Thursday, July 20Dhinasari

விளையாட்டு

என் சகோதரன் தோனி: வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிராவோ!

என் சகோதரன் தோனி: வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிராவோ!

லைஃப் ஸ்டைல், விளையாட்டு
எம்.எஸ்.தோனி என் சகோதரன் என்று மேற்கித்திய தீவுகளின் அணி வீரர் பிராவோ இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேற்கித்திய தீவுகள் அணி ஆல் ரவுண்டரான பிராவோ ஐபிஎல்லில் கலந்துகொண்டு விளையாடியவர். அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர்களுடன், குறிப்பாக தோனி, ரெய்னா உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். அவர்களின் நட்பை சென்னை சூப்பர் கிங்க் அணி ரசிகர்கள் பெரிதும் ரசித்துப் போற்றினர். தற்போது, பிராவோவின் இந்த நட்புறவு, மேற்கித்திய தீவுகளில் இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திலும் எதிரொலித்துள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையில் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் இல்லத்துக்கு அழைத்தார். அவரது
300 ரன்: உலக சாதனை படைத்தது இந்திய அணி

300 ரன்: உலக சாதனை படைத்தது இந்திய அணி

சற்றுமுன், விளையாட்டு
ஒருநாள் போட்டிகளில், அதிக முறை 300 ரன்களைக் கடந்ததில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்தது. இந்திய அணி, (மேற்கு இந்தியத் தீவுகள் , இந்திய அணிக்கு இடையிலான ஜூன் 26, 2017 தேதி வரை) 96 போட்டிகளில் 300 ரன்களைக் கடந்துள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 95 முறையும், தென்னாப்பிரிக்கா 77 முறையும், பாகிஸ்தான் 69 முறையும், இலங்கை 63 முறையும், இங்கி8லாந்து 57 முறையும், நியூஸிலாந்து 51 முறையும் 300 ரன்களைக் கடந்துள்ளன. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. மழையினால் 43 ஓவர்களுக்கு போட்டி குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரஹானே 103 ரன் எடுத்தார்.
கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன்: மௌனம் கலைத்த கோலி

கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன்: மௌனம் கலைத்த கோலி

சற்றுமுன், விளையாட்டு
அனில் கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன் என்று தனது மௌனத்தைக் கலைத்து வாய் திறந்துள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி முதல்முறையாக மௌனம் கலைத்து பதில் அளித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள கோலி, செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, கும்ப்ளே சில விஷயங்களை பொதுப்படையாகக் கூறி, தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் கும்ப்ளே மீது நான் மரியாதை கொண்டிருக்கிறேன். நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளை எவரும் பறித்துவிட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததும் கும்ப்ளே ராஜினாமா செய்
சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்

சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்

சற்றுமுன், விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாகார் சமான் 114, அசார் அலி 59, முகமது ஹபீஸ் 57,பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், பாண்டியா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலிருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கியது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக முதலில் பேட் செய்த வங்க தேச அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி, 41 வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது, துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ரோஹித் சர்மா ஆட்டம் இழக்காமல் 123 ரன் எடுத்து, ஆட்டநாயகன் விருது பெற்றார். அவருடன் களம் இறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 43 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் அதிரடி ஆட்டம் காட்டி 96 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து இறுதிப் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெற்ற சுற்றில், ஏற்கெனவே பாகிஸ்தானை இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்
இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!

இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!

இந்தியா, சற்றுமுன், விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பாகிஸ்தான் ரசிகர்கள் அணியை திட்டித் தீர்த்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தப் போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், பெரும் டென்ஷன் அடைந்தனர். அதுவும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள், பல இடங்களில் டிவி.,க்களை அடித்து உடைத்தனர். And we will keep facing disappointment by defeats such as the one today. https://t.co/noxfc7srWN — Imran Khan (@ImranKhanPTI) June 4,
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி: 124 ரன்னில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி: 124 ரன்னில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்தியா

விளையாட்டு
பர்மிங்காம்: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 124 ரன் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றிக் கணக்கைத் துவக்கியது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி இரண்டு புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்த வெற்றியை எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முதல் சாமான்ய இந்தியன் வரை விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக, முதலில் இந்திய அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால், இரு முறை தடைப்பட்டது. இதை அடுத்து போட்டி 48 ஓவர் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் முதலில் ஆடிய இந்திய அணி 48 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்தது. ரோஹித்சர்மா 91 ரன், கோலி 81 ரன், தவான் 68, யுவராஜ் 53 ரன் குவித்தனர். கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 320 ரன் இலக்குடன் விளையாடத் தொடங்கியது. அப்போது மழை குறுக்கிட்டதால், இலக்கு மாற்றப்பட்டது. ப
ஐபிஎல்-10: வெற்றிக் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்ற மும்பை அணி

ஐபிஎல்-10: வெற்றிக் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்ற மும்பை அணி

விளையாட்டு
மும்பை: ஐபிஎல்-10 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து நன்றி தெரிவித்தனர். ஐ.பி.எல்.-10 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அந்த அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியினர் மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றன. கோப்பையுடன் சென்ற அவர்களுடன் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர். கோப்பையை விநாயகரிடம் வைத்து பூஜித்து, நன்றி தெரிவித்தனர்.
எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்

எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்

இந்தியா, விளையாட்டு
புது தில்லி: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் சச்சின் குறித்து பெருமைப் படுவதாகவும், அவருடைய வாழ்க்கை 125 கோடி மக்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது டிவிட்டர் செய்தி: Had a very good meeting with @sachin_rt. His life journey & accomplishments make every Indian proud & inspire 1.25 billion people. pic.twitter.com/qqUYB3qEez — Narendra Modi (@narendramodi) May 19, 2017
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்க வைத்தது இந்தியா

ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்க வைத்தது இந்தியா

விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒவ்வாரு வருடமும் மே மாதம் வருடாந்திர தர வரிசையை வெளியிடும். இதில் டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தர வரிசையில் இந்தியா 1 புள்ளி கூடுதலாகப் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்த தென்ஆப்பிரிக்க அணி 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று 117 புள்ளிகள் பெற்றது. இதற்கு முன் இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையே 13 புள்ளிகள் இடைவெளி இருந்தது. தற்போது இது 6 புள்ளியாக குறைந்துள்ளது. ஆஸ்திரேலியா 108 புள்ளியில் இருந்து 100 புள்ளிக்கு சரிந்து 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு புள்ளிகள் சரிந்து 99 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகள் சரிந்த பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை 91 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்