Thursday, July 20Dhinasari

வைணவ கோயில்கள்

குரு பரம்பரை வைபவம் – ஸ்ரீ ராமானுஜர்

குரு பரம்பரை வைபவம் – ஸ்ரீ ராமானுஜர்

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், வைணவ கோயில்கள்
‘நான் இப்போது நிற்பது கச்சி மாநகரமா! முக்தி பூமியான காஞ்சியா!! அதோ தேவாதிராஜன் வரதராஜன் விமானம் தெரிகிறதே!’’ என்று ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை தெளிந்து கண்களில் நீர் வழிய நின்றார். சீதையைக் கண்ட பின்பு பெருமாளை சந்திக்கும் முன்பு மதுவனத்தில் புகுந்த மாருதியைப் போலவும், ராவணவதம் கேட்ட சீதா பிராட்டியார் போலவும் சந்தோஷமானார். என்ன செய்யப் போகிறோம் என்று அறியாதபோது வேடுவ, வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந்தேவி தாயாரும் ஆட்கொண்டதை நினைத்து பலவாறு புலம்பி அழுதார். நானும் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே! என்னே! என் மடமை! பகவானின் இந்த ஸௌலப்யம் (சுலபமாக தரிசனம் கிடைக்கும் தன்மை) கிருஷ்ணாவதாரம் போல உள்ளதே என்று புலம்பினார். சுவாமி நம்மாழ்வார், கிருஷ்ணன் உரலில் எளிதாகக் கட்டுப்பட்ட நினைத்து ‘‘எத்திறம் உரவினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே!’’ என்று பகவானின் எளிமையை நினைத்து ஆறு மா
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)

ஆன்மிகக் கட்டுரைகள், ஆலயங்கள், வைணவ கோயில்கள்
வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 ) அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான் ! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் !! " வரம் வரய தஸ்மாத் த்வம் யதாபிமதமாத்மந : ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே " மனிதர்கள் கண்ணால் காணக் கூடிய நிலைமையை தற்பொழுது நான் அடைந்துள்ளேன் ! (அவர்களுக்கும் ) எல்லாம் கை கூடப் போகிறது .. உனக்கு வேண்டியதைக் கேள் ! என்றான் இறைவன் .. கண்ணெதிரே கரிகிரிக் கண்ணனைக் கண்ட கமலத்தயன், பணிவான குரலில் பரமனைப் பார்த்துப் பேசினான் ! ஐய ! வரமே என்ன வரம் வேண்டும் என்று கேட்பது விந்தையாகத் தான் உள்ளது ! எதையும் நான் என் முயற்சியால் ஸாதித்திருப்பதாக ந
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
வந்தான் வரதன் ( பகுதி - 14 - 1) உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் ! மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின ! தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட ( யாக பசு ) பிரச்சினையும், தான் சாபம் பெற்றதும், ஸரஸ்வதி கோபித்துச் சென்றதும் , பூமியில் வேள்விக்குத் தகுந்த இடம் தேடி அலைந்ததும் , அசரீரி வாக்கும், அதனைத் தொடர்ந்து தான் காஞ்சிக்கு வந்ததும் , ஸரஸ்வதியினாலும் அஸுரர்களாலும் பல தடைகள் தனக்கும் யாகத்திற்கும் ஏற்பட்டதும் , ஓரோர் முறையும் எம்பெருமான் ரக்ஷித்ததும் !! பிரமன் சிந்தித்துக் கொண்டிருந்தான் ! அப்பப்பா !!!! குறைவான சமயத்தில் நிறைவாக எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன ! எண்ணிலாப் பெரு மாயனே ! உன்னை மறவாமையே யான் வேண்டிடும் மாடு ( = ச
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 13)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 13)

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
வரதன் வந்த கதை ( பகுதி - 13 ) இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் ; மீண்டுமொரு முறை அவனை தரிசித்திட ஆசைப்பட்டாள் ..அவனை தரிசிக்க இச்சை ( ஆசை ) தானே தகுதி ! "கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ " என்றும் "போதுவீர் போதுமினோ" என்றும் தமப்பனாரும் திருமகளாரும் ( பெரியாழ்வாரும் , ஆண்டாளும் ) பாடியுள்ளமை ; அவனை அடைய ( நமக்கு )ஆசையே வேண்டியது என்பதனை உணர்த்தும் ! "ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே " என்றார் லோக திவாகரர் ( திருமங்கையாழ்வார் ) ! ஸரஸ்வதியின்; நாரணனைக் கண்டுவிட வேண்டும் என்கிற ஆர்வமே நதியாய் வடிவு கொண்டதோ என்று சொல்லும்படி இருந்தது அவளது வேகம்.. ! அலையெறிகின்ற அந்நதியின் ஓசை கூட , அவள் எண்ணத்தினை உச்சரிக்குமாப் போலே இருந்தது .. அவளது எண்ணம் தான் என்ன ?! இரண்டு முறை அவனைக்
வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

