Thursday, July 20Dhinasari

கோவை

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டச் செய்திகள்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

இந்தியா, உள்ளூர் செய்திகள், கோவை
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.  இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர் அவருக்கு ஒத்துழைததாகக் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது. அயல்நாடுகளால் ஈர்க்கப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தானாக முன்வந்து, மாநில அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை முளையிலேயேக் கிள்ளி எறிய வேண்டும். என் கருத்துப்படி, இவர்களது நடவடிக்கைகள் புதிதல்ல; வைத்திருக்கும் பெயர் மட்டும் தான் புதிது. அந்நிய சக்திகளால் கவரப்பட்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எண்பதுகளிலேயே துவங்கிவிட்டன.  திரு ஜனா.
கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

அரசியல், உள்ளூர் செய்திகள், கோவை
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வரிந்து கட்டியபோது, அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று சொன்ன நடிகர் கமல் ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “முதல்வர் கனவு காண கமல் ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள் தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்த மாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித
கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

உள்ளூர் செய்திகள், கோவை, சற்றுமுன், தமிழகம்
  கோவை: மே மாதம் 9ம் தேதி முதல் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நாளை கோல்கத்தா அழைத்துச் செல்லப் படுவார் என்று தெரிகிறது. முன்னதாக, கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு  உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் நிறைவு பெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறைத் தண்டனை பெற்ற முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற சாதனையுடன், தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனவும் பெயர் கிடைத்தது நீதிபதி கர்ணனுக்கு. ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த கர்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதனால
காட்டு யானை தாக்கி 4 பேர் பலி: கோவை அருகே சோகம்!

காட்டு யானை தாக்கி 4 பேர் பலி: கோவை அருகே சோகம்!

உள்ளூர் செய்திகள், கோவை
கோவை : கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை தாக்கியதில் இதுவரை சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். போத்தனூர் கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி, வீட்டின் வெளியே படுத்திருந்த சிறுமி மற்றும் மூதாட்டி உயிரிழந்தனர். முன்னதாக இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்தனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் யானை ஊருக்குள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். யானையை பிடிப்பதற்காக யானைகள் முகாமில் இருந்து 4 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையை துப்பாக்கியால் சுட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயாராக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகா
மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!

மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!

உள்ளூர் செய்திகள், கோவை, சற்றுமுன்
சென்னை: 83 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பணியைத் தொடங்கி வைக்கிறார். மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது. இந்த அணை கட்டப்பட்ட பின்னர் இன்று தூர்வாரும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேட்டூர் அணை நீரால், தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் வசதி பெறுகிறது. அணை தூர்வாரப்படாததால் வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக, 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாம். இதனால் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவில் தண்ணீரை சேமிக்க இயலவில்லை. இந்நிலையில், வாப்காஸ் நிறுவனம் மூலம் வண்டல் மண் படிந்துள்ள இடங்கள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வும், அவற்றை அப்புறப்படுத்தும் முறைகளும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் அணையில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்
கோவையில் மிளகாய்ப் பொடி தூவி ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை

கோவையில் மிளகாய்ப் பொடி தூவி ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை

உள்ளூர் செய்திகள், கோவை
  கோவை: கோவை அருகே நகை பட்டறை தொழிலாளியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கெம்பட்டி காலணி பகுதியைச் சேர்ந்த குணசேகரன், அப்பகுதியில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் நாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் நகை செய்யும் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை நாகராஜன் மற்றும் சரவணன் நகை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் சரவணன் டீ வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பட்டறையினுள் புகுந்த 3 பேர், நாகராஜின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியும், கத்தியால் தாக்கியும், கடையினுள் இருந்த ஒன்றரை கிலோ எடையிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு, மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருப்பதற்காக கடை முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு அங்கிருந்த
தமிழ் தமிழுணர்வு என்று பேசுபவர்களால் ரஜினி காயம்பட்டுள்ளார்: எச். ராஜா

தமிழ் தமிழுணர்வு என்று பேசுபவர்களால் ரஜினி காயம்பட்டுள்ளார்: எச். ராஜா

உள்ளூர் செய்திகள், கோவை, சற்றுமுன்
ஈரோடு: நடிகர் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். அவ்வப்போது பேசவும் செய்தார். அவரது முதல்நாள் பேச்சே அரசியல் கலந்து இருந்தது. இதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அவரது பேச்சை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் அதிகம் பரவின. இதனால் வருத்தமடைந்த ரஜினி, நேற்றைய தமது பேச்சின் போது, வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ், தமிழுணர்வு என்று பேசுபவர்களால் நடிகர் ரஜினிகாந்த் காயம்பட்டுள்ளது தெரியவருகிறது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஸ்டம் கெட்டுப்போனதாக கூறும் ரஜினி, அதனை கெடுத்தது யார் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், ஆன்மிகம், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை
சென்னை” சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார். கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி
அன்புமணி ராமதாசுக்கு திடீர் நெஞ்சுவலி! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

அன்புமணி ராமதாசுக்கு திடீர் நெஞ்சுவலி! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

உள்ளூர் செய்திகள், கோவை, சற்றுமுன்
தர்மபுரி: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு வந்தார். அங்கே கட்சி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் சில நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். சிகிச்சைக்குப் பின்னர் அன்புமணி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்குக் காரணம் சமூகவிரோதிகளே: கோவை ஆணையர்

கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்குக் காரணம் சமூகவிரோதிகளே: கோவை ஆணையர்

News, அரசியல், உள்ளூர் செய்திகள், கோவை, சற்றுமுன்
கோவை: கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்கும் காரணம் சமூக விரோதிகளே! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என, கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார். கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கோவையில் ரேக்ளா பந்தயம் போது கலவரம் நடந்ததற்கு சமூக விரோத சக்திகளே காரணம். கலவரத்திற்கு காரணமாக சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இணைய தளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றை இளைஞர்கள் நம்ப வேண்டாம். ஜல்லிக்கட்டு போராட்டம் போது புதிய நட்புகள் கிடைத்து இருக்கும். குறிப்பிட்ட போன் எண்களை கொடுத்து பேச சொல்லி வலியுறுத்துவார்கள். அந்த புதிய நட்புகள் விஷயத்தில் இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நட்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். - என்று கூறினார்.