கொழும்பு:
ஒருநாள் போட்டியில் 100 ஸ்டம்பிங் செய்து, இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா சாதனையை முறியடித்தார் தோனி.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி, ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையைச் செய்யும் முதல் வீரர் தோனிதான் என்பது குறிப்பிடத் தக்கது.