Category: கட்டுரைகள்

கச்சேரி அனுபவங்கள்

கச்சேரி அனுபவங்கள்

இசை, கட்டுரைகள், விமர்சனம்
பாடாய்ப் படுத்திய வான் மழை சற்றே ஓய்ந்து பாட்டால் படுத்தும் இசை மழை சென்னையைக் கலக்கப் போகும் டிசம்பர் சீசன் வந்துவிட்டது. மார்கழி மகோத்ஸவம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இறைவனுக்கு உகந்த மாதமாயிற்றே! அவன் நினைவால் அவன் புகழ்பாடி உய்வதற்கு உகந்த மாதமும் கூட!படுத்தும் இசை என்று குறிப்பிட ஒரு காரணமும் உண்டு. திரைத்துறையில் பாட்டா மெட்டா என்று பட்டி மன்றம் நடந்த காலம் போய், சவுண்ட் எபட்டுக்கு ஏற்ற ஒற்றை வார்த்தைகளால் பாடல்கள் வெளிவரும் முன்னேற்றம் கண்டுள்ளது இப்போது! இசைத்துறையிலும் இப்படியோர் புதுமை ஏற்பட்டு வருகிறது... மெல்ல மெல்ல... நாளை எப்படியோ? தாளத்திற்கு ஏற்ப குரல் வளத்திற்கு ஏற்ப, பாடல்களைப் பதம் பிரித்து அவர் பாட்டுக்குப் பாடும் போக்கை சிலர் கையாண்டு வருகின்றனர். விவரம் அறிந்த பழுத்த இசை ரசிகர்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே மனம் நொந்து இவற்றை என்னிடம் சொன்னதுண்டு.இசைக்கு ம