Thursday, July 20Dhinasari

துணுக்குகள்

எடப்பாடி மவுனச்சாமி ஆகக் கூடாது: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் விமர்சனம்

எடப்பாடி மவுனச்சாமி ஆகக் கூடாது: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் விமர்சனம்

சற்றுமுன், தமிழகம், துணுக்குகள், தொழில்நுட்பம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனச் சாமி ஆகக் கூடாது என்று அதிமுக., எம்.எல்.ஏ., வெற்றிவேல் விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக., கட்சியானது இரு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இது போதாதென்று, சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக., எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக கருத்து தெரிவித்து மூன்றாவது அணியாக செயல்பட்டு வருகின்றனர். இம்மூன்று அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என அதிமுக.,வினர், கட்சியினரைக் குழப்பும் விதத்தில், தனித்தனியே வெவ்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களில் பேசி வருகின்றனர். இதனிடையே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த அரக்கோணம் எம்.பி., கோ.அரி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, டிடிவி தினகரன் கட்
வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

உங்களோடு ஒரு வார்த்தை, துணுக்குகள், பொது தகவல்கள்
இது திரிபுபடாத வரலாறு. திரித்து எழுதப்படாத உண்மைச் சம்பவம். ஓர் ஆணவக் காரானின் வாழ்க்கைப் பின்னணியைக் கூறும் வரலாற்று ஆவணம். மொகலாய மன்னர் அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும். அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ஆனால் அக்பர் என்ற சராசரிக்கும் கீழான ஒரு மன்னனின் பின்னணியையும் தெரிந்து கொள்ளாதது நமது தவறு. சொல்லாதது அடிமை வரலாற்றாளர்கள் இம்மண்ணுக்குச் செய்துவரும் துரோகம். அக்பர் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேளா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவது வழக்கம். அந்த விழாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்வது அக்பருக்கு மிகவும் பிடித்த ஒன்று! ஆனால், தான் ஆண் என்பதால் எப்படி அதில் கலந்து கொள்வது? எனவே அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வாராம். வெறுமனே விழாவில் க
ஆதாருடன் குடும்ப அட்டையை இணைக்க…

ஆதாருடன் குடும்ப அட்டையை இணைக்க…

துணுக்குகள், பொது தகவல்கள்
தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை  நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது , அதை செய்யாதவர்கள். தங்கள்  ஸ்மார்ட்போனில்  Google app store ல் TNePDS என்ற  செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால்  ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை  அந்த செயலியில் போட்டுக்கொண்டால்  நமக்கு  நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode ஸ்கேன் செய்யும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின்  ஆதார் அட்டையும் பதிவு செய்யலாம்  , ,
திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்

துணுக்குகள்
திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டியுள்ளன இலங்கை மாணவர்கள் அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தமது சித்திர பாட ஆசிரியருடன் களப்பயணம் சென்றுள்ளனர். இதன்போது ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றை பார்வையிட்ட பின் பள்ளி வாசல் ஒன்றை பார்வையிட சென்றுள்ளனர். ஆனால் அங்கு நின்ற பள்ளி வாசல் நிர்வாகி ஒருவர் நீங்கள் உங்கள் நெற்றியில் உள்ள திருநீற்றினை அழித்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சில மாணவர்கள் அதனை அழிக்க தயாரானதை கண்ட ஒரு மாணவன் "யாரும் விபூதியை அழிக்க வேண்டாம் எல்லோரும் வாகனத்தில் ஏறுங்கள். விபூதியை அழித்து அந்த இடத்தை பார்க்கும் அவசியமில்லை " என்று உரக்கச் சொன்னதும் மாணவர்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் வாகனம் நோக்கி திரும்பினார். நிலமை மீறிச் செல்வதை உணர்ந்த நிர்வாகி நீங்கள் அதனை அழிக்க வேண்டாம் உள்ளே

“காரடையார் நோன்பு 15-03-2015-புதிய தகவல்கள்.

துணுக்குகள், பொது தகவல்கள்
காரடையான் நோன்பு 15-03-2015 ஞாயிறு சுமார் காலை 04-05 முதல் 05-10 வரை. சில புதிய தகவல்கள் (வலை மற்றும் சில புத்தகம்) அன்று முழுவதும் மோர் சாப்பிடக்கூடாது. "ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வர்" சரடு கழுத்தில் கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்: தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம் ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3 ஸ்லோகத்தின் அர்த்தம்: ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும். கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெ
“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!”

“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!”

