Thursday, July 20Dhinasari

சுற்றுலா

பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

சுற்றுலா, பொது தகவல்கள், வணிகம்
  பொதிகை மலை என்பது மேற்குத் தொடா்ச்சி மலைகளில்  தென்பகுதியில் ஆனை மலைத் தொடரில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையின் ஒருபகுதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டில் மட்டுமே பாயும் முக்கிய நதியான தாமிரபரணி ஆறுஉருவாகிறது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகை மலை என்றும் கூறுவர். சங்ககாலத்தில் வையை என அழைக்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் அழைப்பது போன்றது இது. வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். அகத்தியர் வாழ்ந்த, தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.  தமிழ்இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் ப
கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

சுற்றுலா
கடலூர் கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் பிறந்த வடலூர் என பல சிறப்புகள் உண்டு. சிதம்பரம் சிதம்பர ரகசியம் தெரியாதவர்கள் உண்டா! சிதம்பரம் நடராசர் நாட்டியக் கலையின் கடவுள். இந்த பிரமாண்டக் கோயிலில் உள்ள நடனச் சிலைகள் ஒயிலும் எழிலுமாய் அழகுற அமைந்துள்ளன. தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான். இந்த அடைமொழிக்குப் பொருத்தமாக நடராசர் ஆலயத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து பொலிவூட்டினான் பராந்தகச் சோழன். தொலைபேசி - 04144 222696 காட்டு மன்னார்குடி சிதம்பர
அரியலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

அரியலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

சுற்றுலா
அரியலூர் அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு முன்னணி சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குதான் அமைந்துள்ளன. கங்கைகொண்ட சோழபுரம் கங்கை அரசர்களை வெற்றி கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம். இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந
கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்

கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்

சுற்றுலா
கோவை மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர். கொங்குநாடு சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கி.பி. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் வந்தது. அதன்பின் பொறுப்புக்கு வந்த கோவன்புத்தூர் என்னும் சிற்றரசன் காடு மலிந்திருந்த இவ்வூரை திருத்தி அழகிய நகராகச் செம்மைப்படுத்தினான். அவன் பெயரிலேயே கோயம்புத்தூர் என்று மக்கள் அன்போடு அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. முதன் முதல் இந்நகரத்திற்கு கி.பி. 1888 இல் தான் ஒரே ஒரு துணி ஆலை வந்தது. இன்று எங்கு நோக்கினும் ஆலைகள். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்றும் அழைக்கப்படுகிறது. ஆனைமலை விலங்குகள் சரணாலயம் காட்டில் விலங்குகளைப் பார்ப்பதற்கும், சர்க்கஸ் கூண்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இரு
சென்னை மாவட்ட சுற்றுலா தலங்கள்

சென்னை மாவட்ட சுற்றுலா தலங்கள்

சுற்றுலா
சென்னை அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது. அண்ணாநகர் கோபுரம் முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணா
வேலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

வேலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

சுற்றுலா
வேலூர் வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும் ஓடுகின்றன . வேலுhர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வேலூர் கோட்டை பழமையின் சான்றாக கம்பீரமாக இருக்கிறது வேலூர் கோட்டை. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம் இது. வேலூர் என்றதும் சட்டென மனத்தில் நிழலாடும் கற்கோட்டை இது. கோட்டைச் சுவர்கள் உட்பொருந்தும் செங்கோணக் கற்களில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடக் கலை நுட்பம் ஆங்கிலேயர்களின் பொறியியல் பாணியை நினைவூட்டுகின்றன. கோட்டையின் பிரதான சுவர் கருங்கற்களால் ஆனது. சுவரில் சா
பாலைவனத்தின் ஒரு வைரக் கிடங்கு! பால்நிலாவில் பதுங்கிய எரிமலை!

பாலைவனத்தின் ஒரு வைரக் கிடங்கு! பால்நிலாவில் பதுங்கிய எரிமலை!

சுற்றுலா
பயணம் என்றால் பொதுவாக ஒன்றை மட்டும்தான் கவனிப்போம்.. அங்கு இயற்கையோடு கலந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமில்லாமல், மனதுக்கு சுகமாகவும் இருக்குமா என்றுதான் பாப்போம் !!.. நம் நாட்டைப் பொறுத்தவரை பயணம் இனிமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே... நானும் அப்படிதான். ஆனால் த்ரில் குறைவுதான். யார் நினைத்தாலும் வந்து பார்க்க முடியாத இந்த இடத்திற்கு வந்தது கடவுளின் வரப்ரசாதம்என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நானும் உணர்கிறேன்! உலகில் பல இடங்களைச் சுற்றி வந்திருந்தாலும், இந்த ஒரு இடத்தைப் பற்றி மட்டுமே என் மனது அவ்வளவு ஆழ்ந்திருந்தது, அதை எழுதவும் தூண்டியது. அது பலர் கண்களுக்கு வெறும் மண்ணும் கல்லுமாகத்தான் தெரியும். ஆனால் அதுதான் நம் உடம்பின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்த உருவம் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்? நான் வசிக்கும் சவுதி அரேபியாவில், இந்தப் புகழ் வாய்ந்த " அல் வாபா எரிமலையை "
காதலில் கசிந்துருக ஓர் இடம்   

காதலில் கசிந்துருக ஓர் இடம்  

சுற்றுலா
  காதலர்களுக்கு பிடித்த மாதம் என்றால் அது ஃபிப்ரவரிதான். அந்த மாதத்தில் தான் 'காதலர் தினம்' வருகிறது. காதலர்களுக்கு மட்டுமல்ல புதுமண தம்பதிகளுக்கும் அதுதான் பரவசம் தரும் மாதம்! பூக்கள் பூத்து குலுங்குவது அந்த மாதத்தில்தான்...! குளிரின் தாக்கம் குறைந்து கத கதப்பான பருவத்தை காலம் எதிர் நோக்குவதும் அந்த மாதத்தில்தான்...! அதனால்தான், ஃபிப்ரவரி மாதம் காதலுக்கு ஏற்றதாக இருக்கிறது. புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகள் பலர் என்னிடம் ஹனிமூன் செல்ல தோதான இடம் பற்றி கேட்பார்கள். எனது வேலையே ஊர் சுற்றுவதுதான் என்பதால் இதற்கான விடையை என் மூலம்  தேடுவார்கள். நானும் முடிந்த அளவு நல்ல இடமாக சொல்வேன். அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் ஒரு இடத்திற்கு தான் இப்போது நான் போய்கொண்டிருக்கிறேன். தேனி மாவட்டத்தில் கூடலூர் பக்கத்தில் கழுதைமேடு என்ற இடம்தான் அது. அங்குள்ள'ஹார்வெஸ்ட் ஃபிரெஷ் ஃபார்ம்'
உயரத்தில் ஓர் உலா

உயரத்தில் ஓர் உலா

சுற்றுலா
    ஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது. அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது
ராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

ராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

சுற்றுலா
    குலும்பன், குலும்பி தம்பதி   பட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.   தமிழ்நாடு - கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.   18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்     அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பா