாநிலங்களில் மழை பெய்ய வேண்டும் என்று நாம் பிர