Category: திருப்பாவை

நாச்சியார் திருமொழி : பாகம்-1

நாச்சியார் திருமொழி : பாகம்-1

ஆன்மிகக் கட்டுரைகள், திருப்பாவை, தெய்வத் தமிழ்
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாகம் 1சென்னை வானொலி நிலையத்தின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாச்சியார் திருமொழி பாகம் 1எழுத்து : செங்கோட்டை ஸ்ரீராம்
திருப்பாவை பாசுரம் 29 (சிற்றஞ் சிறு காலே)

திருப்பாவை பாசுரம் 29 (சிற்றஞ் சிறு காலே)

திருப்பாவை
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.   விளக்கம்:இதுவரையிலான பாசுரங்களில் பறை பறை என்று ஒன்றைக் கேட்டு கண்ணனை நோக்கி நோன்பு நோற்பதாகக் கூறிய ஆயர் சிறுமியர், இந்தப் பாசுரத்தில் அதனைத் தவிர்த்து வேறொன்றைக் கேட்கின்றனர். அது, கண்ணனிடம் செய்யும் திருவடிக் கைங்கரியத்தையாம்! உலக மக்களின் பொருட்டு, நோன்பு என்பதையும் அதன் மூலம் பெறும் பறையையும் ஒரு சாக்காக வைத்து, உண்மையில் அவர்கள் வேண்டியது கண்ணனையே! அதனால், அவனுக்கு நித்திய திருவடிக் கைங்கரியம் செய்யும் பேற்றையும், நொடிப்பொழுதும் நீங்காதிருக்கும் பேரருளையும் பிறவா வரம் வேண்ட
திருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)

திருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)

திருப்பாவை
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.   விளக்கம்:முந்தைய இரு பாசுரங்களில் மார்கழி நீராட்ட நோன்பை எடுத்துக் கூறி, அதற்கு வேண்டிய சங்கு முதலான உபகரணங்களைச் சொன்ன ஆய்ச்சியர்கள், நோன்பினை முடிக்கும்போது அலங்கரிக்க ஆடை ஆபரணங்களைப் பெற்று உடுத்தி, பால் சோறு உண்டு பறை தருமாறு கண்ணனிடம் கோரினர். அதற்கு கண்ணன், பெண்களே. உங்கள் கருத்து இவ்வளவு என்று எனக்குத் தோன்றுவில்லை. நீங்கள் கேட்டதையும் இன்னும் சில கேட்டால் உங்கள் நிலையை அறிந்து அதையும் நான் தரவேண்டும் என்றால், அதற்காக நீங்கள் கடைபிடிக்கும் உபாயம் ஏதும் உண்டோ? என்று கேட்டான் கண்ணன்
திருப்பாவை பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)

திருப்பாவை பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)

திருப்பாவை
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமேதோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.   விளக்கம்:முந்தைய பாசுரத்தில் தங்கள் நோன்புக்காக, சங்குகள், பறை, பல்லாண்டு இசைப்பார், கோலவிளக்கு, கொடி, விதானம் அனைத்தையும் அருள வேண்டும் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் வேண்டினர். பின்னர், மார்கழி நீராட்ட நோன்புக்கு வேண்டியவை இவை. நோன்பு நோற்று தலைக்கட்டின பின்பு, நாங்கள் உன்னிடம் பெற வேண்டிய வெகுமதிகளும் உண்டு. அவற்றைப் பெற்று மகிழும்படி நீ எங்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று அவர்கள் கண்ணனிடம் பிரார்த்திக்கும் பாசுரம் இது. தன் அடி பணியாதவர்களை வெல்லுகின்ற சீர்மைக் குணங்களைக் கொண்ட கண்ணபிரானே! கோவிந்தனே! உன்னை நாங்கள் வ
திருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)

திருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)

திருப்பாவை
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். விளக்கம்'ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் 'உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்’ என்றார்கள் ஆய்ச்சியர்கள். அதுகேட்ட கண்ணன், 'இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. நம் மீது விருப்பம் என்றால் வேறு ஒன்றையும் விரும்பக் கூடாதே! பிறகு ஏன் இவ்வாறு லோகாயதப் பொருள்களைக் கேட்டு நிற்கிறீர்கள்?” என்றான். அதற்கு ஆய்ச்சிகள், "பிரானே. உன் திருமுகத்தைக் கண்டு, உன் திருநாமங்களை வாயாரச் சொல்ல, துணையாக இருக்கும்படியான நோன்பை பெரியவர்கள் கைக்கொள்ளச் சொன்னார்கள். அதற்குத் தேவைப்படுபவற்றை நீ தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்கும் பாசுரம் இது. அடியார்
திருப்பாவை பாசுரம் 25