ஆன்மிகச் செய்திகள், வைணவ கோயில்கள்
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் .. பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக லகனத்தில் " சேனைமுதலியார் " அம்சத்தில் , திருக்குருகூரில் "காரி" என்பருக்கு மகனாக பிறந்தார் .. நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய கூடிய பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் .. ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி பற்றிய அறிவை கொண்டே பிறக்கும். பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை போல இருக்கும் ... (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும் போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக இயங்காது ... (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி செ
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே " யஜ்ஞ : " என்று திருநாமம் உண்டு !! - தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் .. " அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ : ஸ்வதாஹம் அஹமௌஷதம் | மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || " ( கீதை 9-16 ) யாகம் நான்..மஹாயஜ்ஞம் நான்; பித்ருக்களுக்கு வலுவளிக்கும் ஸ்வதா என்கிற பிண்டம் மற்றும் சப்தம் நான், நானே ஹவிஸ்ஸு , மந்த்ரம் நானே, நெய் நானே, அக்னி நானே, செய்யப்படும் ஹோமமும் நானே என்கிறான் கண்ணன் !! ஸஹஸ்ரநாமத்தில் யஜ்ஞ : என்கிற திருநாமம் தொடங்கி யஜ்ஞகுஹ்யம் என்கிற திருநாமம் வரை , மேற்கண்ட கீதா ச்லோகத்தை விவரிக்குமாப் போலே அமைந்திருக்குமழகு காணத் தக்கது !! " செய்கின்ற கிதியெல்லாம் யானே " என்றார் ஆழ்வாரும் ! "வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான்" என்றார் கலியன் ! மறை ,வேள்வி , தக்ஷிணை யாவும் அவனே !
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 11)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 11)

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு, பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர். இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன் தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்.. வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும் வாய்வெருவிக்கொண்டிருந்தனர். நல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம். ஆம்! தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க. நல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள்.. இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நி
திருமண் இட்டுக்கொள்வதன் அறிவியல் விளக்கம்

திருமண் இட்டுக்கொள்வதன் அறிவியல் விளக்கம்

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
நாமம் எனப்படும், (திருமண்+ ஸ்ரீ சூர்ணம்(சிகப்பு சாந்து) இடுவதின், விஞ்ஞான விளக்கம்; : ஊர்த்த்வரேதம் இது நாராயண ஸுக்தத்தில் கடைசியா வரும் வார்த்தை. இதுக்கும் நாம் இட்டுக்கொள்ளும் திருமண் காப்பிற்கும் நிறைய சம்மந்தம் உண்டு. அது எப்படி அப்படினா. இந்த திருமண் காப்பிற்கு ஊர்த்த்வபுன்ட்றம் என்று பெயர். சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அப்படினா இந்த திருமண் காப்பை ஹரிபாத த்வயம் னு குறிப்பிடுவர். ஹரினா ஸ்ரீமன் நாராயணன் த்வயம் என்றால் இரண்டு பாதம் தெரியும். ஸ்ரீமன் நாராயணனின் இரடண்டு பாதங்கள் நெற்றியில் அணிதல் வெறுமையாக அணிந்தால் எப்படி இருக்கும்,பாதத்தை வெறுமனே வைக்க முடியுமா, முடியாதே ஸ்வாமி,இப்போ ஒரு உயர்ந்த வஸ்து இருக்கு அதாவது வைரம் இருக்கு அந்த வைரத்தை அப்படியே கீழே வைப்போமா மாட்டோம் ஒரு வெல்வட்டு வஸ்திரத்தில் வெப்போம், ஆத்துல பெருமாள் இருக்கார் அவரை கீழ ஏள பன்றோம் திருவாராதன
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 10)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 10)

ஆன்மிகக் கட்டுரைகள், வைணவ கோயில்கள்
யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து , எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள் , பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும் , வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் ! அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி நரஸிம்ஹனாய் பகவான் தோன்றி யாகத்தையும் பிரமன் முதலானவர்களையும் காத்தான் என்பதனை, "ந்ருஸிம்ஹோ யஜ்ஞசாலாயா : மத்யே சைலஸ்ய பச்சிமே | தத்ரைவாஸீத் மகம் ரக்ஷந் அஸுரேப்ய: ஸமந்தத : " என்கிற புராண ச்லோகத்தினால் நாம் அறியலாம் !! மெய் சிலிர்த்து நின்றான் பிரமன் ! இமையோர் தலைவா ! அழைக்கும் முன்பே..நினைத்த மாத்திரத்திலே ஓடோடி வந்து ரக்ஷிக்கின்றாயே !! இப்பெருமைக்குரியவன் உனையன்றி மற்றொருவருளரோ ?? "சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி " எங
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை ( பகுதி – 9 )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை ( பகுதி – 9 )

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம், வைணவ கோயில்கள்
தீப ப்ரகாசன் .. இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான்... குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !! சம்பராஸுரன் , இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட , பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி , காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்.. ஒளியாக வந்து ரக்ஷித்த பெருமானின் பெருங்கருணையை பிரமன் முதலான அனைவரும் கொண்டாடினர் ! "ப்ரகாசிதம் ஜகத்ஸர்வம் யத் தீபாபேன விஷ்ணுநா | தஸ்மாத் தீப ப்ரகாசாக்யாம் லபதே புருஷோத்தம : " என்கிறது புராணம்.. தன்னுடைய ஒப்பற்ற ஒளியினாலே உலகனைத்தையும் ப்ரகாசிக்கச் செய்தவன் ஆனமையால் இவன் தீப ப்ரகாசன் என்று பெயர் பெற்றானாம் ! பகவான் ஒரு மிகப் பெரிய தீப்பந்தம் போன்ற வடிவு கொண்டிருந்தாலும் , யாக சாலைக்கோ, பிரமன் தொடக்கமானவர்களுக்கோ