Thursday, July 20Dhinasari

ஏபிஎன் பக்கம்

M.V. Ananthapadmanabachariyar page, articles, upanyasams

பசுப் பாதுகாப்பும் ரந்திதேவன் கதையும்!

பசுப் பாதுகாப்பும் ரந்திதேவன் கதையும்!

ஆன்மிகக் கட்டுரைகள், ஏபிஎன் பக்கம்
பசுக்களின் பாதுகாப்பு குறித்து மஹாபாரதத்திலுள்ள ரந்திதேவன் கதை குறித்த தெளிவான விளக்கம் 2015 மன்மத மார்கழி டிசம்பர் நரசிம்மப்ரியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மறுபடியும் உங்கள் பார்வைக்கு - APN ஸ்வாமி. *** உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணம் கொண்டும் பசுக்களையும், ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது. ஒரு நாள் இரவு தற்செயலாக News channel பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் காரசாரமானதொரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர், பங்கு கொள்பவர் என அனைவருமே ஆவேசமடைந்தவர்களைப் போன்று பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் நடுவே மற்றொருவர் குறுக்கிட்டும், பேசவொட்டாமல் தடுத்தும் ஒரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாகவே இதுபோன்ற அக்கப்போர்களைப் பார்க்க விரும்பாதவனாயினும் அன்றைய தலைப்பு சற்றே சுவாரஸ்யம் தந்ததால் பார்த்தேன். தற்போது நமது நாட்டில் பரபரப்பாகப்