Thursday, July 20Dhinasari

விழாக்கள் விசேஷங்கள்

ஆடி வருகுது அம்மன் உலா

ஆடி வருகுது அம்மன் உலா

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள், விழாக்கள் விசேஷங்கள்
நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது தேவர்களின் இரவு. நம் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள். அதில் இந்த ஆடி மாதம் தேவர்களின் நாள் கணக்கில், மாலை நேரத் துவக்கம். இந்த காலம்தான் இங்கே நமக்கு மழைக்காலத் துவக்கம். எனவே ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர். அம்மனுக்கு மிகவும் பிடித்தவை வேம்பும் எலுமிச்சையும். ஆடி மாதம் என்றால் கூழ் இல்லாமலா? இம்மூன்றுமே இந்தப் பருவ மாற்றத்துக்கு உட்படும் ஆடி மாதத்தில் நம் உடல் அடையும் நோய்களில் இருந்து தடுக்க உதவுவன. எனவேதான் அம்மன் இவற்றை தமக்கான அர்ப்பணமாக ஏற்றாள். இவற்றையே அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள். மேலும், தெய்வீகப் பண்
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆன்மிகச் செய்திகள், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், விழாக்கள் விசேஷங்கள்
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் நடந்தன. இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டு பரிவார விமானங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பித்து பஞ்சர்வணம் செய்யப்பட்டுள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர், கடைவீதி விநாயகர், சன்னதி வீதி விநாயகர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி மற
விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

Featured, ஆன்மிகச் செய்திகள், உங்களோடு ஒரு வார்த்தை, விழாக்கள் விசேஷங்கள்
குரு என்ற சொல்லுக்கு இருளை நீக்குபவர் என்று பொருள். அறியாமை இருளகற்றும் ஞானாசிரியரை குரு என்போம். ஆசான், ஆசிரியர், ஆசார்யர் என்றெல்லாம் சொல்லி வணங்கும் குருவுக்கு முற்காலத்தில் தகுந்த தட்சிணை கொடுத்து மரியாதை செய்து காத்தும் வந்தார்கள், குரு தட்சிணை என்ற பெயரில்! அந்த குருவின் ஒரு உருவாகவே புத்தகங்கள் திகழ்கின்றன. நல்ல நூல்கள், நம் அறிவுக் கண் திறப்பவை மட்டுமல்ல, நம் வாழ்க்கையை செப்பனிடும் பணியையும் செய்பவை! சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல அச்சு. தெளிவான உரு. விரும்பிப் படிக்கும் தலைப்புகள். அவற்றில் சில மொழிபெயர்ப்புகளாக இருந்தாலும் எளிய நடை! அத்துடன், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர், ராமகிருஷ்ணானந்தர் ஆகியோரின் பிறந்த நாள்களில் 40% தள்ளுபடி விலையில் மடத்தின் புத்தகங்களை அளித்து, எளியோருக்கும் அவை சென்று சேர வகை செய்வது. மடத்தின் பெரு
லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், ஆன்மிகம், விழாக்கள் விசேஷங்கள்
மகாலட்சுமியின் அருளை அள்ளித்தரும் தினமாகத் திகழ்வது ரத சப்தமி ( 03-02-2017) உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாக கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன. சூரிய சக்தியால் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர் உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனை சுற்றியே அமைகின்றன. சூரியனை கடவுளாக வழிபட்டு வரும் மதத்திற்கு ‘சவுமாரம்’ என்று பெயர். சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களேடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் அடைந்தார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும், வெப்பத்தை தரக்கூடிய வல்லமையையும் பெற்றார். காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவான்
84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

ஆன்மிகச் செய்திகள், ஆன்மிகம், விழாக்கள் விசேஷங்கள்
கும்பாபிசேகம்:2-2-17 ''கங்கை கொண்ட சோழபுரம் பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில்''.   ஆலயத் தொடர்புக்கு:97513 41108.   திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.   இந்தக் கோவிலை நிர்மாணித்தவர் ராஜேந்திரசோழன்.   தஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜசோழன் – திருபுவனமாதேவியின் புதல்வன்.  இவனது ஆட்சி காலமான 1012–1044 கடல் கடந்தும் சென்று நாடுகளைக் கைப்பற்றியதால் கடாரம் கொண்ட சோழன் என்ற பெயர் பெற்றார்.   தந்தை வழியில் ஆன்மீகத்தையும் பரப்பினார். இந்த கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச் செய்தான்.   மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோவிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து,   அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தான். சிவதரிசனம் செய்ய வரும் பொழுதெல்லாம்,  இந்த புனித நீரை எடுத்து தலையில
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா

விழாக்கள் விசேஷங்கள்
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா கீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம்,விசேஷதிருமஞ்சனம் பவித்ரோத்ஸவ ஹோமம். பூர்ணாஹூதி, பெருமாள் மற்றும் விஷ்வக்சேனர் கருடாழ்வார் ஆகியோருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம் உள்ளிட்டவகைளும் ஸ்வாமி திருவீதி உலாவருதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன விழாவிற்கான ஏற்ப்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்
குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

ஆன்மிகச் செய்திகள், மதுரை, விழாக்கள் விசேஷங்கள்
சோழவந்தான், ஜøலை. 30, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது. குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9-27 மணிக்கு சிம்மராசியிலிருந்து-கன்னியா ராசிக்கு பிரவேசிக்கிறார். இதைத் தொடர்ந்து இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவான் சன்னதி முன்பாக மகாயாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் இரா. வெங்கசடேசன் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல், சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோயிலான அருள்மிகு பிரளயநாதர் கோயிலில் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம் சிவாச்சாரியார்களால் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மேசம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிநேயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிற
தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்

தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்

விழாக்கள் விசேஷங்கள்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது மாலை 3 மணி முதல் 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமமும்,12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றன., பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் திருக்கோவிலையும் பக்கதர்கள் பஜனை பாடி தீர்த்தவலம் வந்தனர் விழாவில் ,கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம் ,சுரண்டை ,தென்காசி ,ஆவுடையானூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்
ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

விழாக்கள் விசேஷங்கள்
கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் காலை புருஷசூக்த ஜெபம் , ஸகஸ்ரகலசம் ,தாரா ஹோமம்,பூர்ணாகுதி மற்றும் வருஷாபிஷேகம் ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அனுகிரகத்துடனும் ,பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசியுடன் விமானத்திற்கு அபிஷேகம் ,மூலவர் திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் பின்னர் அன்னதானம் நடைபெற்றது மாலை சகஸ்ரநாம அர்ச்சனை , விசேஷ தீபாராதனை ,சுவாமி திருவீதி உலா,ஆகியவை நடைபெற்றது விழாவினை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்

கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

விழாக்கள் விசேஷங்கள்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவிருக்கிறது  கங்கைக்கு இணையாக போற்றப்படும் ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்  புரட்டாசி திருவோணநன் நாளில் ஏக தின தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தத்தை  தெளித்துக் கொண்டால் கங்கையில் நீரடிய பலன் கிடைக்குமமென சாஸ்த்ரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன இந்த சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) அன்று காலை பெருமாள் எழுந்தருள்கிறார் காலை 7 மணியளவில் தெப்பகுளத்திற்க்கு வாஸ்த்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வ தோஷ ,நிவர்த்திக்காக புருஷசூக்த ஹோமம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தி