Thursday, July 20Dhinasari

சைவ கோயில்கள்

ஆடி வருகுது அம்மன் உலா

ஆடி வருகுது அம்மன் உலா

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள், விழாக்கள் விசேஷங்கள்
நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது தேவர்களின் இரவு. நம் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள். அதில் இந்த ஆடி மாதம் தேவர்களின் நாள் கணக்கில், மாலை நேரத் துவக்கம். இந்த காலம்தான் இங்கே நமக்கு மழைக்காலத் துவக்கம். எனவே ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர். அம்மனுக்கு மிகவும் பிடித்தவை வேம்பும் எலுமிச்சையும். ஆடி மாதம் என்றால் கூழ் இல்லாமலா? இம்மூன்றுமே இந்தப் பருவ மாற்றத்துக்கு உட்படும் ஆடி மாதத்தில் நம் உடல் அடையும் நோய்களில் இருந்து தடுக்க உதவுவன. எனவேதான் அம்மன் இவற்றை தமக்கான அர்ப்பணமாக ஏற்றாள். இவற்றையே அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள். மேலும், தெய்வீகப் பண்
நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

ஆன்மிகக் கட்டுரைகள், உங்களோடு ஒரு வார்த்தை, சைவ கோயில்கள்
அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாரின் ஊர்க் கோவில். அவர் சொல்லிக்கேட்ட அழகில் மயங்கி, சென்று பார்த்தது.) இந்தக் கோவிலைத் தேடிப் போய், ஓமாநல்லூர் என்றொரு ஊரில் ஒரு சிவன் கோவில் கண்ணில் பட்டது. அதையும் பார்த்து வந்தேன். இந்த தருவை கோவிலில் முருகப் பெருமானைப் பார்த்த மாத்திரத்தில் மனத்தில் பெருமான் அமர்ந்து கொண்டார். ஒரே கல்லில் ஆன விக்ரஹம். மயில், மீதமர்ந்த நிலையில் முருகன், கையில் வேலும் கொடியும் என திருவாசியுடன் அமைந்த ஒரே கல்லிலான உருவம். ... தலத்தின் கட்டுரை இங்கே... தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.
குடங்கை அழகெனும் கூகையூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

குடங்கை அழகெனும் கூகையூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

சைவ கோயில்கள்
சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள். கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக
ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்

ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள்
பிட்சை ஏற்று சுந்தரர் பசி தீர்த்த ஈசன்! அமரர்கள் பலம்பெற அமிர்தம் தேவைப் பட்டது. பாற்கடலைக் கடைந்தால் அமுதம் பெறலாம் என்றனர். அசுரருக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. இருவரும் இணைந்து மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். மலையோ கனம் தாங்காது கடலில் அமிழத் தொடங்கியது. அது மூழ்காமல் தடுக்க, திருமால் ஆமை (கச்சப) உருக் கொண்டு மந்தார மலையின் அடியினைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார். இவ்வாறு திருமால் பலம் பெற்று மலையைத் தாங்க, சிவபெருமானின் அருளும் தேவைப் பட்டது. அவர் பூவுலகில் ஒரு மலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அந்த மலையின் எதிரே இன்னொரு மலையில் சிவபெருமான் கோயில் கொண்டார். இவ்வாறு இருவரும் கோயில் கொண்ட மலைகள் இரண்டும் ஔஷதகிரி என, மருந்துமலை எனும் பெயர் பெற்றது. சென்னை - செங்கல்பட்டு சாலையில், சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செ
திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள்
  படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக் கொண்டார். இதையறிந்த சிவனார் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். "தலை ஐந்து இருப்பதால்தானே இப்படி ஓர் எண்ணம்...' என்று எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். மேலும் பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் பறிபோனது. இதனால் பெரிதும் வருந்திய பிரம்ம தேவன், தன்னை மன்னித்து அருளும்படி சிவனாரை வேண்டினார்.   சிவனாரும் அவருக்கு சாபத்தில் இருந்து விடுபடும் வழியைக் கூறினார். அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், அங்கே சிவரூபமாக இருந்த 12 லிங்கங்களையும் (த்வாதச லிங்கம்) வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலு
வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

ஆன்மிகக் கட்டுரைகள், சைவ கோயில்கள்
சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும் புடை சூழ முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்தக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி இந்தத் தலத்தே எழுந்தருளினார். இந்தத் தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர். கோயில் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, "பரங்குன்றநாதர்' என்றும், தலம் "பரங்குன்றம்' என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் மண்டப முகப்பில் நந்திகேஸ்வரர், மனைவி காலகண்டியுடன் காட்சி தருகிறார். சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே ம
சேக்கிழார் குருபூஜை:30-5-17

சேக்கிழார் குருபூஜை:30-5-17

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள்
''தந்தானை துதிப்போமே''....''சேக்கிழார் குருபூஜை":30-5-17.,' 'சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்'' நாகேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் சேக்கிழார் உள்ளார்.பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி பூச நட்சத்திரத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழார் பிறந்த வீடு உள்ளது... இப்போது அது சேக்கிழார் ஆலயமாக விளங்குகிறது.30-5-17அன்று , காலையில் சேக்கிழார் கருவறைக்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும் .அன்று இரவு முழுவதும் விடிய விடிய திருமுறைகள் பாடி,பெரியபுராணம் பாடி திருவீதி உலா நடைபெறும்.சேக்கிழார் உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். இதனால் இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும். "தொகையா நாவலூராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை வகையால் விளங்க உயர் நம்ப
வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா

வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா

ஆன்மிகக் கட்டுரைகள், சைவ கோயில்கள்
"வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா"..... "நமிநந்தியடிகள் குருபூஜை" & "பேரொளி வழிபாடு" :30-5-17..."ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்".. சேலத்தில் இருந்து 25 கிமீ...ஆலய தொடர்புக்கு:9443515036.. திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர்  திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].]..ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம் நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்.. "அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு எதற்கு?" என்று கேலி பேசினார்கள்.அப்போது சிவபெருமான், "கமலாலயக்குளத்து நீரை இட்டு விளக்கு ஏற்றுக" என்று அசரீரியாக ஆணையி
நமிநந்தியடிகள் குருபூஜை; பேரொளி வழிபாடு

நமிநந்தியடிகள் குருபூஜை; பேரொளி வழிபாடு

ஆன்மிகக் கட்டுரைகள், சைவ கோயில்கள்
"வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா"....."நமிநந்தியடிகள் குருபூஜை" & "பேரொளி வழிபாடு" :30-5-17..."ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்".. சேலத்தில் இருந்து 25 கிமீ...ஆலய  தொடர்புக்கு:9443515036..திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர் திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].].. ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம் நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்.."அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு எதற்கு?" என்று கேலி பேசினார்கள். அப்போது சிவபெருமான், "கமலாலயக்குளத்து நீரை இட்டு விளக்கு ஏற்றுக" என்று அசரீரியாக ஆணையிட்டார
ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!

ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், ஆன்மிகம், சைவ கோயில்கள்
ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்! ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெறலாம்,. *1, திங்களூர் (சந்திரன்):* *தரிசனம் நேரம் :1மணி நேரம்* *காலை 6மணி* ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பி