Category: கதைகள்

தவறுக்கான தண்டனை!

தவறுக்கான தண்டனை!

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், கதைகள்
மகா பாரத யுத்தத்தின் முடிவு சமயம்! பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார்.அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.ஒரு ஞானியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அவர் தனது சாவுக்காக பயப்படுபவரும் அல்ல.*கௌரவர்களுக்காக போர் செய்து தோற்றுப் போனதற்காகவோ, அவர்களின் மரணத்திற்காகவோ கலங்குபவரும் அல்ல!அப்படியானால், எதற்காக அழுகிறார் என்ற சந்தேகத்துடன் கிருஷ்ணர் அவரை அணுகினார்.கௌரவர்களும், பாண்டவர்களும், திரௌபதியும உடன் நின்றனர்.""மகாத்மாவே! ஏன் அழுகிறீர்கள்! ஞானியான தங்கள் கண்ணில் நீர் வழிகிறதென்றால், அதற்கு அர்த்தமில்லாமல் இருக்காதே!'' என்றார் கிருஷ்ணர்."கிருஷ்ணா! அறியாதவன் போல் பேசுகிறாயே! எவ்வளவோ இழப்புகள்! பாண்டவர்களுக்காக கடவுளின் அவதாரமாக நீயும் இருக்கிறாய்.ஆனாலும், அவர்களின் கஷ்டம் தீரவில்லை, பிரச்னை
அவன் உகக்கும் ரஸம்

அவன் உகக்கும் ரஸம்

ஆன்மிகக் கட்டுரைகள், கதைகள்
ரங்கநாதன் சந்நிதிக்குச் செல்லும் படிகளொன்றில் உட்கார்ந்த வண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய்மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து இருந்தன. எத்தனையோ நல்லவராய் இருப்பினும் சதா வெற்றிலை போடும் ஒரு பழக்கம் மட்டும் அவருக்கு இருந்ததால் மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது.அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்கிராமத்தையும் வைத்திருந்தார் அரையர்,பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்கிராமம் கிடைத்தது. அதைப் பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்கிராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து மேல் வேஷ்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார்.பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணம் தடவி கிழித்து மென்று சுவைக்கலானார்.இது நடப்பது முதல
தந்தை மகளுக்குச் சொன்ன கதை

தந்தை மகளுக்குச் சொன்ன கதை

கதைகள்
தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர். திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லையென்றால் அந்த சிங்கம் நம்மை தின்று விடும்" என்றாள் ... அதற்கு அப்பா மகளிடம் "அது சிற்பம்தான். ஒன்றும் செய்யாது" என்றார் ... மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்" என்றாள்... தந்தை சொன்னார்... சிங்கத்தின் சிற்பத்தைப் பார்த்ததும் உனக்கு அது தின்றுவிடும் என்று பயம் வந்தது. ஆனால் கடவுளின் சிற்பத்தைப் பார்க்கும் போது நமக்கு அடுத்தவரைக் காப்பாற்றும் கருணையும் அன்பும் ஏற்படும்... நீ சாலையில் போகும்போது பார்த்திருக்கிறாய் அல்லவா... ஊருக்கு ஊர் பஸ் ஸ்டாண்ட்களில் கறுப்பாக கண்ணாடிபோட்டு தாடி வைத்த சிலைகளையும், கையில் புத்தகம் வைத்துக் கொண்டு ஊரில் சுடுகாடு எங்கே இருக்கும் என்று ஒற்றை விரல் காட்டி வ
மனிதாபிமானத்தை தேடி

மனிதாபிமானத்தை தேடி

கதைகள்
எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது என்னை தவிர. நான் மட்டும் கொஞ்சம்.... சரி விடுங்க. எதுக்கு வம்பு.... ரொம்ப சோம்பேறி..... காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்....கொளுத்தும் வெயில்... அதை தாங்கும் சக்தியும் இல்லை... குளிர்சாதன பெட்டி போட்டால் ஆகும் செலவை தாங்கும் தாங்கும் சக்தி இல்லாததால்.... மின்சாரம் என்பது எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாத வேலையில்... காற்றுக்காக ஏங்கி எங்கள் வீட்டின் ஹாலில் தான் படுக்கை....எப்பொழுதும் போல் ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கு அப்பா.... அம்மா..... இங்கே வாங்க...... என்று என் சின்ன சிங்கம் கர்ஜித்தது.  பாருப்பா நம்ம ரூமுல பூனை குட்டி போட்டிருக்கு என்ற எனது மகனின் வியப்புக் குரலுடன் என் காலை பொழுது அன்று மட்டும் விடியல் காலையில் தொடங்கியது. இதை கேட்டதும் கிரிக்கெட் தவிர மற்றவற்றை பற்றி செவிசாய்க்காமல் என்னோடு தூங்கி கொண்டிருந்த எ
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

