Thursday, July 20Dhinasari

அரசியல்

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியமே தராமல் அதை உயர்த்தி என்ன பயன்?

அரசியல், சற்றுமுன், சென்னை, தமிழகம்
  தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைவோர் வெறும் 163 பேர் தான் என்பதும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 35 பேர் மட்டும் தான் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்   தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிக
கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

அரசியல், உள்ளூர் செய்திகள், கோவை
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வரிந்து கட்டியபோது, அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று சொன்ன நடிகர் கமல் ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “முதல்வர் கனவு காண கமல் ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள் தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்த மாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித
ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு மக்களிடம் கமல் கோரிக்கை!

அரசியல், சற்றுமுன், சினி நியூஸ், சென்னை
சென்னை: நடிகர் கமல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதை அடுத்து ஆளும் அரசில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் பொய்ப் புகார் கூறுவதாகவும், தைரியமிருந்தால் நிரூபிக்கும்படியும் அமைச்சர்கள் சிலர் பேட்டி அளித்தனர். இதை அடுத்து, ஊழல் புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என்று கமல் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை : வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற
இந்து கடவுளர்கள் குறித்து சமாஜ்வாடி எம்பி சர்ச்சைப் பேச்சு!

இந்து கடவுளர்கள் குறித்து சமாஜ்வாடி எம்பி சர்ச்சைப் பேச்சு!

அரசியல், இந்தியா, சற்றுமுன்
  நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்து கடவுள்கள் பற்றிய சமாஜ்வாடி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தில்லி மாநிலங்களவையில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகள் பற்றி இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், இந்து கடவுளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார். நரேஷ் அகர்வாலின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். அவை முன்னவரான நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘‘நரேஷ் அகர்வால் தெரிவித்த கருத்தை, சபைக்கு வெளியே பேசி இருந்தால், அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்க முடியும்’’ எனக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்
சுடிதார், கையில் பை: சிறையில் ஷாப்பிங் போகிறாரோ சசிகலா?

சுடிதார், கையில் பை: சிறையில் ஷாப்பிங் போகிறாரோ சசிகலா?

அரசியல், இந்தியா, சற்றுமுன்
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை விதிகள் மீறப்பட்ட விவகாரத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்து வியந்து நிற்கிறது. லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறைக் கைதியை சொகுசாக சிறையில் உலவ விட்டுள்ள கர்நாடக சிறைத்துறையின் கருணைதான் இப்போது ஹாட் டாபிக்! சூடான விவாதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதி சசிகலா சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வரும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு கையில் பேக்குடன் எங
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அரசியல், இந்தியா, சற்றுமுன்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை அவர் பயன்படுத்தினார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10ஆம் தேதி டிஐஜி.,யாக இருந்த ரூபா ஆய்வு செய்து, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் க
கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

அரசியல், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை
சென்னை: மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார். நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தன. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கமலஹாசன் என்னை கைது செய்வது என்றால் நடக்கட்டும். சட்டம் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். அத்துடன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமல் ஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர்
சிறையில் இருந்து ரகசியமாய் வெளியில்  சென்று வந்தார் சசிகலா?

சிறையில் இருந்து ரகசியமாய் வெளியில் சென்று வந்தார் சசிகலா?

அரசியல், சற்றுமுன்
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தை ஜெயிலர் ஒருவர் எழுதி இருந்தார். அந்த ஜெயிலர் தனது பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கூட பெங்களூரு பரப்பனஅக்ர ஹார சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து அவர் விளக்கி இருந்தார். *அந்த மொட்டை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-* சசிகலா, இளவரசி,
370வது சட்டப் பிரிவை நீக்குங்கள்; காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணரும்: சிவசேனா

370வது சட்டப் பிரிவை நீக்குங்கள்; காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணரும்: சிவசேனா

அரசியல், இந்தியா, சற்றுமுன்
மும்பை: காஷ்மீர் குறித்த சிறப்புப் பிரிவு 370வது சட்டப் பிரிவை நீக்குங்கள், அப்போது காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும் என்றும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்புங்கள் எனவும் சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், ‘இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தப் போவது யார்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வெற்றுத் தாள்களில் கண்டனம் தெரிவித்துவிட்டு, வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா? காஷ்மீரில் செயல்பட்டு வரும் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது. காஷ்மீரில் நடந்து வருபவை எல்லாம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும். காஷ்மீரில் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர், பயங்கரவாதச் செயல
சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

அரசியல், இந்தியா, சற்றுமுன், தலையங்கம்
புது தில்லி: அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று பின் தோற்றதும், நாட்டில் இன்று பரவலாகப் பேசப்பட்டதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்க்லாங் ஆகிய பகுதிகள் சந்திக்கும் ஒரு முனையில், சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, தனது கண்காணிப்பை பலப்படுத்த நிரந்தர கூடாரம் அமைத்துள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் இந்தியாவைச் சீண்டும் வகையில் கட்டுரைகளும் கருத்துகளும் ஆதிக்க மனப்பான்மையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பின்னணி