Thursday, July 20Dhinasari

உள்ளூர் செய்திகள்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

இந்தியா, உள்ளூர் செய்திகள், கோவை
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.  இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர் அவருக்கு ஒத்துழைததாகக் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது. அயல்நாடுகளால் ஈர்க்கப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தானாக முன்வந்து, மாநில அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை முளையிலேயேக் கிள்ளி எறிய வேண்டும். என் கருத்துப்படி, இவர்களது நடவடிக்கைகள் புதிதல்ல; வைத்திருக்கும் பெயர் மட்டும் தான் புதிது. அந்நிய சக்திகளால் கவரப்பட்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எண்பதுகளிலேயே துவங்கிவிட்டன.  திரு ஜனா.
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

அரசியல், சற்றுமுன், சென்னை, தமிழகம்
  தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைவோர் வெறும் 163 பேர் தான் என்பதும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 35 பேர் மட்டும் தான் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்   தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிக
கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

அரசியல், உள்ளூர் செய்திகள், கோவை
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வரிந்து கட்டியபோது, அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று சொன்ன நடிகர் கமல் ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “முதல்வர் கனவு காண கமல் ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள் தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்த மாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித
ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

அரசியல், சற்றுமுன், சினி நியூஸ், சென்னை
சென்னை: நடிகர் கமல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதை அடுத்து ஆளும் அரசில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் பொய்ப் புகார் கூறுவதாகவும், தைரியமிருந்தால் நிரூபிக்கும்படியும் அமைச்சர்கள் சிலர் பேட்டி அளித்தனர். இதை அடுத்து, ஊழல் புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என்று கமல் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை : வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற
இலவச வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!

இலவச வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!

உள்ளூர் செய்திகள், நெல்லை
செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று செங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை கிராமத்தில் குத்தகை இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் சுமார் 100 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ,அரசு திட்டங்களின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் தாலுகா அலுவலக அதிகாரிகள் நடந்திய பேச்சுவார்த்தையில் வரும் மூன்று நாட்களுக்குள் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சி
ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை. மருத்துவக் குழு அமைக்கப்பட்டதில் மட்டும் ஜெயலலிதா குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவருக்கு மிகவும் வெளிப்படையாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதொடர்பான எல்லா மருத்துவ ஆவணங்களும் தயாராக உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால், அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார். இதனிடையே ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

இந்தியா, சற்றுமுன், சென்னை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற மேல்சபையில் அஇஅதிமுக எம்.பி. டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டதா? அப்படியெனில் அதன் விபரம் மற்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட தகுந்த நடவடிக்கைகள் யாவை? இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே அளித்த பதில்: ஆமாம். தமிழ்நாட்டில் விரைவில் எய்ம்ஸ் மருத
நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

இந்தியா, உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்டு அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அதில் சசிகலா சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் அவர் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிஐஜி ரூபாவும், புகாருக்கு உள்ளான சத்யநாராயண ராவும் பணியிட மாற்
வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா

வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா

Featured, உள்ளூர் செய்திகள், நெல்லை
செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தலைமை தாங்கி வாஞ்சிநாதனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை

வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை

Featured, உள்ளூர் செய்திகள், நெல்லை
நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.