கதைகள்
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி-கல்கி"கேட்டீரா சங்கதியை'' என்று கேட்டுக் கொண்டே கபாலி சுந்தரமையர் விஜயம் செய்தார். அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது "நெடி' நாழிகைக்கு முன்னமே தெரிவித்துவிட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போது, "கேட்டீரா சங்கதியை?'' என்றார் மறுபடியும். "போட்டால்தானே கேட்கலாம்?'' என்றேன் எரிச்சலுடன். "என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?'' என்று சுந்தரமையர் முகத்தைச் சுளுக்கினார். "சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி நடந்துதான் ஒரு யுகம் ஆகிறதே! பாட்டு என்கிற நாமதேயத்தையே காணோம்; சங்கதிக்கு எங்கே போகிறது?'' என்றேன். "அதைத்தானே சொல்ல வந்தேன்!'' என்றார் சுந்தரமய்யர். "சொல்லிவிட்டுப் போங்களேன்!'' என்றேன். "நம் சங்கீதசபைக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, ஸôர்! அனந்தராமன், ஐ.சி.எஸ். நம் ஊருக்கு மாற்றலாகி வரப்போகிறாராம்!'' என்றா

இளம் பெண்ணின் முடிவு !

கதைகள்
நான் பட்ட படிப்பு முடித்தவன்அவள் பள்ளிக்கூடத்தில் மேல் நிலை 2 மாண்டு படித்து கொண்டிருந்தாள் பாடத்தில் சந்தேகம் என்னிடம்தான்அருகருகே வீடு என்பதால்என் வீட்டிற்கே புத்தகத்தோடு வந்து என்னிடம் பேசி கொண்டே படிப்பாள் இதனால் நண்பர்கள் என்னை கிண்டல் பண்ண இதை அவளிடம் சொண்னேன்அவள் சிரித்து கொண்டே அவர்கள் நமக்குள் இருப்பதைதானே சொண்னார்கள்அதனால் என்ன உண்மை ஒரு நாள் ஊருக்கு தெரியதானே போகிறது பேசினால் பேசட்டும் என்றாள் அவள் என்னை காதலிப்பதை சூசகமாக சொன்னாள் அன்றுமுதல் நானும் அவளை காதலித்தேன்ஆனால்அதை வெளிபடையாக அவளிடம் சொல்ல வில்லை காரணம் அவள் வசதி மேன்மக்கள்என் வீடு கூறை படிப்பிற்கு வாங்கிய கடன் கீழ்மக்கள் என பல காரணங்கள்அவளும் காதலை வெளிபடையாக சொல்ல வில்லை மௌனமாகவே எங்கள் காதல் தொடர்ந்தது சில நாட்களாக அவள் என் வீட்டிற்கு வருவதில்லை என்னை பார்ப்பதில்லைபேசுவதில்லை ஓர்நாள் அவளிடம் கேட்டேன்எனக்கு கல்யாணம்

உதவி! உதவி!

கதைகள்
அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன்.  இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா சொன்னார்கள். ஜார்ஜ் ஸ்டீபன் அவசர அவசரமாக சாப்பிட்டான். அப்பொழுது அம்மா ஜார்ஜிடம், இந்த வேலையாவது உனக்கு கிடைக்கும்படி நடந்துக்கோ. உதவி செய்வது நல்லதுதான். அதற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே என்று சொன்னார்கள். அம்மா, அப்படி சொல்வதிலும் ஒரு காரணம் உண்டு. ஏனெனில் அவன் மிகவும் இரக்ககுணம் நிறைந்தவன். மற்றவர்களுக்கு உதவுவதில் முன் நிற்பான். இதற்குமுன் இரண்டு தரம் அவனுக்கு கிடைக்க இருந்த வேலையை மற்றவர்களுக்கு உதவ போக அந்த வேலையை இழந்துவிட்டான். அதனால் தான் அம்மா அப்படி சொன்னார்கள். ஜார்ஜ் ஸ்டீபன், ராமதூதன் ஆஞ்சநேயரின் பெயரில் மிகவும் நம்பிக்கையுள்ளவன். ஏனெனின் ஆஞ்சநேயர், தன்னை வருத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவி செய்து, ராம தாசனாக
அக்ரஹாரத்து  பூனை -ஜெயகாந்தன்.

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன்.

கதைகள்
அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன். நன்றி:பழைய விகடன் எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும் நினைவுகளும்தானே! நான் பார்த்த ஊரும் - இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முட
பிணக்கு By ஜெயகாந்தன்

பிணக்கு By ஜெயகாந்தன்

கதைகள்
பிணக்கு By ஜெயகாந்தன் 1958-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மெட்டியின் சப்தம் "டக்' "டக்'கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்ளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கையறைக்குள் நுழைவது தெரிந்தது. தன்மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழ்ந்தது கிழவருக்குக் கொஞ்சம் குறும்புதான். கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். "கிரீச்' சென்ற ஒலியுடன் கதவு மூடியதும் மேலே செல்ல முடியாமல் அவரது பார்வை கதவில் முட்டிக் கொண்டது. மூடிய கதவின் மீது ஒரு பெண்ணுருவம் சித்திரம் போல் தெரிந்தது. வயது பதினாறுதான் இருக்கும். மழுங்கச் சீவிப் பின்னிய சிகையில் உச்சி வில்லை, தளர்ந்த

எய்தவன் – கதை சுஜாதா

கதைகள்
எய்தவன்..... பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் 'ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான். குறுகிய சம