வில்பவரும் வில்லின் பவரும்!

0

நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ?
கம்பன் காட்டிய
ஐயன் உலகநண்பன்
ஆச்சரியப்பட்டது சரியே!
அவள் அன்பில்
கடைக்கண் காட்டினாள்..
இவன் ’பவரில்’
உடைந்தது வில்..
அடடே…
கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ…
உடைந்து போகிறது என் ’வில்பவர்’!

vilpower


இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த பதில் கருத்து…

பெண்ணை தேர்தெடுக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டது, சிவதணுசுவை நான் ஏற்றுதல் அதில் ஶ்ரீ ராமன் வெற்றியும் பெற்று விட்டார், ஆனாலும் ஏன் சிவதணுசு உடைந்தது.
சீதையை ஶ்ரீ ராமனும் கரம்மும் பிடித்தார்.

சிவதணுசு உடையாமலிருந்தால் பின்னாளில் யாராவது ,நான் ஏற்றுகிறேன் என்று வந்தால் சீதா ராமர்க்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும்.
ஶ்ரீ ராமர் விட்ட அம்பு இராவணணின் இதயத்தில் சீதையை நினைத்த எண்ணத்தை தேடி அழித்தது.
தாயாருக்கு எதனாலும் அபகீர்த்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக வில் உடைபட்டதா?


இவரின் கருத்துக்கு இப்போது ஒரு பதில் கருத்து…
எல்லாம் திருவடி மகிமைதான்!

ராமன் சிவதனுசில் நாணேற்ற தனுசை நிலை நிறுத்தினான்..
தனுசின் கீழ்ப் பகுதி நிலத்தில் ஊன்றப்பட, அதில் தன் பாதங்களால் நகராமல் பிடித்துக்கொண்டான் ராமன். தனுசின் கீழ்ப் பகுதிக்கு ராமனின் திருவடி தீட்சை கிடைத்தது கண்டு மேல் பகுதி நுனிக்கு பொறாமை வந்துவிட்டது. கூடவே, தானும் அவன் கதியை அடைய வேண்டும் எனும் சத் சிந்தனை மேலோங்கியது. கீழோன் கதி அடைகிறான். மேலோன், நான் மேலேயே உயர்வாய் இருப்பேன் என்று இருந்து கொண்டிருந்தால் ராமன் திருவடி அடையும் பாக்கியம் பெறாமல் போவோமே என்று நினைந்து, பணிவும் சரணாகதியும்தான் பகவானை அடையும் வழி எனப் புரிந்து கொண்டது…
ராமன் வில்லை வளைத்து நாணேற்றத் தொடங்கும்போதே, படக்கென முறிந்து அவன் பாதத்தை எட்டிப் பிடித்து தானும் கதியடைந்தது…

Loading...
பகிர்க
முந்தைய கட்டுரை“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”
அடுத்த கட்டுரைஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி!
பத்திரிகையாளர், எழுத்தாளர். || *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். || * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகாபெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். || * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். சக்தி விகடன் பொறுப்பாசிரியராகவும், தினமணி இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவருக்கு கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. ||