Thursday, July 20Dhinasari

சென்னை

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

அரசியல், சற்றுமுன், சென்னை, தமிழகம்
  தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைவோர் வெறும் 163 பேர் தான் என்பதும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 35 பேர் மட்டும் தான் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்   தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிக
ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

அரசியல், சற்றுமுன், சினி நியூஸ், சென்னை
சென்னை: நடிகர் கமல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதை அடுத்து ஆளும் அரசில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் பொய்ப் புகார் கூறுவதாகவும், தைரியமிருந்தால் நிரூபிக்கும்படியும் அமைச்சர்கள் சிலர் பேட்டி அளித்தனர். இதை அடுத்து, ஊழல் புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என்று கமல் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை : வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற
ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை. மருத்துவக் குழு அமைக்கப்பட்டதில் மட்டும் ஜெயலலிதா குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவருக்கு மிகவும் வெளிப்படையாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதொடர்பான எல்லா மருத்துவ ஆவணங்களும் தயாராக உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால், அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார். இதனிடையே ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

இந்தியா, சற்றுமுன், சென்னை
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற மேல்சபையில் அஇஅதிமுக எம்.பி. டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி எழுப்பினார். டாக்டர் வா. மைத்ரேயன் கேள்வி: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க கோரிக்கை மத்திய அரசுக்கு வைக்கப்பட்டதா? அப்படியெனில் அதன் விபரம் மற்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட தகுந்த நடவடிக்கைகள் யாவை? இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே அளித்த பதில்: ஆமாம். தமிழ்நாட்டில் விரைவில் எய்ம்ஸ் மருத
நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

இந்தியா, உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்டு அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அதில் சசிகலா சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் அவர் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிஐஜி ரூபாவும், புகாருக்கு உள்ளான சத்யநாராயண ராவும் பணியிட மாற்
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

இந்தியா, உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறப்பு அனுமதியின் பேரில் சென்னை சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்களித்தார். கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் பின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க, வாக்குப் பதிவு முற்பகலிலேயே நிறைவடைந்தது. அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

அரசியல், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சென்னை: மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார். நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தன. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கமலஹாசன் என்னை கைது செய்வது என்றால் நடக்கட்டும். சட்டம் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். அத்துடன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமல் ஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர்
ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

Featured, உள்ளூர் செய்திகள், சென்னை
ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார். ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்! தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான வீர.சந்தனம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தனம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக உருவெடுத்தார். கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித
போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

உள்ளூர் செய்திகள், சென்னை
சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச் சேர்ந்த ராமு என்பவரை போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கடந்த மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் தவிர, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் போலியாக தயாரித்து உள்ளார். ராமுவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய உளவுப்பிரிவு காவலர் ஏட்டு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஏட்டு முருகன், ராமுவுடன் கைகோத்து அவர் தயாரிக்கும் போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள்தான் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

இந்தியா, உள்ளூர் செய்திகள், சென்னை
சென்னை: அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.. அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு சென்ற யாத்ரீகள் மீது காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மனிதாபிமானமற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. பயண ஏற்பாடுகளும் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