Category: தெய்வத் தமிழ்

நாச்சியார் திருமொழி : பாகம்-1

நாச்சியார் திருமொழி : பாகம்-1

ஆன்மிகக் கட்டுரைகள், திருப்பாவை, தெய்வத் தமிழ்
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாகம் 1சென்னை வானொலி நிலையத்தின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாச்சியார் திருமொழி பாகம் 1எழுத்து : செங்கோட்டை ஸ்ரீராம்
வைணவ குரு பரம்பரை வைபவம்

வைணவ குரு பரம்பரை வைபவம்

ஆன்மிகக் கட்டுரைகள், தெய்வத் தமிழ்
குரு பரம்பரை வைபவம் அடியேன் ஸ்ரீ ரங்கம் தாயார் ஸன்னதி கைங்கர்ய பாரர்களான பண்டாரிகள் குடும்பத்திலிருந்து வந்தவள். அடியேன் தந்தையார் ஸ்ரீரங்கம் பண்டாரி ஸ்ரீ ரங்கராஜம் ஐயங்கார், பல வருடங்கள் தாயார் ஸன்னதியில் கைங்கர்யம் செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அடியேன் சகோதரர்கள் ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசன் , லக்ஷ்மணன் மற்றும்  ராமஸ்வாமி அவர்கள் இன்றளவும் தாயார் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இங்கு நான் அடியேன் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எழுதவுள்ள விஷயங்கள் ஸ்வாமி வேளுக்குடி ஸ்ரீ.கிருஷ்ணன் , ஸ்வாமி ஸ்ரீ.எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன், முனைவர் டி.ஏ. ஜோசப் அவர்களின் உபன்யாசங்களில் கேட்ட தகவல்களைக் கொண்டும் மற்றும் அடியேன் படித்த புத்தகங்களான "மன்னு புகழ் மணவாள மாமுனிவன் "  மற்றும் "ஆச்சார்ய வைபவம் " புத்தகங்களிலிருந்து  திரட்டிய தகவல்களைக்  கொண்டும் எழுதுகின்றேன்.அடியேன் எழுதுவதில் சிறப்பிர
திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

திருப்பாவை, தெய்வத் தமிழ்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். விளக்கம்:ஒன்பதாம் பாசுரத்தில் தன் தோழியின் தாயாரிடம், உன் மகளை எழுப்பிவிடு என்று கோரிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, ராமபிரானால் தோல்வியுற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உன்னிடம் கொடுத்துச் சென்றானோ என்று மயக்கம் கொண்டு தன் தோழியிடம் வினவுகிறார் பத்தாம் பாசுரத்தில்! நோன்பினை நோற்று, சுவர்க்கம் போன்ற சுக அனுபவம் பெறுபவராய்த் திகழும் அம்மே! இவ்வளவு கூறியும் வாசல் கதவைத்தான் திறக்காதவராய் இருக்கின்றீர்கள், ஆனால், பதிலுக்கு ஒரு வார்த்தையும் சொல்லாமல் இருக்கலாகுமோ? நறுமணம் வீசும் துளசி எனும் திருத்துழ
திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்து

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்து

திருப்பாவை, தெய்வத் தமிழ்
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். விளக்கம்: எட்டாம் பாசுரத்தில் நம் நிலை கண்டு இரங்கி அருள்புரிபவன் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டாமோ என்று கூறி தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, நீ என்ன வாய்பேச இயலாதவளோ, காது கேட்காதவளோ, மயக்கத்தில் கிடப்பவளோ என்றெல்லாம் கடுமையாகக் கூறி துயிலெழுப்ப முயற்சி செய்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்.பரிசுத்தமான மாணிக்கங்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகையில் நாலாப்புறமும் விளக்குகள் பிரகாசமாக எரிகின்றன. அகில், சந்தனம் முதலியவற்றின் வாசனைப் புகையால் அங்கே மணம் கமழ்கிறது. அத்தகைய மாளிகையில் மென்மையான படுக்கையின்மீ
திருப்பாவை பாசுரம் 8 (கீழ்வானம் வெள்ளென்று…)

திருப்பாவை பாசுரம் 8 (கீழ்வானம் வெள்ளென்று…)