துணுக்குகள், நகைச்சுவை
"என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!" ENGINEERING படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்… ENGINEER: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..? விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்... ENGINEER: நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..? விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்... ENGINEER: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..? விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெ

கும்பகோணம் கடப்பா!

துணுக்குகள்
“ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் விரும்பி சாப்பிட்ட கும்பகோணம் கடப்பாவின் மற்றொரு ரெசிபி.” “கும்பகோணம் கடப்பா [5 பேருக்கு]” எதேச்சையாக 4-7-99 கதிர் ஒரு பக்கம் எனக்கு கிடைத்தது. கட்டுரையாளர் பேர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் பெரிய சமையல்காரர். ஒரு தடவை குருஜி [ஹரிதாஸ்கிரி] அவரது குருநாதர் ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனையை நடத்த நினைத்தார்.அவரது கட்டளையை ஏற்று ஆராதனைக்கு தர்மப்ரகாஷ் முதலாளி, இடம் மற்றும் சகல வசதிகளையும் செய்து தந்தார். சுமார் 3000 பேர் சாப்பிட்ட ஆராதனைக்கு நான்தான் சமையல் ரவா சொஜ்ஜியும்,வெண் பொங்கலும் செய்தேன். இந்த ஐட்டங்களுடனே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ரவாதோசையும் அதற்கு தொட்டுக் கொள்ள கும்பகோணம் கடப்பாவும் செய்தேன். இந்தக் கடப்பா குருஜிக்கு மிகவும் பிடித்தமானது. இது இட்லி,தோசை,ரவா தோசை,ஊத்தப்பம்,பூரி,வடை போன்றவற்றுக்குப் பக்க மேளமாக அமையும். செய்முறை+தேவையான

தினமணி: பத்திரிகை வரலாறில் ஒரு விநோதம்!

துணுக்குகள்
தினமணி நாளிதழ் துவக்க வரலாற்றில் ஒரு புதுமை, வித்தியாசம், விநோதம்... என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அது என்ன விநோதம் என்றால்... முதல் நாள் இதழ் வெளிவந்து அந்நாளே பத்திரிகை அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதுதான். அநேகமாக முதல் நாள் இதழ் வெளிவந்த அன்று, மாலை அலுவலகத்தில் அன்றைய முதல் பத்திரிகையை பார்த்திருக்க அலுவலகப் பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று தோன்றுகிறது. தமிழர்க்காக தமிழர் நடத்தும் நாளிதழ் என்ற கொள்கை முழக்கத்துடன் துவங்கியது தினமணி. ஆசிரியர்- தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் (நானும் அந்த ஊருதானுங்கோ).பாரதி தினத்தில் செப்.11 அன்று (1934ம் வருடம்) துவக்க விழா கண்டு முதல் இதழ் வெளியானது. முதல் நாள் தலையங்கத்தில் பாரதி குறித்த நினைவு அஞ்சலி, செய்தி, பாரதி விழா குறித்த செய்திகள் எல்லாம் வந்துள்ளன. (தொடர்ந்த வருடங்களில் - செப்டம்பர் 11ம் தேதியை ஒட்டி ஓரிரு நாட்

தினமணி: பத்திரிகை வரலாறில் ஒரு விநோதம்!

துணுக்குகள்
தினமணி நாளிதழ் துவக்க வரலாற்றில் ஒரு புதுமை, வித்தியாசம், விநோதம்... என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அது என்ன விநோதம் என்றால்... முதல் நாள் இதழ் வெளிவந்து அந்நாளே பத்திரிகை அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதுதான். அநேகமாக முதல் நாள் இதழ் வெளிவந்த அன்று, மாலை அலுவலகத்தில் அன்றைய முதல் பத்திரிகையை பார்த்திருக்க அலுவலகப் பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று தோன்றுகிறது. தமிழர்க்காக தமிழர் நடத்தும் நாளிதழ் என்ற கொள்கை முழக்கத்துடன் துவங்கியது தினமணி. ஆசிரியர்- தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் (நானும் அந்த ஊருதானுங்கோ).பாரதி தினத்தில் செப்.11 அன்று (1934ம் வருடம்) துவக்க விழா கண்டு முதல் இதழ் வெளியானது. முதல் நாள் தலையங்கத்தில் பாரதி குறித்த நினைவு அஞ்சலி, செய்தி, பாரதி விழா குறித்த செய்திகள் எல்லாம் வந்துள்ளன. (தொடர்ந்த வருடங்களில் - செப்டம்பர் 11ம் தேதியை ஒட்டி ஓரிரு நாட்