Thursday, July 20Dhinasari

தொழில்நுட்பம்

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

தொழில்நுட்பம், பொது தகவல்கள், வணிகம்
இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும். இவர்களது பிரச்னைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடாப்டர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இருப்பினும் இது எப்போது விற்பனைக்கு வரும்; விலை என்ன என்பது குறித்து முழுத் தகவலும் வெளியிடப் படவில்லை
எடப்பாடி மவுனச்சாமி ஆகக் கூடாது: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் விமர்சனம்

எடப்பாடி மவுனச்சாமி ஆகக் கூடாது: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் விமர்சனம்

சற்றுமுன், தமிழகம், துணுக்குகள், தொழில்நுட்பம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனச் சாமி ஆகக் கூடாது என்று அதிமுக., எம்.எல்.ஏ., வெற்றிவேல் விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக., கட்சியானது இரு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இது போதாதென்று, சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக., எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக கருத்து தெரிவித்து மூன்றாவது அணியாக செயல்பட்டு வருகின்றனர். இம்மூன்று அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என அதிமுக.,வினர், கட்சியினரைக் குழப்பும் விதத்தில், தனித்தனியே வெவ்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களில் பேசி வருகின்றனர். இதனிடையே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த அரக்கோணம் எம்.பி., கோ.அரி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, டிடிவி தினகரன் கட்

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி38

தொழில்நுட்பம், பொது தகவல்கள்
சென்னை: 29 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு 'பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. - சி 38 ராக்கெட் மூலம் 'கார்ட்டோசாட் - 2 செயற்கைக்கோளை இன்று காலை 9:29க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 5:29க்கு துவங்கியது. பூமியைக் கண்காணிக்கும் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 செயற்கைக்கோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அறிவியல் ரீதியில் சிறப்பான முன்னேற்றத்தை நாடு எட்டும் என அரசு மகிழ்ச்சி
லண்டன் தாக்குதலையடுத்து இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து சொன்ன பத்திரிகையாளர் பணி நீக்கம்!

லண்டன் தாக்குதலையடுத்து இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து சொன்ன பத்திரிகையாளர் பணி நீக்கம்!

உலகம், சற்றுமுன், தொழில்நுட்பம், பொது தகவல்கள்
ப்ரிட்பர்ட் தளத்தின் எடிட்டராகப் பணியாற்றும் கேத்தெ மெக்ஹக், லண்டன் தாக்குதலை அடுத்து குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளுக்காக பணி விலக நேர்ந்துள்ளது. அவர், முஸ்லிம்கள் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதமும் இல்லை என்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். மேலும், முஸ்லிம் குடியேற்றம், இஸ்லாம் குறித்து நான் சொன்ன உண்மைகளுக்காக, ப்ரிட்பர்ட் நியூஸ் என்னை பலிவாங்கியிருக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். Breitbart News fired me for telling the truth about Islam and Muslim immigration. https://t.co/IRAUOj6pIL #LondonBridge — Katie McHugh🇺🇸 (@k_mcq) June 5, 2017 சனிக்கிழமை அவர் பதிவிட்ட டிவிட்டரில், “இங்கிலாந்தில் முஸ்லிம்கள் இல்லை என்றால், இது போன்ற மோசமான பயங்கரவாத தாக்குதல்களும் இருக்காது” என்று கூறியிருந்தார். Pakistan: The gift that kee
விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து

விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா, சற்றுமுன், தொழில்நுட்பம்
புது தில்லி: இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கனரக கிரையோஜெனிக் இஞ்சினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி -மார்க் 3 ஜிசாட்-19 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஜிசாட்-19ஐ விண்ணில் நிலைநிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்
இன்று விண்ணில் பாய்கிறது கனரக ஜிஎஸ்எல்வி ஜிசாட்-19!

இன்று விண்ணில் பாய்கிறது கனரக ஜிஎஸ்எல்வி ஜிசாட்-19!

இந்தியா, சற்றுமுன், தொழில்நுட்பம்
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையம் - இஸ்ரோ, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜிஎஸ்எல்வி., மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டின் முதல் பயணம் திங்கட் கிழமை இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. மாலை 5:28க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. ஜூன் 5 திங்கள்கிழமை இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ள ஜிசாட்-19க்கான கவுன்ட்டவுன் நேன்று துவங்கியது. நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும்
2030-ல் பெட்ரோல் டீசலில் இயங்கும் கார்கள் இருக்காது!

2030-ல் பெட்ரோல் டீசலில் இயங்கும் கார்கள் இருக்காது!

சற்றுமுன், தொழில்நுட்பம்
வரும் 2030 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளியல் வல்லுநரான டோனி செபா என்பவர், 2020 முதல் 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து குறித்த மறுஆய்வு என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில், 2030-இல் எரிசக்திப் பொருள்களின் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திக் கொண்டும், பெட்ரோல் பங்க்கள் வெகுவாகக் குறைந்துவிடும். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் விலை வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல் டீசல் இவற்றின் பயன்பாட்டுக்கு மாற்று ஏற்பாடாக, தானியங்கி எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்க
இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்

இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்

சற்றுமுன், தொழில்நுட்பம்
நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிசார் என்ற புதிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. நாசா- இஸ்ரோ சிந்தடி அபர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கோள் மூலம் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடியும். இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் வரும் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம்

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம்

உலகம், தொழில்நுட்பம், பொது தகவல்கள்
லண்டன்: பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 122 மில்லியன் அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன். இது, இந்திய மதிப்பில் ரூ.773 கோடி ஆகும். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் போது தவறான தகவல்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. நிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்ட
அரசின் நெட்வொர்க்கையே பயன்படுத்துக: அலுவலகங்களுக்கு குஜராத் அரசு வலியுறுத்தல்

அரசின் நெட்வொர்க்கையே பயன்படுத்துக: அலுவலகங்களுக்கு குஜராத் அரசு வலியுறுத்தல்

இந்தியா, சற்றுமுன், தொழில்நுட்பம்
குஜராத் மாநில அரசு நிறுவியுள்ள மாநில அளவிலான கணினி நெட்வொர்க்கையே அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் பயன்படுத்த வேண்டுமென குஜராத் அரசு வலியுறுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலின் தீவிரத்தால் இந்த அறிவிக்கையை அரசு கொடுத்துள்ளது. நிதி தொடர்பான பிரிவுகளின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்கள் தொடர்வதால், குஜராத் அரசின் கீழ் இயங்கும் நெட்வொர்க்குகளில் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல மாவட்ட அலுவலக கணினிகளிலும் வைரஸ் பரவி வருகிறது. இதில் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காந்திநகர், கோத்ரா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், ஊழல் தடுப்பு துறைகள், மாவட்ட ஆட்சியர், பதிவாளர் அலுவலகங்கள், மண்டல போக்குவரத்துத் துறைகள், அரசு பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் வைரஸ் ஊடுருவியுள்ளது. எனவே, மாநில அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப நெட்வொர்க் அமைப்பான GSWAN ஐ மட்டுமே பயன்படுத