திருப்பாவை, தெய்வத் தமிழ்
திருப்பாவை - பாசுரம் 8 -----------------------------கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடையபாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். விளக்கம்:இயற்கை நிமித்தங்களைச் சொல்லி, தோழியைத் துயில் கலைந்து எழுமாறு ஏழாம் பாசுரத்தில் கூறிய ஆண்டாள், எட்டாம் பாசுரத்தில் "நம் குறைகளை ஆராய்ந்து நமக்கு இரங்குவான் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டும் எழு” என்று துயிலெழுப்புகிறார்.கதிரவன் ஒளி பரப்ப எழுந்தான். கிழக்குத் திசையில் வானம் வெளுத்தது. எருமைகள் பனிப்புல்லை மேய்வதற்காக சிறு தோட்டங்களில் புகுந்தன. திருவேங்கடத்துக்கு யாத்திரை செல்பவரைப் போல், யாத்திரையாகப் போவதை பேறு எனக் கருதிப் போகின்ற மற்று
திருப்பாவை பாசுரம் 7 (கீசு கீசு என்று)

திருப்பாவை பாசுரம் 7 (கீசு கீசு என்று)

திருப்பாவை, தெய்வத் தமிழ்
திருப்பாவை - பாசுரம் 7 கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோதேச முடையாய் திறவேலோர் எம்பாவாய். விளக்கம்:ஆறாம் பாசுரத்தில் இயற்கையின் விழிப்பைச் சொல்லி, கண்ணுறக்கம் கலைந்து எழுமாறு தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அவள் எழுந்திருக்காதது கண்டு மேலும் சில நிமித்தங்களைச் சொல்லி துயில் கலைந்து எழுமாறு வேண்டுகிறார் இந்த ஏழாம் பாசுரத்தில்.பரத்வாஜ பறவைகள் ஒன்றோடு ஒன்று பேசியும் குலவியும் கீச்சு கீச்சு என்று எங்கும் ஆரவாரம் செய்கின்றன. இந்த ஆரவாரத்தை இன்னும் நீ கேட்கவில்லையோ.. ஏ மதியற்ற பெண்ணே. நறுமணம் கமழும் பரிமளப் பொருள்களினால் அணிசெய்த கூந்தலை உடையவர்கள் இந்த இடைப் பெண்கள். அவர்கள
திருப்பாவை பாசுரம் 6 – புள்ளும் சிலம்பினகாண்

திருப்பாவை பாசுரம் 6 – புள்ளும் சிலம்பினகாண்

திருப்பாவை, தெய்வத் தமிழ்
திருப்பாவை - பாசுரம் 6 ------------------------புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோபிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம்: ஐந்தாம் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளைச் சொன்ன ஆண்டாள், இத்தகு பெருமை வாய்ந்தவனை நாம் காணச் செல்ல வேண்டாமோ என்று வினவி, அதிகாலைக் கண்ணுறக்கம் கொண்ட பெண் ஒருத்தியை இந்தப் பாசுரத்தில் துயில் எழுப்புகிறார்.இரையைத் தேடுவதற்காக வெளியே வந்த பறவைகள் ஆரவாரம் செய்து நிற்கின்றன. அது உன் காதில் விழவில்லையோ? பறவைகளின் தலைவன் பெரியதிருவடி ஸ்ரீகருடாழ்வாரின் சுவாமியான பெருமாளின் சந்நிதியில் வெண் சங்கு ஒலிக்கின்றது. அனைவரையும் அழைக்கும் விதத்தில் அந்த வெண் சங்
திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

திருப்பாவை, தெய்வத் தமிழ்
திருப்பாவை - பாசுரம் 5-----------------------------மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். விளக்கவுரை:நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டுமானால், அவனைப் புகழ்ந்து பாட வேண்டாமோ என்று கூறி, கண்ணனின் தன்மைகளையும் புகழையும் தோழியர்க்குக் கூறி, அவர்களையும் கண்ணனை அடிபணிந்து உய்யுமாறு இந்தப் பாசுரம் மூலம் வேண்டுகிறார்.கண்ணன் - மாயச் செயல்களை உடையவன்; இறையருள் நிலையாகப் பெற்ற அந்த வடமதுரையின் தலைவன்; ஆழம் உடையதாகவும் மிகத் தூய்மையான நீரைக் கொண்டதாகவும் விளங்கும்
திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழி மழைக் கண்ணா

திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழி மழைக் கண்ணா

திருப்பாவை, தெய்வத் தமிழ்
திருப்பாவை - பாசுரம் -4---------------------------ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கவுரை மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள். மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார். மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி
திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

திருப்பாவை, தெய்வத் தமிழ்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். விளக்கவுரை:இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும், விலக்க வேண்டியவை எவை, கைக்கொள்ள வேண்டியவை எவை என்றெல்லாம் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பினால் உலகத்துக்கு விளையும் நலன்களை எடுத்துக் கூறுகிறார்.மகாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தபோதே, ஆகாயம் அளவுக்கு வளர்ந்து தன் திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டு, சுயநலனுடன் எதையும் வேண்டாமல், புருஷோத்தமன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நோன்பு நோற்கிறோம். நோன்