திருப்பாவை பாசுரம் 25

திருப்பாவை
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம்---------முந்தைய பாசுரத்தில் தன்னை மங்களாசாசனம் செய்த பெண்களிடம், “பெண்களே! நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில் நீங்கள் உங்கள் உடலைப் பேணாமல், வருத்துவது ஏன்? நீங்கள் விரும்புவது வெறும் பறைதானோ அல்லது வேறு ஏதும் உண்டோ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், "பெருமானே! உன் குண விசேஷங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்ததால், வருத்தம் இன்றி சுகமாகவே வந்தோம். பறை வேண்டுதலை சாக்காக வைத்து உன்னைக் காண்பதையே பேறாக நினைத்து வந்தோம்” என்கின்றனர்
திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)

திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)

திருப்பாவை
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றிகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.   விளக்கம்:மாரிமலை முழைஞ்சில் பாசுரத்தில் சீரிய சிங்காசனம் ஏறி கம்பீரமாக அமர்ந்து, நாங்கள் வேண்டும் பறையைக் கேட்டு, அதனை அளித்தருள் என்று கூறிய ஆய்ச்சியர்கள், இந்தப் பாசுரத்தில், கண்ணனின் குண நலன்களையும் வீரத்தையும் புகழ்ந்து போற்றி அவன் மனத்தை அடியார்க்கு அருளத் தயார்படுத்துகிறார்கள். இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் மஹாபலியால் பெரும் சிரமங்களைச் சந்தித்தது. அன்று, நீ உன் ஈரடியால் இந்த உலகங்களை அளந்து அனைவருக்கும் அருளினாய். உன்னுடைய அந்தத் திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ராவணனின் பட்டண
திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

திருப்பாவை
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய். விளக்கம்:முந்தைய பாசுரத்தில், வேறு புகல் இன்றி உன் திருவடி அடைந்தோம் என்று ஆய்ச்சியர் சொன்னது கேட்ட கண்ணன், பெண்களே இவ்வளவு வருத்தம் அடைந்தீர்களே. உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவது அன்றோ என் கடமை. அதை நீங்கள் உணர்வீர்களே. என்னிடம் வந்து முறையிட்டும் நான் உடனே வந்து உங்கள் கண்ணீரைத் துடைக்காது போனேனே! இனி உங்கள் வேண்டுதலைக் கேட்கின்றேன். சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண்கள், எங்கள் விருப்பம் இப்படி ரகசியமாகச் சொல்லுவதற்கு உரியதன்று. பெரும் கோஷ்டியாக இருந்து க
திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)

திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)

திருப்பாவை
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலேசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். விளக்கம்: முந்தைய பாசுரத்தில் பகைவரெலாம் தம் வலிவு இழந்து, உன்னடி பணிவது போலே நாங்களும் போக்கிடம் வேறு இன்றி உன்னைப் பற்றி நின்றோம் என்றனர் ஆய்ச்சியர். இருப்பினும் இன்னும் இவர்களின் உள் மனதை அறிய ஆவல் கொண்டவனாய் கண்ணன் பேசாது கிடந்தான். அதனால் ஆய்ச்சியர், பெருமானே! இன்னும் உன் திருவுள்ளம் இரங்கவில்லையோ! புகல் வேறு இன்றி உம் திருவடி பற்றியிருக்கும் எங்கள்மீது நீ உன் அருள்கண் பார்வையைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தனர் இந்தப் பாசுரத்தில். அழகியதாகவும், விசாலமானதாகவும், மிகப் பெரிதாகவும்
திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)

திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)

திருப்பாவை
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம்:முந்தைய பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் ஆய்ச்சியர்கள். அவளும் உணர்ந்து எழுந்துவந்து, தோழியரே... நானும் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்துக்காக நானும் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறேன். வாருங்கள் நாம் எல்லோரும் கூடி கண்ணபிரானை வேண்டிக் கொள்வோம் என்று கூறி அனைவரும் சேர்ந்து கண்ணனின் வீரத்தை ஏத்திச் சொல்லி எழுப்புகின்றனர் இந்தப் பாசுரத்தில்.கறந்த பாலை ஏற்றுக் கொண்ட கலன்களானவை எதிரே பொங்கித் ததும்பி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பசுக்கள் பாலைச் சுரக்கின்றன. பெண்களும் பேதைகளும் அணைத்துக்